அனைவருக்கும் இலவச இணைய வசதி தேவை - சுந்தர் பிச்சை

Published By: Digital Desk 3

23 Jan, 2020 | 04:36 PM
image

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான, வெளிப்படையான இணைய இணைப்பு தேவை என கூகுள் மற்றும் அல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவிக்கையில், உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவச இணைய வசதி வேண்டும். அனைவருக்கும், இலவச மற்றும் வெளிப்படையான இணையம் தேவை என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தரவு இறையாண்மையும் முக்கியமானது. அது, பாதுகாக்கப்பட வேண்டும். இணையம் என்பது, உண்மையில் ஒரு ஏற்றுமதி தயாரிப்பாகும். 

இந்தியாவில், ‘யூடியூப்’பில் ஒருவர் வீடியோவை உருவாக்கினால், அது உலகம் முழுவதிலிருந்தும் பார்வையாளர்களைப் பெறுகிறது. இது தான், ‘டிஜிட்டல்’ பொருளாதாரத்தின் அழகு. ஆரம்ப காலத்தில் நான் ஒரு தொலைபேசி அல்லது தொலைக்காட்சிக்காக காத்திருக்க வேண்டியதிருந்தது. இந்த சாதனங்கள் என் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு முறையும், தொழில்நுட்பம் நம் வாழ்வில் எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை கண்டேன்.

இப்போது, செயற்கை நுண்ணறிவு எப்படி மருத்துவம், வானிலை உள்ளிட்டவற்றில், சிறந்த ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை காண்கிறேன். செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு மூலம் பாதுகாப்பை பெற முடியாது.

அதற்கு, உலகளாவிய கட்டமைப்பு தேவை. இதற்கு, அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்  என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26