பாராளுமன்றத்தின் சிறப்புத்தன்மை இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது : கெஹலிய

Published By: R. Kalaichelvan

22 Jan, 2020 | 02:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தேசிய பட்டியல் ஊடாக  பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படமாட்டார்கள்.

பாராளுமன்றத்தின் சிறப்புத்தன்மை இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க போன்றவர்கள் இனி புறக்கணிக்கப்பட வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பிரதமர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கொண்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்  நிச்சயம் தோற்றம் பெறும். பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்ட்டவர்களை தேசிய பட்டியல் ஊடாக ஒருபோதும்   பாராளுமன்ற உறுப்பினராக   இணைத்துக்கொள்ளமாட்டோம்.

புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள்   ஆகியோர்  பாராளுமன்ற த்திற்கு பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவே  தேசிய பட்டியல்  கொண்டு வரப்பட்டது.  காலப்போக்கில் தேசிய பட்டியிலை    அரசியல்வாதிகள்  பயன்படுத்திக் கொண்டு  தேசிய பட்டியல் உருவாக்கத்தின் நோக்கத்தினை  இல்லாதொழித்துள்ளார்கள்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதியாக   செயற்படுவது  மக்களாணைக்கு முரணானதாகும். இதற்கு இனி இடமளிக்க முடியாது. தேசிய பட்டியலை இனி அரசியல்வாதிகள்  பயன்படுத்த முடியாது. இவ்விடயத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ எவ்வித சலுகைகளையும் வழங்கமாட்டார்.

225  பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் இன்று தவறான மற்றும்  வெறுக்கத்தக்க விதத்திலே காண்கின்றார்கள். ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள் அனைத்து அரசியல்வாதிகளின் அரசியலுக்கும் இன்று   நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றம்  இன்று   தனது சிறப்புத்தன்மையினை இழந்துள்ளது என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.

சிறந்த பாராளுமன்றம் தோற்றம் பெற வேண்டுமாயின் ரஞ்சன் ராமநாயக்க போன்றோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட  கூடாது. இவ்விடயத்தில் அரசியல் கட்சிகள் அதிக  கவனம் செலுத்துவதுடன் நாட்டு மக்களும் சிறந்த அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.    

இடைக்கால அரசாங்கம் நிறைவடைந்துள்ள 65  நாட்களில் பல   விடயங்களை வெற்றிக் கொண்டுள்ளது.   அரசியல்   முரன்பாடுகளு;க்கு  முக்கியத்துவம் கொடுக்காமல்  அபிவிருத்திக்கு முன்னுரிமை  கொடுத்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.  வெளிநாட்டு முதலீடுகளை  ஊக்குவிப்பதற்கான சட்டங்களை இயற்றிக் கொள்ள அமைசச்ரவையின் அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை துரிதமான மேம்படுத்த வேண்டுமாயின்   வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.  2012ம் ஆண்டு பல அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் விதத்தில் (எஸ.டி. பி ) என்ற வெளிநாட்டு முதலீடு கொண்டு வர  அமைச்சரலை அனுமதி  கிடைக்கப் பெற்று அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

இம்முதலீட்டின் ஊடாக  25 சதவீத வரிச்சலுகையும் கிடைக்கப் பெற்றன. 2015-2016  காலப்பகுதியில்  இந்த முதலீடு  இடைநிறுத்தப்பட்டு பிற்பட்ட காலத்தில் இல்லாமலாக்கப்பட்டது.    நாட்டின் பொருளாதார அபிவிருத்தியினை கருத்திற் கொண்டு  அனைத்து மட்டங்களிலும் முதலீடுகளை ஊக்குவிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04