பிறி­தொரு கட்­டத்தை நோக்கி  நகர்த்­தப்­பட்­டுள்­ள சுவிஸ் தூத­ரக பெண் அதி­காரி விவ­காரம்

22 Jan, 2020 | 12:46 PM
image

(எம். எப்.எம். பஸீர்)

 கைது செய்­யப்­பட்டு   பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள சுவிட்சர்­லாந்து தூத­ர­கத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­காரி  கானியா பெனிஸ்ர் பிரான்சிஸ் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய பிறி­தொரு கட்­டத்தை நோக்கி  நகர்த்­தப்­பட்­டுள்­ளன.  

குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்  மெரில் ரஞ்­சனின் கீழ்  மனித படு­கொ­லைகள்  தொடர்­பான  விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி  பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சத் முன­சிங்க, பொலிஸ் பரி­சோ­தகர் .இக்பால்  உள்­ளிட்டோர்  கொழும்பு  பிர­தான நீதி­வான  லங்கா ஜய­ரத்­ன­விற்கு  மேல­திக  விசா­ரணை அறிக்­கை­யொன்றின் ஊடாக  இதனை  வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

கானியா பெனிஸ்டர்  விவ­காரம் குறித்த   வழக்கு விசா­ரணை  நேற்று  கொழும்பு  பிர­தான நீதிவான்  லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.  இதன்­போது தற்­போது   சுவிட்­ஸர்­லாந்­துக்கு  அடைக்­கலம் தேடிச்­சென்­றுள்ள   சி. ஐ. டியின்   சமூக  கொள்ளை  குறித்த விசா­ரணை  பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி   நிஷாந்த சில்­வா­விற்கு  கடந்த  2019  நவம்பர் 19ஆம் திகதி  இந்த விவ­கா­ரத்தின்  சந்­தேக நப­ரான சுவிஸ் தூத­ரக   பெண் அதி­காரி  கானியா  பெனிஸ்டர் பிரன்சிஸ் ஆறு  தொலை­பேசி  அழைப்­புக்­களை எடுத்­துள்­ள­தாக   விசா­ரணை  அதி­கா­ரிகள்  நீதி­மன்­றுக்கு  அறி­வித்­துள்­ளனர்.  

இது தொடர்­பாக சி.ஐ. டி  தனது  விசா­ர­ணை­களில்  வெளிப்­ப­டுத்­தப்­பட்ட மேல­திக விட­யங்­களை விசேட  மேல­திக அறிக்கை ஊடாக  நீதி­மன்­றுக்கு  அறி­வித்­தது.

 ' சந்­தேக  நப­ரான   கானியா பெனிஸ்டர் என்­பவர் பயன்­ப­டுத்­திய  தொலை­பேசி சிம் அட்டை தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. அந்த சிம் அட்­டை­யா­னது  லக்னா தரிந்து பர­ன­மான்ன  என்­ப­வரின்  பெயரில்  பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. குறித்த நபர் தற்­போது  ஒஜோன் பிரேன்ஸ் பசே  எனும்  தனியார்  ஊடக    நிறு­வ­ன­மொன்றில் சேவை­யாற்­று­கின்றார். அவரை சி.ஐ.டி.க்கு அழைத்து   விசா­ரணை செய்து  வாக்கு மூலம் பதிவு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவ­ரது   வாக்­கு­மூ­லத்தில்  தனது பெயரில் பெற்றுக் கொண்ட  குறித்த சிம் அட்­டையை   கடந்த  2011ஆம் ஆண்டு சிலோன் டுடே பத்­தி­ரி­கையில்  கட­மை­யாற்­றிய தரிஷா  பெஸ்­டியன் என்­ப­வ­ருக்கு  வழங்­கி­ய­தாக   தெரி­வித்­துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகும் போது தரிஷா பெஸ்­டியன்  சன்டே ஒப்­ஸவர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ராக இருந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தரிஷா பெஸ்­டி­யனின் தொலை­பேசி அழைப்பு விபர பட்­டியல் பெறப்­பட்டு  விசா­ரணை செய்­யப்­பட்­டது. இதன்­போது லேக் ஹவுஸ் நிறு­வ­னத்தின்  தலை­வ­ராக கட­மை­யாற்­றிய   ஊட­க­வி­ய­லாளர் கிரி­ஷாந்த குரேவின்  தொலை­பேசி  இலக்­கத்­திற்கு தரி­ஸாவால் 21  அழைப்­புக்கள்  எடுக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று  2019 நவம்பர் 19ஆம் திகதி  தற்­போது   பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள குற்­றப்­பு­ல­னாய்வு  திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர்  ஷானி அபே­சே­க­ரவின் தொலை­பேசி இலக்­கத்­திற்கு லேக்­ஹவுஸ்  நிறு­வ­னத்தின்  முன்னாள் தலைவர் கிரி­ஸாந்த குரே    அழைப்­பொன்றெ ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அந்த அழைப்­பா­னது  9  நிமி­டங்கள்  12 வினா­டிகள்  வரை  நீடித்­துள்­ளன.

