ஜனநாயகம் நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம் !

Published By: Vishnu

22 Jan, 2020 | 03:15 PM
image

ஜனநாயகத்துக்கு முன்னணி அளிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 69 ஆவது இடத்தில் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள 'Economist Group' மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு முன்னணி அளிக்கப்படும் 167 நாடுகளை வைத்து 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்விலேயே இலங்கையானது பத்துக்கு 6.27 புள்ளிகளுடன் 69 ஆவது இடத்தில் இடத்தை பிடித்துள்ளது.

இலங்கையானது கடந்த 2006 ஆம் ஆண்டு 6.58 புள்ளிகளையும், 2008 இல் 6.61 புள்ளிகளையும், 2010 இல் 6.64 புள்ளிகளையும், 2011 இல் 6.58 புள்ளிகளையும், 2012 இல் 5.75 புள்ளிகளையும், 2013 இல் 5.69 புள்ளிகளையும், 2014 இல் 5.69 புள்ளிகளையும், 2015 இல் 6.42 புள்ளிகளையும், 2016 இல் 6.48 புள்ளிகளையும், 2017 இல் 6.48 புள்ளிகளையும், 2018 இல் 6.19 புள்ளிகளையும் பெற்றிருந்தது.

இந் நிலையில் இப் பட்டியலில் நோர்வோ (9.87) முதல் இடத்திலும், ஐஸ்லாந்து (9.58) இரண்டாம் இடத்திலும், சுவீடன் (9.39) மூன்றாம் இடத்திலும், நியூஸிலாந்து (9.26) நான்காம் இடத்திலும், பின்லாந்து (9.25) ஐந்தாம் இடத்திலும், அயர்லாந்து (9.24) ஆறாவது இடத்திலும், டென்மார்க் (9.22) ஏழாவது இடத்திலும், கனடா (9.22) எட்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியா (9.09) ஒன்பதாம் இடத்திலும், சுவிட்ஸர்லாந்து (9.03) பத்தாம் இடத்திலும் உள்ளது.

இதேவேளை இந்தப் பட்டியலில் வடகொரியா (1.08) 167 ஆவது இடத்திலும், கொங்கோ (1.13) 166 ஆவது இடத்திலும், மத்திய ஆப்பிரிக்க குடியரசு (1.32) 165 ஆவது இடத்திலும், சிரியா (1.43) 164 ஆவது இடத்திலும், சாட் (1.61) 163 ஆவது இடத்திலும், துருக்மெனிஸ்தான் (1.72) 162 ஆவது இடத்திலும், எக்குவடோரியஸ்சினி (1.92) 161 ஆவது இடத்திலும், தஜிகிஸ்தான் (193) 160 ஆவது இடத்திலும், சவுதி அரேபியா (1.93) 159 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்கதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04