விவாகம், விவா­க­ரத்து; சட்ட விதி­களும் வேறு சில தக­வல்­களும்

Published By: Daya

22 Jan, 2020 | 02:17 PM
image

நான் ஒரு வய­தான சட்­டத்­த­ரணி என்­பதால் பல இளை­ஞர்­களும் யுவ­தி­களும் சில வேளை­களில் விவாகம் செய்­த­வர்­க­ளும் எனக்குத் தொலை­பே­சியில் கேட்­டுக்­கொள்­வது என்­ன­வெனில்,

விவாகம் செய்­வ­தற்கு தேவை­யான தகை­மைகள் என்ன?

விவா­க­ரத்தின் பல­னாக பிறக்கும் குழந்­தை­களின் நிலை என்ன?

மீண்டும் விவாகம் செய்­ய­லாமா?

என்­பன பற்றி எழு­து­மாறு கேட்­பது உண்டு. இன்று அவர்­க­ளது வினாக்­க­ளுக்கு விடை எழுதும் அதே சமயம் மற்­றோரும் தெரிந்­து­கொள்­ள­வேண்­டிய தக­வல்­களையும் எழு­த­வேண்டும் என்று கருதி இக் கட்­டு­ரையை எழு­தி­யுள்ளேன்.

விவா­க­த்­துக்குத்

தேவை­யான தகை­மைகள்

1. ஆண், பெண் இரு­வரும் விவாகம் சட்­டப்­படி செய்­ய­வேண்­டு­மானால் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாக இருக்­க­வேண்டும். 18 வயது தொடங்­கு­வது 17+1 நாளில் என்­பதால் 18 ஆவது பிறந்த தினம் வரும் வரையும் காத்­தி­ருக்­க­தே­வை­யில்லை.

சில­ரு­டைய கருத்து என்று உண்டு. பெற்றோர் விரும்­பினால் 18 வய­துக்கு கீழ்­பட்­ட­வர்­களும் விவாகம் செய்­யலாம் என்­பது. இது தவறு. ஏனெனில், சட்­டத்தை மீற பெற்­றோ­ருக்கும் அதி­காரம் இல்லை என்­ப­தி­னா­லாகும்.

சட்­டப்­ப­டி­யான விவா­கத்தை புரிந்த இருவர் அந்த விவாகம் நிலைத்­தி­ருக்­கும்­போது இன்­னு­மொரு விவா­கத்தை சட்­டப்­படி செய்­ய­மு­டி­யாது. அவ்­வாறு விவாகம் முடித்தால் பல­தார விவாகம் என்ற குற்­றத்­துக்கு ஆளாவார்.

விவா­க­ரத்து பெற்­ற­வர்கள் மீண்டும் யாரா­வது விவாகம் செய்ய விரும்­பினால் விவாகம் சட்­டப்­படி செய்­யலாம்.

விவா­க­ரத்து பெற­முன்னர் விவாகம் செய்­ய­ மு­டி­யாது  என்­பது முக்­கியம். விவா­க­ரத்து நடை­பெறும்போது நீதிமன்றம் முதலில் பின்­னு­றுதி கட்­டளை (OPDERNISI) என்ற ஒரு கட்­ட­ளையை பிறகு உறுதி செய்­யப்­பட்டு நிரந்­தரக் கட்­டளை வழங்­கப்­படும். நிரந்­தரக் கட்­டளை வழங்­கப்­பட்ட பின்­னரே விவாகம் செய்ய சட்டம் இட­ம­ளிக்­கி­றது. பின்­னு­றுதி மாறும் என்­ப­தற்கு நீதி­மன்றம் உத்­த­ர­வாதம் அளிக்­க­மாட்­டாது. ஆகவே, இவ்­வி­ட­யத்தில் கவ­ன­மாக இருக்­க­வேண்டும்.

தடை செய்­யப்­பட்ட உற­வி­னர்கள் இருவர் விவாகம் செய்­ய­மு­டி­யாது. அதனை மீறி இரு­வரும் விவாகம் செய்தால் அது வெறி­தான திரு­மணம் (VOID MARRIAGE INCEST) என்ற குற்­ற­வியல் வழக்கு ஒன்­றையும் தொடுக்­கலாம். மேலும் அவர்­க­ளுக்கு பிறக்கும் குழந்­தையின் பெயர் தாயு­டை­ய­தாக இருக்கும் தகப்­பனின் நிரலில் கோடு ஒன்று கீறப்­ப­ட­வேண்டும். ஆனால் நடை­மு­றையில் இது இருக்­கி­றதே தெரி­யாது.

