“ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” - ட்ரம்ப்

Published By: Digital Desk 3

22 Jan, 2020 | 03:52 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள்  முட்டாள்களின் வாரிசுகள் ” என  காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கை விமர்சித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாவோஸ் 2020 உலக பொருளாதார மாநாட்டில் ஐம்பதாவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நம் வீடு (புவி) இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரியவில்லை. நாம் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவுள்ளோம்.

காலநிலை  மாற்றத்தை ஒரு முக்கியப் பிரச்னையாக நாம் கருதாதவரை இதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்கப்போவதில்லை. இப்போது காலநிலையும்  சுற்றுச்சூழலுமே உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. மரங்கள் நட்டால் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு சரியாகாது. அதற்காக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும். உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளையும் பொய்யான சத்தியங்களையும் மட்டுமே செய்து வருகின்றனர். இதுபற்றி குழந்தைகள் கவலைப்படவேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனால், இன்று சுற்றுச்சூழல் தொடர்பான இளைஞர்களின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதே டாவோஸ் 2020 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மாநாட்டில் மக்கள் கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த கிரேட்டா தன்பெர்க்கையும் அவரது கருத்துகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``அழிவின் வற்றாத தீர்க்கதரிசிகள் கூறும் பேரழிவு பற்றிய கணிப்புகளை நாம் நிராகரிக்க வேண்டும். மக்கள் தொகையால் நெருக்கடி ஏற்படும், வெகுஜன மக்கள் பட்டினியால் வாடுவார்கள்; விரைவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் எனப் பல அறிவியலாளர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்களின் கணிப்பு அனைத்தும் முற்றிலும் தவறாகவே இருந்தது. நம் வீடு எரிந்துகொண்டிருப்பதாக கிரேட்டா தன்பெர்க் கூறும் எச்சரிக்கையைக் கேட்க எனக்கு நேரமில்லை. அளவுக்கு அதிகமான புவி வெப்ப மயமாதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் நேற்றைய முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும்” எனப் பேசியுள்ளார்.

இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34