மட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு -  வைத்திய மூல ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 07:12 PM
image

மட்டு. போதனா வைத்தியசாலையின் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பான வைத்திய மூல ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (22) கட்டளை பிறப்பித்து வழக்கு விசாரணையை எதிர்வரும் மாச் 18 திகதி ஒத்திவைத்துள்ளார். 

குறித்த வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உவைஸ் பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு அதிகரித்த மருந்தை வழங்கியதால்; சிகிச்சை பயனளிக்காமல் (09.12.2019) திங்கட்கிழமை அன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  உயிரிழந்துள்ளார்  

இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார் 

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களான 2ம் ,3ம் எதிரிகளான பெண் தாதியர் ,மருந்தாளர், ஆகிய இருவரையும் பொலிசார் 12-12-2019 வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் சந்தேக நபரான வைத்தியர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தெரிவானார். 

இவ்வாறான சம்பவம் இனி வைத்தியசாலையில் இடம்பெறக் கூடாது என சுட்டிக்காட்டி  பல  எச்சரிக்கையின் மத்தியில்  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சந்தேக நபர்கள்   இழப்பீடு வழங்குவதாக  ஏற்றுக் கொண்டதையடுத்து  மூவரையும் எதிர்வரும் ஜனவரி 22 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு தலா ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் விடுவித்ததுடன். 2019-12-13 கைது செய்யப்பட்ட  4 சந்தேகநபரான பெண்; தாதியரையும் 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் விடுவித்தார்.

இந்த நிலையில் இன்று 22-01-2020 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்நின் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு மன்றில் எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்கள் 4 பேரும் வைத்தியசாலை பணிப்பாளரும்  ஆஜராகியிருந்தனர்.

இதனையடுத்து நீதவான் உயிரிழந்த சிறுமியின் வைத்திய மூல ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு கட்டளையிட்;டு;  எதிர்வரும் மாச் 18 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22