இவை உரோமச் சட்­ட­த்தின் கீழ் ஆளப்­படு­பவர்­க­ளுக்கே பொருந்­தும். ஏனெனில் இலங்­கையில் பல இனம், பல மதம் சார்ந்­த­வர்கள் வாழ்­கி­றார்கள். இதனால் அவர்­க­ளுக்­கு­ரிய மதங்­களின் அனு­ச­ர­ணை­யுடன் விவாகம் நடை­பெ­றலாம்.

உரோ­மச்சட்­டத்தின் கீழ் ஆளப்­ப­டு­பவர்கள் பொது­வாக திரு­மணச் சட்­டத்தின் கீழேயே விவாகம் செய்தால் மேலே­யுள்ள விதி­களில் பெரும்­பாலா­னவை அவர்­க­ளுக்கே பொருந்தும்.

விவா­க­ரத்து மாவட்ட நீதிமன்றத்­தி­லேயே தாக்கல் செய்­யப்­ப­ட­வேண்டும். சிலர் பொலிஸ் நிலையம் சென்று தனக்கு விவா­க­ரத்து பெற்­றுத்­த­ர­வேண்டும் என்று அழுது முறைப்­பாடு செய்­வ­துண்டு. பொலி­ஸாரால் விவா­க­ரத்து தர­மு­டி­யாது. அவர்­களால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்­யவும் முடி­யாது என்­பதை மனதில் கொள்­ள­வேண்டும்.

விவா­க­ரத்து பெறு­வ­தற்கு

தேவை­யான சட்­ட­வி­திகள்

விவாகம் செய்யும் இருவர் மன­மொத்து விவா­கப்­ப­தி­வாளர் முன்­னி­லையில் அதனை பிர­க­ட­னப்­ப­டுத்தி அவர்­க­ளது கையொப்­பத்தை இரண்டு சாட்­சி­யாள­ரி­னதும் விவாகப் பதி­வா­ள­ரதும் முன்­னி­லையில் இடு­வ­துடன் விவாகம் நிறை­வே­றி­வி­டு­கி­றது.

மட்­டக்­க­ளப்பு விவா­க­ரத்து வழக்கு ஒன்று உயர் நீதி­மன்றம் வரை சென்­றது. அந்த விவாகம் சம்பிர­தாய மூலம் நடை­பெற்­றது. இவர்கள் இரு­வரும் விவா­க­ரத்து பெற நீதி­மன்றம் செல்­ல­வேண்­டுமா என்ற கேள்வி எழுந்­தது. விடை ‘ஆம்’ என்று கூறப்­பட்­டது. ஆனால் விவாகம் சம்­பி­ர­தாயப்படி (விளாம் பழம்) ஊட்­டி­ய­படி நடைபெற்றதால் சட்­டப்­படி விவாகம் நடை­பெற்­ற­தாக கொள்­ள­முடி­யாது என்று கூறி நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. ஆகவே, நீதி­மன்றம் சட்­டப்­ப­டி­யான திரு­ம­ணத்­தையே ரத்து செய்யும் அதி­கா­ரத்தை கொண்­டுள்­ளது என்­பதை கவ­னிக்­க­வேண்டும்.

விவாகம் செய்த இரு­வ­ருக்­கி­டையில் குடும்பச் சண்­டைகள், ஆத­னச் சண்­டைகள் மற்றும் சீதனச் சண்­டைகள் நடை­பெ­று­வ­துண்டு. அவற்றின் அடிப்­ப­டையில் அவர்கள் இரு­வரும் பிரிந்து பல வருடம் வாழ்­வதும் உண்டு. அவற்றை காட்டி நீதி மன்­றத்தில் விவா­க­ரத்து வழக்கை தாக்கல் செய்­ய­மு­டி­யாது. நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்­ய­வேண்­டு­மாயின் சில கார­ணங்­களை காட்­டியே வழக்கை தாக்கல் செய்­யலாம். அக்­கா­ர­ணங்கள் நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்­தி­லேயே விவா­க­ரத்து வழங்­கப்­படும். அத்­த­வ­றுகள் அல்­லது கார­ணங்­களை விவாக குற்­றங்கள் (MATRI MONIAL FAULT) என அழைக்­கப்­படும்.

