ஷாருக்கனை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - கம்மன்பில

Published By: Vishnu

23 Jan, 2020 | 04:57 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஷாருக்கானை  இலக்கு வைத்து இலங்கையில் நடத்திய குண்டுத்தாக்குதல் குறித்த இரகசியங்கள் என எனக்கு எதுவுமே தெரியாது என ஆளும் தரப்பு எம்.பியான உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தாவர வனவிலங்கினப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவற்றைக் கூறினார். 

ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தந்த வேளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து எனக்கு இரகசியங்கள் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறினார். 

இவ்வாறு அவர் கூறியதை  அடுத்து ஷாருக்கான் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது நானென  சிலர் நினைத்துவிட்டனர். முகப்புத்தகத்தில் அவ்வாறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் ஷாருக்கானை இலக்கு வைத்து நடத்தியதாக கூறப்படும் குண்டுத்  தாக்குதலில் சாதாரணமாக அனைவருக்கும் என்ன தெரியுமோ, காதுகளில் என்ன கதைகள் கேட்டதோ அதுமட்டுமே எனக்கும் தெரியும். அதைத் தாண்டிய இரகசியங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14