பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் ஏற்பாடுகள் : கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் -  நஸிர் அஹமட்

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 12:18 PM
image

முஸ்லிம் மக்களுக்குள்ள வரப்பிரசாதங்களில் கைவைத்து அவர்களது பிரதிநிதித் துவத்தை சீர்குலைக்க நினைக்கும் ஏற்பாடுகள் சில திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.

 மாவட்ட ரீதியாகப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் வாக்களிப்பு வீதத்தை 5 சத வீதத்திலிருந்து 12.5 வீதமாக அதிகரிப்பதற்கான மறைமுக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவதானமாக செயற்படவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப் பதாவது,

1978 ஆம் ஆண்டு ஆப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்பின் 99 இல(5) ஆம் பிரிவில் மாவட்ட பிரதிநிதி தெரிவுக்கான வாக்களிப்பு வீதம் 12.5 என விதந்துரைக்கப்பட்டிருந்தது. 

அதாவது ஒரு மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 100 என்றால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக்குழு 12.5 வீத வாக்குகளை பெற்றால் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை பிரித்தொதுக்கும் செயன்முறையில் அக்கட்சியின் வாக்குகள் கருத்தில் கொள்ளப்படும் நிலை இருந்தது.

இதனால் சிறுபான்மை மக்களின் கட்சிகள் மட்டுமல்ல சிறுகட்சிகளும் பாதிக்கப்படும் நிலைமை இருந்தது. இதனை மாற்றியமைத்து வரலாற்று சாதனை படைத்தவர் எங்கள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பது பொன்எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய ஒன்று. 

12.5என்ற விதத்தை 5 சதவீதமாக்கிய பெருமை அவருக்கே உரியது. அதன் வழியேதான் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நடைமுறைகள் இருந்து வருகின்றன. இதன் காரணத்தால்தான் மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உறுமய போன்ற கட்சிகளின் பிரதிநிதித்துவம் கூட பாராளுமன்றத்திற்கு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில் தற்போது 12.5 வீதத்துக்கு வாக்களிப்பு வீதத்தை எப்படியாவது உயர்த்தி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவேண்டும் என்ற நோக்கில்தான் பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாஸ ராஜபக்ஷாவினால் தனிநபர் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இது தனிநபர் பிரேரணை எனச் சொல்லப்படுகின்றபோதும் இதன் பின்புலத்தில் தற்போதுள்ள பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் பக்கபலம் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

எனவே இத்தகைதொரு ஆபத்து பாராளுமன்றில் காத்திருக்கின்றது என்பதைக் கருத்தில்கொண்டு இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமை கடும்கவனம் கொண்டு செயற்படவேண்டும். முன்னர்போல் சமூக நலனைச் சிந்திக்காது எடுத்தற்கெல்லாம் கைதூக்காமல் எமக்குள்ள இக்கட்டு நிலையை அறிந்து செயற்பட முன் வரவேண்டும். 

இதேநேரத்தில் எதிர்காலத்தில் எமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாது காப்பாற்றப்படும் விதத்தில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன், என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35