விவாக குற்­றங்­க­ளாக பின்வரு­வ­னவே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன

அ. விவா­க­த்தின் பின்னர் தனது தலைவர் அல்­லது துணைவி அல்­லாத வேறு ஒரு­வ­ருடன் பாலியல் உறவில் விருப்­பத்­துடன் ஈடு­ப­டு­வது இதனை ஆங்­கி­லத்தில் (ADULIERY) என்று அழைப்பர். தமிழில் சோரம் என்றும் அழைப்பர்.

ஆ. விவாக பந்­தத்தை முறிக்­க­வேண்டும் என்ற எண்­ணத்­துடன் சில குற்­றங்­களை செய்தல். இதனை வண்ம உற­வ­றுத்தல் (MALICOUS DESERTION) என அழைப்பர்.

இ. ஆண்மை இன்மை. ஆண்மை என்­பது வேறு விடயங்­களில் பார்ப்­பது இல்லை. பாலி­யலில் ஈடு­பட ஆண்மை இல்லை என்­ப­துவே இது­வாகும். சில சந்­தர்ப்­பங்­களில் சில கார­ணங்­களால் முழு ஆட­வ­னுக்கு பாலியல் ஈடு­பட ஆண்மை இல்­லாமல் இருக்கும். ஆனால், இதனை சுகப்­ப­டுத்­த­லாமா என்று பார்க்­க­வேண்டும் சுகப்­ப­டுத்­தவே முடி­யாது என்று கண்டால் வைத்­தி­யரின் அறிக்­கையின் (INCURABLE SEXUAL IMPORTENCY) என்று கண்டால் மட்­டுமே இப்­பி­ரி­வின்கீழ் விவா­க­ரத்தை நீதி­மன்றம் வழங்கும்.

மேலே­யுள்ள மூன்று கார­ணங்­களில் ஏதா­வது ஒன்­றா­வது இருந்தால்தான் நீதி மன்றம் விவா­க­ரத்தை வழங்கும்.

கண­வ­னுக்கு எதி­ராக நடை­பெறும் குற்­ற­வியல் வழக்­கு­களில் கண­வ­னுக்கு எதி­ராக சாட்­சியம் அளிக்­கு­மாறு மனை­வியை கேட்க யாருக்கும் உரி­மை­யில்லை. இது சாட்­சி­யியல் சட்­டத்தின் கீழ் உள்ள விதி­யாகும்.

கணவன் இறந்த பின்னர் அவ­னது இறுதி விருப்­பா­வணத்தால் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அசையும் அசையா சாத­னங்கள் தவிர்ந்த வேறு குறிப்­பி­டப்­ப­டாத ஆத­னங்கள் இருப்பின் அவ்­வா­வணங்­களை பெற மனை­விக்கு உரி­மை­யுண்டு. இவ் விடத்தில் இறு­தி­ வி­­ருப்­பா­வணம் பற்றி சிறு தகவல்  ஒன்­றையும் வாச­கர்­கள் ­அ­றி­ய­வேண்டும்.

சில­வே­ளை­க­ளில் ­இ­றுதி விருப்­பா­வணம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கண­வன்­இறந்தால் அவ­னது ஆசைப்­படி எழுதி வைத்த நப­ருக்கு நிரு­வாக தத்­துவப் பத்­தி­ரத்தை நீதி­மன்றம் வழங்கும்.

இறுதி விருப்­பா­வணம் ஒன்றை எழு­தாமல் இறந்தால் அவ­னது சொத்தை பெற மனை­வி­ மட்­டு­மல்ல வேறு பலரும் போட்­டி­யி­டலாம். ஆனால் ­ம­னை­விக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்.

இது சம்­பந்­த­மாக மேலும் அறி­ய­வேண்­டு­மானால் கோத்­தாடுகொட எதிர்­ சிறி­மான என்ற வழக்கை படிக்­க­வும். ­இந்த வழக்­கில்­ம­னை­விக்கு இறு­தி­நி­ரு­வாக பத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை. நண்­ப­ரான சிறி­மா­ன­வுக்கே அது வழங்­கப்­பட்­டது.