அதே வேளை  தற்­போது  வெளி­நட்டில் உள்ள  சி.ஐ. டியின் முன்னாள் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா  சுவிட்­ஸர்­லாந்­துக்கு செல்ல முன்­னைய தினம் இரவு 9.30 ற்கு  முன்னாள்  சி. ஐ. டி  பணிப்­பாளர்  ஷானி அபே­சே­ர­வுக்கு  தொலை­பே­சியில்  தொடர்­பு­கொண்­டுள்ளார்.  இதே வேளை   லக்னா  தரிந்து   பர­ன­மான்ன  என்­பவர் சி. ஐ. டி க்கு அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்தின் பிர­காரம் சண்டே ஒப்­ஸேவர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ராக இருந்த  தரிஷா பெஸ்­டியன் கடந்த  2019 டிசெம்பர் 22ஆம் திகதி  சுவிட்­ஸர்­லாந்­துக்கு  பய­ண­மா­கி­யுள்­ள­தா­கவும், தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ள­தா­கவும் அவர் தொரி­வித்தார். எவ்­வா­றா­யினும்   தரிஷா பெஸ்­டி­ய­னுக்கு  இறு­தி­யாக உள்­வந்த அழைப்பு  டிசெம்பர் 22ஆம் திகதி  பிற்­பகல் 02. 36க்கு  இவ்­வ­ழக்கின்   சந்­தேக  நப­ரான  கானியா  பெனிஸ்டர் என்­ப­வ­ரினால்  எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அழைப்­பா­னது 108 செக்­கன்கள் நீடித்­தன.

இந்­நி­லையில் லேக் ஹவுஸ்' முன்னாள் தலைவர் கிரி­ஸாந்த குரேவும் கடந்த டிசம்­பவர் 25ஆம் திகதி   மலே­சி­யா­வுக்கு   வெளி­யேறி சென்­றுள்­ள­தாக குடி­வ­ரவு , குடி­ய­கல்வு  திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இவ்­வா­றான  பின்­ன­ணியில் குற்­றப்­பு­ல­னாய்வு  பிரிவின் முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர்   ஷானி அபே­சே­க­ர­விடம்  விசா­ர­ணை­களை  முன்­னெ­டுக்க  நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி  அவ­ரிடம் வாக்­கு­மூலம் ஒன்­றினை  பதிவு செய்துக் கொள்ள அவரை  நாளை  23ஆம் திகதி   குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் ஆஜ­ராக  பொரளை  பொலிஸார் ஊடாக   அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது ' என   சி. ஐ. டி  இந்த விவ­கா­ரத்தின் விசா­ரணை நிலைமை தொடர்பில் கொழும்பு பிர­தான நீதவான் லங்கா ஜய­ரத்­னவை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை   பொய்­யான தக­வல்­களை வழங்கி தேசத்தை அசௌ­க­ரி­யத்­திற்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்­பி­லான  குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­கி­யுள்ள  சுவிஸ் தூத­க­ரத்தின்  சிரேஷ்ட   குடி­வ­ரவு குடி­ய­கல்வு  அதி­காரி  கானியா  பெனிஸ்டர்  பிரான்­சிசின்  தொலை­பேசி  நீதி­மன்ற  பொறுப்பில் இருந்த நிலையில்  அதனை   அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்பி  அறிக்கை பெற   கொழும்பு பிர­தான நீத­வான  லங்கா ஜய­ரத்ன  உத்­த­ரவு  பிறப்­பித்தார்.

முன்­னைய    வழக்கு தவ­ணையின் போது   கானியா சார்பில் மன்றில் ஆஜ­ரா­கிய   சிரேஷ்ட சட்­டத்­த­ரணி உபுல்  கும­ரப்­பெ­ரும  குறித்த தொலை­பே­சியில்  தூத­க­ரத்தின் உத்­தி­யோ­க­பூர்வ தொடர்­பாடல்  தக­வல்கள்  அடங்­கி­யுள்­ளதால் அந்த தொலை­பேசி   1996ஆம் ஆண்டின் 9ம் இலக்க  தூத­ரக   சிறப்­பு­ரிமை சட்­டத்தின் 38(2) அத்­தி­யா­யத்தின் கீழ்  பாது­காப்பு பெறு­வ­தாக   வாதம்  முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதனால்   அந்த தொலை­பே­சியை   பகுப்­பாய்­வுக்கு அனுப்­பு­வது சட்­ட­வி­ரோ­த­மா­னது என    கானி­யாவின் சட்­டத்­த­ரணி  வாதம் முன்­வைத்­தி­ருந்தார்.

எனினும் அந்த வாதத்தை நிரா­க­ரித்த கொழும்பு பிர­தான நீதவான் லங்கா ஜய­ரத்ன நேற்று தொலை­பே­சியை   இர­சா­யன பகுப்­பாய்­விற்கு அனுப்ப உத்­த­ர­விட்டார். '  சந்­தேக நபரின் தொலைப்­பேசி   அவ­ரது பெயரில்  பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.   அத்­துடன் அது   தூத­ர­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வு­மில்லை. எனவே  அந்த  தொலை­பே­சியை பகுப்­பாய்வு செய்ய  1996ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தூத­ரக சிறப்­பு­ரிமை  சட்­டத்தின் 38(2) அத்­தி­யா­யத்தின் கீழ் எத்­த­டை­களும்  உள்­ள­தாக தோன்­ற­வில்லை. எனவே   சந்தேக நபர்    தரப்பின் வாதத்தை நிராகரிக்கின்றேன்.   தொலைபேசியை  அரச  இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் அதன் அறிக்கையை  சட்டமாதிபருக்கு கையளிக்கவும்  அரச  இரசாயன  பகுப்பாய்வாளருக்கு உத்தரவிடுகின்றேன்.'  என நீதிவான்  லங்கா ஜயரத்ன   அறிவித்தார்.

  நேற்றைய  தினம்   இந்த  வழக்கு விசாரணைகளின் போது விசாரணையாளர்களான  சி . ஐ. டி யினருடன்  சிரேஷ்ட அரச சட்டவாதிகளான  ஜனக பண்டார , லக்மினி  கிரியாகம , ஆகியோர் ஆஜரானதுடன்  சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட  சட்டத்தரணி  உபுல் குமரப்பெரும முன்னிலையானார். வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33