கடல் நுரையில் மூழ்கிய ஸ்பெயின் நகரம்

Published By: Daya

23 Jan, 2020 | 04:56 PM
image

ஸ்பெயின்  - கேட்டலோனியா கடற்கரை பகுதியிலுள்ள நகரம் இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

ஸ்பெயின்  - குளோரியா புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அங்கு மழை, பனி, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள நகரங்களில் சூறைக்காற்று சுழன்றடித்தது வருகிறது.

இந்த புயல் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போய் உள்ளனர் இந்நிலையில், வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.  அத்துடன் 30 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனபடுத்தப் பட்டுள்ளது.


இந்நிலையில் கேட்டலோனியா பிராந்தியத்தில், கடற்கரையை ஒட்டியுள்ள டாசா டெல் மார் நகரில் சூறைக்காற்று காரணமாக வீதிகள் முழுவதும் கடல் நுரையால் சூழப்பட்டுள்ளது. மழை வெள்ளம் போன்று கடல் நுரை சூழ்ந்ததால், பொதுமக்கள் தெருவில் இறங்கிச் செல்ல முடியாத நிலை ஏற் பட்டது. 


கடல் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் உருவாகும் இந்த நுரை, பொதுவாகப் பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.
 ஆனால், தற்போதுள்ள நுரையில் உள்ள பாசியின் அளவைப் பொருத்து, அவை காற்றில் பரவும் நச்சுகளை வெளியிடலாம் என்பதால், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படும் என அமெரிக்கத் தேசிய பெருங்கடல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17