விவா­க­ரத்து வழங்­கப்­பட்ட இரண்டு கட்­டங்கள் உண்டு. ஒன்று விளக்­கத்­தின்­பின்னர் வழங்­கப்­படும். ஓடர் னைசை எனப்­படும் பின்­னு­றுதி (ORDER NISI) கட்­ட­ளையும் அதன் பின்னர் வழங்­கப்­படும் முற்று உறுதி கட்­ட­ளை­யு­மான இரண்டு கட்­டங்­களே அவை­யாகும்.

சில சம­யங்­களில் பின்­னு­றுதி கட்­டளை ORDENISI வழங்­கப்­பட்ட பின்னர் இரு பகு­தி­யாரும் தாம் இணைந்து வாழப்­போவ­தா­கவும் பின்­னு­றுதிக்­கட்­ட­ளையை ரத்து செய்­யு­மாறு நீதி­மன்­றத்தைக் கேட்­கலாம். நீதி­மன்றம் அப்­போது பின்­னு­றுதிக் கட்­ட­ளையை ரத்து செய்யும்.

பின்­னு­றுதிக் கட்­டளை ஒன்று முற்­று­று­திக்­கட்­ட­ளை­யாக மாற்றாமல் இருந்தால் எவ்­வ­ளவு காலம் சென்­றாலும் அவர்கள் வேறு விவாகம் செய்­ய­மு­டி­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பின்­னு­று­திக்­கட்­டளை ABSOLUTE ORDER எனப்­ப­டு­கின்­றது.

பின்­னுறு­திக்­கட்­டளை வழங்கப்­பட்டு மூன்று மாதங்­களின் பின்னர் நீதி­மன்றம் சுய­மா­கவே முற்­று­றுதி கட்­ட­ளையை வழங்கும் என சிலர் கூறு­வ­துண்டு. இது தவறு. பின்­னு­ற­தி­யில் ­கட்­ட­ளையை பெற விண்­ணப்பம் செய்தே பெற­வேண்டும். குடி­யியல் நடை­பெற்ற விளக்­கங்­க­ளையும் படிக்­கவும்.

விவாக பிரி­ம­னைப்­பணம் (ALIMONY) விவாகம் பரி­பூ­ர­ண­மாக ரத்துச் செய்­யப்­படும் வரை கண­வனால் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

விவா­கரத்தின் பின்­னரும் மாஜி மனை­விக்கு இருப்­பிட வசதி கண­வனால் செய்து கொடுக்­கப்­ப­ட­வேண்­டுமா என்ற வினா பல சந்­தர்ப்­பங்­க­ளில்­ நீ­தி­மன்றில் எழு­வது உண்டு. இது சம்­பந்­த­மாக பல தீர்ப்­புக்கள் உண்டு. இவற்றில் இரண்டு எதிரும் புதி­ரு­மான தீர்ப்­புக்கள் பின்­வ­ரு­மாறு ஆகும்.

அ. டயஸ் எதிர் கொடி­து­வக்கு

என்ற வழக்கு

1. இந்த வழக்கில் கண­வ­னா­னவன் மனை­வியின் பரா­ம­ரிப்­புக்கு கட­மைப்­பட்­டவன். ஆகவே அவ­ளது இருப்­பி­டத்­துக்கு கணவன் இல்­லிடம் ஒன்றை கொடுக்­க­வேண்டும்  என்­று­ தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. விப­ரத்­துக்கு 3 ஸ்ரீல.பு.ச.அறிக்கை 3542 பார்க்­கவும்.

2. ஸ்ராலா எதிர் மார்­கிட்­ சில்வா (2002)  ஸ்ரீல.பு.ச.அறிக்கை169ம் இதில் கூறப்­பட்­டது என்­ன­வெனில், மனை­விக்கு இல்­லிட வசதி செய்து கொடுக்­க­வேண்­டி­யது கண­வனின் கட­மை­யென்றும் ஆகவே இல்­லிடம் என்று கொடுக்­காமல் அவ­ளையும் குழந்­தை­க­ளையும் வீட்டில் இருந்து வெளியேற்­ற­மு­டி­யாது என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

3. ஆனால், விவா­க­ரத்து பெற்­ற­பின்னர் பெண்­ணா­ன­வள்­ அதே வீட்டில் தொடர்ந்தும் இருக்­க­மு­டியும் என்­பது நடை­மு­றையில் சாத்­தி­யப்­ப­டாது. புதி­தாக வரும் மனை­வியைப் பார்த்துக்கொண்டு மாஜி மனை­வியால் இருக்­க­மு­டி­யாது என்றே கொள்­ள­வேண்டும்.

