வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற உள்ளூராட்சி அமைச்சும் அதன்கீழான திணைக்களங்களுக்குமான துறைசார் கூட்டம் 

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 07:59 PM
image

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று  உள்ளூராட்சி அமைச்சும் அதன்கீழான திணைக்களங்களுக்குமான துறைசார் கூட்டம் வடக்குமாகாண ஆளுநர்  பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

Related image

வடக்கு மாகாண சபையின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா , உள்ளுராட்சி , மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி , வீதி அபிவிருத்தி , மோட்டார் போக்குவரத்து, மற்றும் போக்குவரத்து அமைச்சக பணிப்பாளர்கள் , செயலாளர்கள், துணைத்தலைவர்கள், உயரதிகாரிகள், துறைசார்ந்த அதிகாரிகள், இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் வருவதற்கு முன்னேரே சகல திணைக்களங்களும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் திணைக்களங்களின் தயார்ப்படுத்தலில் உள்ள தாமதங்களால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வடக்குமாகாணம் இழப்பதே வாடிக்கையாகிவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பது தொடர்பில், விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான, திட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, புனரமைப்பு பணிகளை விரைவாக்குமாறு, அதிகாரிகளுக்கு, வடக்குமாகாண ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

வடக்குமாகாணத்தில், பொருத்தமான இடங்களில் ஓய்வெடுக்கக்கூடிய, அல்லது தரித்துநின்று இளைப்பாற, மலசலகூட வசதிகளுடனும், குடிநீர் வசதிகளுடனும், வாகன தரிப்பிடங்களை அமைக்குமாறும் ,ஆளுநர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து இன்று மாலை அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு சென்ற வடக்குமாகாண ஆளுநர் அங்கிருக்கும் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.

கைத்தொழில் பேட்டைக்கு சொந்தமான இடங்களில் புதிதாக முன்னெடுக்கக்கூடிய தொழில் முயற்சியாளர்களைக் கவரக்கூடிய வகையில் பரிந்துரை திட்ட வரைபுகளையும் ஏனைய விபரங்களையும் விரைவாக சமர்பிக்கும்படியும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் .

இந்த விஜயத்தின்போதும் ஆளுநரின் செயலாளர் இணைப்புச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளரும் கௌரவ வடக்கு மாகாண ஆளுநருடன் இருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46