முன்னாள் ஜனா­தி­ப­தியும் நிதி­ய­மைச்­ச­ரு­மாக செயற்­பட்ட மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் அனு­மதி பெறாது 1.2 ரில்­லியன் ரூபாவை வெளி­நாட்டுக் கட­னாக பெற்­றமை தொடர்பில் நிதி குறித்த பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு­விடம் அறிக்கை கோரப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும் நிதி­ய­மைச்­சரும் தற்­போ­தைய குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரா­கவே நம்­பிக்­கையில் லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அவரை ஒரு­வார காலத்­திற்கு விடு­மு­றை­ய­ளித்து உகண்­டா­வுக்கு அனுப்பி வைக்க வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட் டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு அணி­யான ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வ­தற்கு நாட்டில் உள்ள நல்­லாட்­சியே கார­ண­மாகும். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் நிதி அமைச்­ச­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே இருந்தார். அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தி­ருக்க முடி­யுமா? தற்­போ­தைய ஆட்­சியில் நிதி அமைச்சர் ஜனா­தி­ப­தி­யாக இல்­லா­ததன் கார­ணத்­தா­லேயே உங்­களால் இவ்­வாறு பிரே­ரணை கொண்­டு­வர முடி­கின்­றது. எதி­ராக பேச முடி­கின்­றது. இந்­நாட்டில் காணப்­படும் சட்­டங்­களை பாரா­ளு­மன்ற அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தை பெறாது மறைத்து 1.2 ரில்­லியன் நிதியை வெளி­நாட்டுக் கட­னாக பெற்றுக் கொண்ட முன்னாள் ஜனா­தி­ப­தியும் நிதி அமைச்­ச­ரு­மாக செயற்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை அப்­போது கொண்டு வந்­தி­ருக்க வேண்டும். அவ்­வாறு செய்­யாது இருந்­தார்கள். குறித்த கடன் பெற்றுக் கொண்­டமை தொடர்­பாக நிதி குறித்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­விடம் அறிக்­கை­யொன்றைக் கோர­வுள்ளேன்.

அதே­நேரம் தற்­போது நிதி அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வந்­துள்­ளீர்கள். இதில் மஹிந்த ராஜபக் ஷ ஏன் கைச்­சாத்­தி­டவில்லை. அவர் ஏன் இந்த விவா­தத்தில் கலந்து கொள்­ள­ வில்லை?. அவர் இந்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு எமது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யுமா? தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வுள்ள மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு­வார கால விடு­முறை வழங்கி உகண்­டா­வுக்கு தான் அனுப்பி வைக்க முடியும்.

நாங்கள் மக்­களின் பணத்தை திரு­ட­வில்லை. டுபாயில் பணத்தை வைப்­பி­லி­ட ­வில்லை. லம்­போ­கினி கார்­களை இறக்­கு­மதி செய்­ய­வில்லை. தமது குடும்­பத்­தி­ன­ருக்கு விசு­வா­ச­மா­ன­வர்­களும் கடந்த ஆட்சி காலத்தில் மிதி­ப­ல­கையில் பயணம் செய்­த­வர்­களும் தான் எம்மை விமர்­சித்­த­வாறு உள்­ளனர். தொடர்ந்தும் நாச­கார குழு­வாக செயற்­ப­டு­வதை விடுத்து எம்­முடன் இணைந்து மக்­க­ளுக்கு பணி­யாற்ற முன்­வர வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன வெளி­நாட்டு விஜ­யங்­களின் போது பல்­வேறு பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்று மானி­யங்கள், நிதி­யு­த­வி­களை தாரா­ள­மாக பெற்று வரு­கின்றார்.

கடந்த நான்கு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக 4 பில்­லியன் ரூபா நிதி­யுடன் தான் நாட்­டுக்கு வந்­தி­ருந்தார்.பொது எதி­ரணி எனக் கூறிக்­கொண்­டி­ருக்கும் உங்­களில் உள்ள சுதந்­திரக் கட்­சிக்­கா­ரர்கள் அவ்­வாறு நிதி­யு­தவி கிடைக்­க­வில்­லை­யென எழுந்து நின்று கூறு­வீர்­களா?

சர்­வ­தேச நாடுகள், சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி என பல தரப்­புகள் எமது நாட்­டுக்கு நிதி உத­வி­ய­ளிப்­ப­தற்கும் முத­லீ­டு­களை மேற்­கொள்­ளவும் முன்­வந்­துள்­ளன. எனவே நீங்கள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றீர்­களா? அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றீர்­களா என்ற சந்­தேகம் காணப்­ப­டு­கின்­ றது.

நீங்கள் பொது எதிரணியினர் எனக் கூறி தொடர்ந்தும் துரோகிகளாகவே இருக்க விரும்புகின்றீர்களா? நீங்கள் தற்போது கூட எம்முடன் இணைந்து செயற்பட முடியும். நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு காரணமாக பத்திரிகை செய்தியொன்றை காட்டுமளவுக்கு வங்குரோத்தான நிலை யிலேயே உள்ளீர்கள். உங்கள் பிரேரணையை இலகுவாக தோற்கடிப்போம். அத்தோடு எமது அரசாங்கம் பொருளாதார ரீதியான உரிய இலக்குகளை அடைவது உறுதி என்றார்.