அச்­சி­டப்­பட்ட செய்தித்தாள் மற்றும் இதர அச்­சுத்­தாள்­க­ளினால் உணவுப்பொருட்­களை சுற்றிவழங்கும் வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென நுகர்வோர் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இது குறித்து நுகர்வோர் குறிப்­பி­டு­வ­தா­வது,
ஒரு சில ஹோட்­டல்­க­ளிலும், உண­வுப்­பொருள் விற்­பனை நிலை­யங்­க­ளிலும் உண­வுப்­பொ­ருட்கள் வழங்கப்படும்போது அச்­சி­டப்­பட்ட செய்­தித் தாள் மற்றும் இதர அச்­சி­டப்­பட்­ட­ தாள்­க­ளினால் சுற்றி வழங்­கப்­ப­டு­கின்றன. இவ்­வாறு அச்­சி­டப்­பட்ட தாள்­க­ளினால் சுற்­றப்­பட்ட உண­வுப்­பொ­ருட்­களை உட்­கொள்­வதனால் உடல் ஆரோக்­கியம் பாதிக்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு மக்­களை அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றது.
அச்­சி­டப்­பட்ட தாள்­க­ளினால் உண­வுப்­பொ­ருட்­களைச் சுற்றி வழங்­கு­வது தடைசெய்­யப்­பட்­டுள்­ளது என சுகா­தார அமைச்சு அறி­வித்தல் விடுத்­துள்ள போதிலும் அவ்­வ­றி­வித்­தலைக் கவ­னத்­திற்­கொள்­ளாது ஒரு சில வர்த்­த­கர்கள் தொடர்ந்தும் இவ்­வாறு செயற்­ப­டு­வது தொடர்பில் குறித்த வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சுகா­தா­ர முறையில் மக்­க­ளுக்கு உண­வுப்­பொ­ருட்கள் கிடைப்­பதை உறுதி செய்ய வேண்­டு­மெ­னவும் நுகர்வோர் கோரிக்கை விடுக்­கின்­றனர்.
இதே­வேளை, உண­வுப்­பொ­ருட்­களை அச்­சி­டப்­பட்ட தாள்­க­ளினால் சுற்றி நுகர்­வோ­ருக்கு வழங்­கு­வதைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு வர்த்­த­கர்­களை தேசிய வைத்­தி­ய­சா­லையின் நஞ்­சியல் தகவல் நிலையம் கடந்த காலங்­களில் அறி­வித்­தி­ருந்­தது.
இவ்­வாறு அச்­சி­டப்­பட்ட செய்­தித்­தாள்­களை உண­வுப்­பொ­ருட்­களைச் சுற்றி வழங்­கு­வ­தற்கு பயன்­ப­டுத்­து­வ­தா­னது நுகர்­வோ­ருக்கு சுகா­தாரக்கேடு­களை ஏற்­ப­டுத்தக்கூடும். ஏனெனில் அத்­தாள்­க­ளி­லுள்ள மையில் நச்­சுத்­தன்மை வாய்ந்த இர­சா­யனக்கூறுகள் காண ப்­ப­டு­கின்­றன. எண்­ணெ­ய்யுடன் மீன், இறைச்சி மற்றும் இதர உணவுப் பொருட்­களை அச்­சி­டப்­பட்ட செய்­தித்­தாள்­க­ளினால் சுற்­று­கின்­ற­போது அச்சு மையி­லுள்ள குறைந்­த­ளவு நஞ்­சுத்­தன்­மை­யுள்ள இர­சா­யனப் பதார்த்­தங்கள் எண்­ணெய்­யுடன் கலந்து உணவுப்பொருட்­க­ளினுள் செல்­கி­ன்றன. அவ்­வுணவுப் பொருட்­களை நுகர்வோர் உண்­ப­தனால் அவர்கள் சுகா­தாரக் கேடு­க­ளுக்கு உள்ளாக நேரிடலாம்.
இதன் காரணமாக இத்தகைய உணவுப்பொருட்களை அச்சிடப் பட்ட செய்தித்தாள்கள் மற்றும் இதர தாள்களினால் சுற்றி நுகர்வோ ருக்கு வழங்குவதை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு நஞ்சி யல் தகவல் நிலையம் ஆலோசனையும் வழங்கியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.