மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை - எச்சரிக்கையாய் இருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 02:18 PM
image

பாடசாலை மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருள் உட்பட இன்னும் பல போதை மாத்திரைகளும் பானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் இந்த விடயத்தில் விழிப்பாயிருக்குமாறு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம் பெற்றுவரும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று வியாழக்கிழமை 23.01.2020 கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி, 

மேலும் கூறியதாவது,

ஏறாவூர் நகரிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மாணவர்களையும், இள வயதினரையும் இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை செய்யும் நடவடிக்கைகளை சமூக விரோதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இது மிகவும் அபாயகரமானது, என்பதோடு எதிர்கால இளஞ்சமூகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையாகவும் இதனை எச்சரிக்கையோடு நோக்க வேண்டியுள்ளது.

ஏறாவூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஏறாவூர் நகரிலுள்ள மருந்துக்கடை உரிமையாளர்கள், அதன் ஊழியர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15