விவா­க­ரத்தின் பயனால்

கிடைக்கும் பலா­பலன்

அ.முன்­னைய விவாகம் ரத்­தா­கி­றது.அவ­ளது பெயரின் முன் இருந்த MRS.............. என்ற பெயர் ­ரத்­தா­கி­றது.

ஆ. விவா­க­ரத்து பெற்ற இரு­வரும் மீண்டும் விவாகம் செய்­யலாம். புதி­தாக விவாகம் செய்த ஆணின் பெயரை தனக்கு MRS............. என்று பெண் பாவிக்­கலாம்.

இ. விவாகம் ரத்து செய்­யப்­பட்டு 280 நாட்­க­ளுக்­கி­டையில் கிடைக்கும் பிள்­ளை­க­ளுக்கு ­மாஜி கண­வனின் பெயரே உரித்­தாகும். அவரே பிள்­ளையின் தகப்­ப­னாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டுவர்.

10. விவாகம் ஒன்­று­ ரத்து செய்­யப்­பட்டு பின்­னு­று­திக்­கட்­டளை கிடைக்கும் வரை விவாகம் செய்­ய­மு­டி­யாது. ஆனால் பலர்­ இ­தனை கவ­னிக்­கா­மல்­ பின்­னு­றுதி கட்­டளை கிடைக்­கும்­ முன்­னரே வேறு ஒரு­வரை விவா­கம் ­செய்து விடு­கின்­றனர்.இது பாரிய சட்­டத்­த­வ­றாகும். ஆயினும் கணவன்மார் இதனை பொருட்­ப­டுத்­தாமல் போனால் போகட்டும் போடா என்­று பாடித்திரி­வ­தைக் காணலாம். கண­வனைப் பொறுத்­த­வரை மனை­வியின் தொல்லை தொலைந்­தது என்று கூறி அமை­தி­யாக இருக்­கலாம் என்­று ­நி­னைத்­தாலும் சில சட்டக் கட்­டுப்­பாட்­டுக்கு அவன் உள்­ளா­க­ வேண்டும் என்­பதை அவனும் அறி­வ­தில்லை. அவளும் அறி­வ­தில்லை. தொலைந்­தது தொல்லை என்று இருக்­கின்­றார்கள்.

ஆனால் ABSOLUTE ORDER இல்­லாமல் வேறு ஒரு விவாகம் செய்­வது தவறு என்­பது மட்­டு­மல்ல அந்த விவாகம் VOID வெறி­தான திரு­ம­ண­மா­கவே சட்டம் கருதும்.

பின்னர் புதி­தாக விவாகம் செய்­த­வருடன் குடும்பம் நடத்­தும்­போது அது வெறிதான விவாக வாழ்க்­கை­யா­தலால் புதிய கணவன் இவ­ளுக்கு பரா­ம­ரிப்பு பணமோ வேறு ALIMONEY என அழைக்­கப்­ப­டு­கின்ற பணமோ வழங்­கத்­தே­வை­யில்லை. குழந்­தைகள் கூட அவ­னது பெயரில் இருக்­க­ மு­டி­யாது. விரும்­பிய போது அவளை விட்டு விட்டு இன்னும் வேறு ஒரு விவா­கத்தை அவன் செய்­யலாம். பெண்­ணா­னவள் அநா­தையை போலவே சட்­டத்தின் முன்­னி­லையில் இருப்பாள்.

ஆகவே, பெற்­றோரும் மற்­றோரும் தனது மக­ளுக்கு விவா­க­ரத்து பெற்று கொடுத்து மீண்டும் விவாகம் செய்ய விரும்­பினால் மிக கவ­ன­மாக பார்க்­க­வேண்­டி­யது முன்­னைய விவாகம் ABSOLUTE ORDER ஐ கொண்­டுள்­ளதா என்பதாகும் ABSOLUTE ORDER இல்­லை­யெனில் VOID விவா­கத்­தையே தனது மக­ளுக்கு செய்து வைக்­கி­றார்கள் என்று நினைத்துக் கொள்­ள­வேண்டும். ஆத்­திரக் கார­னுக்கு புத்­தி­மட்டு என்ற நிலையில் இல்­லாமல் தெளிவாக இருந்து விவா­க­ரத்தை செய்து கொடுக்­க­வேண்டும்.

