பாவனைக்குதவாத பொருட்களை விற்றவர்கள் மீது வழக்குத் தாக்கல்

Published By: Daya

22 Jan, 2020 | 09:55 AM
image

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பொருட்களை விற்பனை  செய்தவர்கள் மீது வழங்கு தாக்குதல் தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால்  நேற்று திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

நகரத்திற்குச் செல்லும் மக்களின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.மக்களுக்குச் சுத்தமான சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டது.

50 மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் சோதனையிடப்பட்டதுடன் குறைபாடுகளுடைய வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன் போது பல வியாபார நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த, மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

உணவகங்களில் சமைப்பவர்கள், பேக்கரி தின்பண்டங்கள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளைத் தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகள் உரிய ஆடைகள் அணிய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.

இதன்போது, 08 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்குதல் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சில வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டதுடன், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02