சட்டவிரோத மர கடத்தல், அரச வளங்களிற்குச் சேதம் விளைவித்தவருக்கு அபராதத்துடன் 100 மரக்கன்றுகள் நாட்ட  உத்தரவு

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 11:00 AM
image

சட்டவிரோத  மர கடத்தல் மற்றும் அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த நபருக்கு அபராதத்துடன் 100 மரக்கன்றுகள் நடுமாறு முல்லைத்தீவு  நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 

மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மர கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நீதிமன்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி குற்றவாளியெனச் சந்தேகத்தின் பேரில் கைதானவர் குற்றத்தினை ஒப்புக்கொண்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

வெட்டப்பட்ட மரம் மற்றும் சேதமாக்கப்பட்ட அரச சொத்துக்களிற்காக ரூபா ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும், வன வள பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கமைவாக 100 மரக்கன்றுகளை நாட்டுமாறும் இதன்போது  நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40