எச்சரிக்கைக்கு அமையவே முப்படையினரை அனைத்து மாவட்டங்களுக்கும்  ஜனாதிபதி அனுப்பியுள்ளார் - பந்துல

Published By: R. Kalaichelvan

23 Jan, 2020 | 04:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய  பாதுகாப்பு  தொடர்பில் அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. புலனாய்வு பிரிவின் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமையவே ஜனாதிபதி  அனைத்து நிர்வாக பிரதேசங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தியுள்ளார் என அமைச்சர் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர்  நியமிக்கப்படாமை பெரிய குறைப்பாடலல்ல.தேசிய  பாதுகாப்பினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரை ஈடுப்படுத்தியுள்ளார்.

எமது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை  கொடுக்கப்படும், அதற்கான தேவையும் காணப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக  வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி,பிரதமர், பாதுகாப்பு  செயலாளர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மாத்திரமே  கலந்துக்  கொள்வார்கள்.

பாதுகாப்பு சபை  கூட்டத்தின் இரகசிய தீர்மானங்கள் பகிரங்கப்படுத்தப்படாது. அதற்கான நடவடிக்கைகள் மாத்திரமே  முறையாக மேற்கொள்ளப்படும். கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களை கொண்டு ஜனாதிபதி பாதுகாப்பினை   பலப்படுத்தியுள்ளார்.

இது ஏற்றுக் கொள்ள  வேண்டிய விடயம்.

பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாத விடயத்தை எதிர் தரப்பினர்  அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர், இராஜாங்க  அமைச்சர்,  பாதுகாப்பு செயலாளர்கள் ஆகியோர்  நியமிக்கப்பட்டிருந்தும்.  முன்னறிவித்தல் விடுக்கப்பட்ட ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை  தவிர்க்க முடியவில்லை.

தேசிய பாதுகாப்பு விடயங்கள் அரசியல் தேவைகளுக்கா  பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

இதன் காரணமாகவே பாரிய விளைவு ஏற்பட்டன இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது.நாட்டு மக்களின்  நலனை  கருத்திற்  கொண்டே ஜனாதிபதி   பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை  எடுக்கின்றார். பாதுகாப்பு  சபையின் தீர்மாங்களை கேள்விக்குற்படுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54