நிந்தவூரில் வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 09:01 PM
image

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று(23) மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த வீதி விபத்தின் போது நிந்தவூர்ப் பிரதேசத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் அல்லிமூலைப் பிரதேசத்திலிருந்து அட்டப்பள்ளம் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம்; அறுவடையில் கிடைத்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அட்டப்பள்ளம் மத்திய வீதிக்குச் செல்வதற்கென பிரதான வீதியினைக் கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதுண்டதனால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். குறித்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞருக்கு கால்ப் பகுதியில் உடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த உழவு இயந்திரத்தின் டயர் வெடித்து சிதைவடைந்தமையால் இப்பிரதேசத்தின் போக்குவரத்துகள் சிறிது நேரம் ஸ்தம்பித நிலை அடைந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறைப் பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11