விவா­க­ரத்­து­க்கு முன்னால் பல

விட­யங்­களை கவ­னிக்­க ­வேண்டும்

அ. பிள்­ளை­களின் பாது­காவல் யாரிடம் இருக்­க­வேண்டும் என்­பது முக்­கியம். (CUSTODY OF CHILDREN) தகப்­பனும் தாயும் பிள்­ளை­களின் பாது­காப்பை கோரலாம். நாட்­டுப்­பு­றங்­களில் மட்­டு­மல்ல படித்­த­வர்கள் மத்­தி­யிலும் ஒரு கதை­யுண்டு பெண்பிள்ளை தாய்க்கு என்றும் ஆண் பிள்ளை தகப்­ப­னுக்கு என்றும் கூறு­வதைக் காணலாம். இது தவ­றான அபிப்­பி­ரா­ய­மாகும். அப்­படிச் சட்டம் இல்லை.

ஆ. பிள்ளை யாரிடம் இருந்­தாலும் அப்­பிள்­ளையை பார்க்­க­ மறுபகு­தி­யா­ருக்கு சேர்வு (ACCESS) என்ற ஒன்று உண்டு. நீதி­மன்றம் அதனை கட்­டாயம் வழங்­க­வேண்டும்.

இ. நீதி­மன்றம் யாரிடம் பிள்­ளையின் பரா­ம­ரிப்பை கொடுக்­க­வேண்டும் என்­பதை தீர்­மா­னிப்­பது எப்­ப­டி­யெனில், குழந்­தையின் கரி­ச­னையை அடிப்­ப­டை­யாக வைத்தே தீர்­மா­னிக்­கி­றது. BEST INTERESTO OF THE CHILD) யோ நீதி­மன்றம் அடிப்­ப­டை­யாக கொள்­கி­ன­்றது. இதில் கவ­னிக்க வேண்­டி­யது என்­ன­வெனில், பிள்­ளை­களின் பரா­ம­ரிப்பை மாற்ற நீதி­மன்­றத்­துக்கு அதி­காரம் உண்டு என்­ப­தாகும். ஏனெனில் விவா­க­ரத்து பெற்ற பெண்ணை அவ­ளுக்­கு ­பி­றந்த குழந்தையை இரண்டாம் தாரமாக மணப்பவன் பல சமயங்களில் கொடுமைப்படுத்துவது உண்டு. வேலைக்காரர்களை விட மோசமாக நடத்துவது, இவற்றை கவனித்து பிள்ளையின் பாதுகாப்பை எந்த நேரத்தில் மாற்றலாம். மேலும் நீதிமன்றம் பிள்ளையின் நிலையை நன்னடத்தை உதவியாளர் சிறுவர் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோர் மூலம் மேற்படி குழந்தைகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்று அதற்கு தக்க பராமரிப்பை மாற்ற சட்டத்தில் இடம் உண்டு. ஆகவே கூறக்கூடிய அறிவுரை விவாகரத்து பெறாமல் இருப்பதேயாகும்.குழந்தைகளுடன் இருப்பவர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

தொகுப்புரை

வாழ்க்கையில் ஒருவர் எத்தனையோ பிரச்சினைகளை சமாளிக்கவேண்டியுள்ளது. எல்லாவற்றையும் தனக்குச் சார்பாக தீர்க்க வேண்டும் என்று நினைக்ககூடாது; சமாளித்து போகவேண்டும். விசேடமாக கணவன் மனைவியர் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பல குறைபாடுகளை நாம் கணவன் மனைவியிடம் காணலாம். ஆகவே இயன்றவரை அக்குறைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி அல்லது சமூகநல வல்லுநர் குடும்ப பெரியார்களிடம் எடுத்துக்கூறி நிலையை திருத்த முயலவேண்டும். அதனை விடுத்து குடும்பத்தை அழிக்கும் காரணங்களில் ஒன்றான விவாகரத்தை பெறுதலை செய்யக்கூடாது.

சட்டமே அதற்கு இடம் அளிக்கின்றது. விவாகரத்து பெறமுன்னர் கணவர் மனைவி விரும்பின் SEPARATION என்ற ஒரு நடவடிக்கை உண்டு. அதனைப் பெற்று குடும்பத்தை பிரிக்காமல் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடிக்காமல் வாழ முயற்சிக்க வேண்டும்.

- கே.ஜி.ஜோன் - சட்டத்தரணியும் ஆய்வாளரும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13