பொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர 

Published By: J.G.Stephan

23 Jan, 2020 | 03:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைவர் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறும். இதன் போது ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி ' மற்றும் அதன் சின்னம் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும். பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியளவில் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் நடைபெற்றது. அதன் போது அடுத்த வாரம் மீண்டும் கட்சி தலைவர் கூட்டத்தைக் கூட்டி ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி ' கூட்டணியமைத்தலில் காணப்படும் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார். அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்கிழமை கட்சி தலைவர் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதியளவில் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வும் வழங்கப்படும். 

சந்திரிகா விவகாரம்

கேள்வி : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சட்டரீதியற்ற முறையிலேயே தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதே ?

பதில் : கட்சியொன்றில் தொகுதி அமைப்பாளர் பதவியை நீக்குவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தொகுதி அமைப்பாளராக ஒருவரை நியமிப்பதற்கு எவ்வாறு கட்சி தலைவருக்கும் அதிகாரம் இருக்கிறதோ அதே போன்று அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரமும் கட்சி தலைவருக்கு உண்டு. எனவே இதனை பாரிய பிரச்சினையாகக் கருதத் தேவையில்லை. 

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் விவகாரம் 

கேள்வி : ரஞ்சன் ராமநாயக்க சில தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகக் கூறியிருந்த போதிலும் இதுவரையில் சமர்பிக்கவில்ல. இவ்விவகாரம் குறித்து உங்கள் நிலைப்பாடு ? 

பதில் : ரஞ்சன் ராநாயக்கவின் குரல் பதிவுகளால் நாட்டின் நீதித்துறை , பாராளுமன்றம் மற்றும் பாதுகாப்புத்துறை என்பன பாரிய நெருக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளன. மக்கள் மத்தியில் நீதித்துறை மீது காணப்படும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17