ஐ.எஸ். தீவிரவாதிகளால் 8,318 பேரை உள்ளடக்கிய புதிய நீண்ட படுகொலைப் பட்டியல் வெளியீடு

Published By: Raam

10 Jun, 2016 | 08:13 AM
image

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன்  தொடர்பைக் கொண்ட ஐக்கிய சைபர் கலிபா அமைப்பானது  7,858  அமெரிக்கர்களை உள்ளடக்கிய புதிய படுகொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பு ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட டெலிகிராம் மென்பொருளைப் பயன்படுத்தி  படுகொலைத் தாக்குதல்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட மொத்தம் 8,318  பேரின் பெயர்கள்,  மகவரிகள் மற்றும் இலத்திரனியல் அஞ்சல்கள் என்பவற்றை வெ  ளியிட்டுள்ளது.

இது ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட மிகவும் நீண்ட படுகொலைப் பட்டியல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமது ஆதரவாளர்கள் முஸ்லிம்களுக்காக  அந்தப் பட்டியலில்  குறிப்பிடப்பட்டவர்களைக் கொல்ல வேண்டும்   என தீவிரவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்தபப் பட்டியலிலிருந்த அதிகளவானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாகவுள்ள நிலையில்  கனடாவைச் சேர்ந்த 312  பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 69  பேரும்  பிரித்தானியாவைச் சேர்ந்த 39  பேரும் அந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.

அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள்  இஸ்ரேல்,  பிரான்ஸ்,  இந்தோனேசியா,  நியூஸிலாந்து மற்றும் ஜமெய்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் தாக்குதலுக்கு இலக்கு வைத்துள்ளனர்.

இந்தப் படுகொலைப் பட்டியல் ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08