வைரஸ் அச்சம்- வுகனான் நகரத்தை தனிமைப்படுத்தியது சீனா- மக்கள் வெளியேற தடை

23 Jan, 2020 | 08:01 AM
image

கொரனாவைரஸ் காரணமாக அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கருதப்படும் வுகான் நகரத்திலிருந்து மக்கள்வெளியேறுவதற்கு சீனா உடனடி தடை விதித்துள்ளது.

11 மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்த நகரத்திலிருந் எவரும் வேறு பகுதிகளிற்கு செல்லக்கூடாது என சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வைரஸ் தாக்கம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சீன அதிகாரிகள் அந்த நகரை இழுத்து மூடியுள்ளனர்.

இன்று முதல் வுகான் நகரத்திலிருந்து ஏனைய பகுதிகளிற்கு செல்வதற்கான அனைத்து போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்படுவதாக சீனா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பேருந்து  புகையிர படகுச்சேவைகளையும் நிறுத்திவைக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக வுகான் நகரில் விசேட மத்திய நிலையமொன்றை அமைத்துள்ள அதிகாரிகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்காக இந்த நிலையத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வுகான் நகரில் உள்ள மக்களை பொதுமக்கள் அதிகமாக காணப்படும் இடங்களிற்கு செல்லவேண்டாம்,என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்குமாறும் சீனா அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹோட்டல்களையும் சுற்றுலாப்பயணிகளிற்கான இடங்களையும் பெருமளவில் மக்கள் கூடுவதற்கான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு சீன அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை தங்கள் பொது நிகழ்வுகளை நிறுத்திக்கொண்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47