இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20:20 போட்டி  இன்று

Published By: Vishnu

24 Jan, 2020 | 11:15 AM
image

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி அக்லாந்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 இருபதுக்கு - 20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையடவுள்ளது.

இந் நிலையில் முதலில் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு - 20 தொடரின் முமதல் போட்டி இன்றைய தினம் அக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் பிற்பகல் 12.20 ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளமையினால் அதற்கு தயார்படுத்திக் கொள்வதற்கும், சரியான அணியை அடையாளம் காண்பதற்கும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை ஒரு நாள் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு இந்திய அணி நியூசிலாந்தில் கால்பதித்துள்ளது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் காயத்தால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகி விட்டதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். 

இளம் விக்கெட் காப்பாளரான ரிஷாப் பந்த் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பந்து தாக்கி காயமடைந்த போது எஞ்சிய இரு ஆட்டங்களிலும் விக்கெட் காப்பு பணியை லோகேஷ் ராகுல் கவனித்தார். 

இதனால் கூடுதலாக ஒரு துடுப்பாட்ட வீரரகை சேர்க்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் விக்கெட் காப்பாளர் பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய கேப்டன் விராட் கோலி முதல்முறையாக நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளார். 

இன்னும் 81 ஓட்டங்கள் எடுத்தால் தலைவராக சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.

நியூசிலாந்து அணி அண்மையில் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததும், அதில் அந்த அணி வீரர்களின் மோசமான துடுப்பட்டமும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு முன்பாக சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இங்கிலாந்திடம் 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கும் நியூசிலாந்து அணிக்கு சொந்த நாட்டில் ஆடுவது சாதகமான அம்சமாகும். 

முன்னணி பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டாலும், அதை சமாளிக்க அனுபவம் வாய்ந்த டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர், சோதி உள்ளிட்டோர் உள்ளனர்.

பேட்டிங்கில் நியூசிலாந்து வலிமைமிக்கதாக திகழ்கிறது. மார்ட்டின் குப்தில், கொலின் முன்ரோ, அணித் தலைவர் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், செய்பெர்ட் பேட்டிங்கில் அசத்தக்கூடியவர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07