ஊடகவியலாளர்களும் வைத்தியர்களும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்..!: தேர்தல் ஆணைக்குழு

Published By: J.G.Stephan

23 Jan, 2020 | 04:07 PM
image

எதிர்வரும் காலங்களில், தபால் மூல வாக்களிப்பு சட்டம் உள்ளிட்ட தேர்தல் சட்டங்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ரி.ஹேரத் தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பிலான பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் கூறினார்.

இதில் முதற்கட்டமாக ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் அடங்கலாக அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கும் வசதியான முறையில் வாக்களிக்கக்கூடிய புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெறாத அல்லது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு அல்லது ஏனைய பொருத்தமாக மாற்று நடவடிக்கை தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கல் மற்றும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான திருத்தங்களுக்குமான சட்ட திருத்தம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் , இத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நோக்கமாகும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08