பந்தை சேகரிக்கும் யுவதியிடம் வாழைப்பழத்தை உரித்து தருமாறு கோரிய டெனிஸ் வீரர்-சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

22 Jan, 2020 | 11:25 AM
image

அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பந்தை சேகரிக்கும் யுவதியிடம்   வாழைபழத்தை உரித்து தருமாறு கோரிய டெனிஸ் வீரர் கடும் சர்ச்சையில் சிக்குண்டுள்ளார்.

பிரான்சின் டெனிஸ் வீரர் எலியட் பென்செட்ரிட் என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவர் அவுஸ்திரேலிய ஓபனின் தகுதிகான் போட்டியின்போது பந்தை சேகரிக்கும் யுவதியிடம்  தனக்கு வாழைப்பழத்தை உரித்து தருமாறு கேட்டுள்ளார்.

இதனை அவதானித்துக்கொண்டிருந்த நடுவர் ஜோன் புளொம் டெனிஸ் வீரரிடம் பந்தை சேகரிக்கும் யுவதி   உமது அடிமையல்ல என குறிப்பிட்டுள்ளார்.

டெனிஸ் வீரரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலகின் பிரபல முன்னாள் சம்பியனான மார்ட்டினா நவரட்டிலோவா அடுத்த என்ன  திராட்சைபழமா என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நடுவர் சரியான விடயத்தை செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை அவர் உங்கள் வேலைக்காரியில்லை அவர் தனது கடமையை செய்வதற்காகவே அங்கு உள்ளார் என மற்றொரு  நபர் பதிவு செய்துள்ளார்.

இது எவ்வளவு மோசமான செயல் இந்த வீரர் முரட்டுத்தனம் என்பதற்கு அப்பால் செயற்பட்டுள்ளார் எனவும் சமூக ஊடகங்களில் விமர்சனம் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான எதிர்ப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் வீரர் எனது கை வியர்வையை தடுப்பதற்காக நான் கிறீம் பூசியிருந்ததால் வாழைப்பழத்தை உரித்து தருமாறு கேட்டேன் என குறிப்பிட்டுள்ளார்

போட்டியின் ஆரம்பத்தில் அவர் எனக்கு வாழைப்பழத்தினை உரித்து தந்துள்ளார்,ஆனால் நான் இரண்டாவது நான் கேட்டவேளை நடுவர் தலையிட்டு அந்த யுவதி  எனது அடிமையல்ல என குறிப்பிட்டார் நானே வாழைப்பழத்தை உரித்தேன் என பிரான்ஸ் வீரர் குறிப்பிட்டுள்ளார்.

நடுவர் அவ்வாறு தெரிவித்தார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, ஆடுகளத்தில் என்ன நடந்தது என்பதை அறியாமல் சமூக ஊடகங்களில் இந்த விடயம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என பிரான்ஸ் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சையில் சிக்கிய வீரர் முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31