வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறையலாம்

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 12:38 PM
image

இரு வார காலப்பகுதிக்குள் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்,  மேலும் குறைவடையும் என, உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

Image result for வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின்

பொருட்களின் விலைகள்  குறித்து, மக்களின் முறைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு கொழும்பு, 4 ஆம் குறுக்குத்தெருவில் அமைச்சர்  கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டார்.

இங்கு  பொருட்களின் விலைகள்  தொடர்பாக அமைச்சர்  பரிசீலனை செய்தார். 

இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,  கிழங்கு சாதாரண விலையிலேயே விற்கப்படுகிறது. அதேபோல், தற்போது வேறு நாடுகளில் இருந்து கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குறைந்த விலையில் நேரடியாக மக்களுக்கு வழங்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். 

பெரிய வெங்காயம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை விற்பனையாகிறது. வேறு நாடுகளில் இருந்து வருகின்ற வெங்காய வகைகளும் விற்பனைக்காக  உள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ  250 ரூபாவுக்கும், டின் மீன் 185 ரூபாவுக்கும் விற்பனையாகிறது. 

இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். இந்நிலையில்,  வெங்காயத்தின் விலை இன்னும் இரு வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது. 

தற்போது  சந்தையில் அரிசியின் விலை குறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாட்டரிசியின் தொகை விலை 92 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. இனி வரும் வாரங்களில் குறைந்த விலைகளில்  பொருட்கள் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12