எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்

Published By: R. Kalaichelvan

21 Jan, 2020 | 07:02 PM
image

(ஆர்.விதுஷா)

ஐக்கிய தேசிய கட்சி தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய  வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமை  தொடர்பில் பேராயர் மல்கம கார்தினால் ரஞ்சித் ஆண்டகை மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று இரவு கார்டினலை  பொரளை பேராயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். . அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெவிக்கையிலேயே   அவர் இதனை தெரிவித்தார். 

 அவர் மேலும் கூறியதாவது  , 

எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் நாட்டு மக்களின் தேவைகளை  நிறைவேற்ற வேண்டிய கடமைகளும்,பொறுப்புக்களும் எனக்கு  உண்டு. ஆகவே , இந்த ஆரம்பத்திற்கான ஆசீரவாதத்தை பெற்றுக்கொள்வதற்காகவே,பேராயரை சந்தித்திருந்தோம். 

நாட்டிற்கு நன்மைபயக்க க்கூடிய வகையிலான தேசியக் கொள்கையொன்றை வகுத்து அதன்  ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதையே பேராயரும் விரும்புகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்ககுதல்களின் பின்னர் கடந்த அரசாங்கத்தினால் பாதிப்புக்கு உள்ளான ஆலயங்களை மீள் நிர்மாணிப்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டமை குறித்தும் அவர் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.  

அத்துடன்,தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து  செயற்படுகின்றமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். அதேவேளை , மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும்  அவர் எமக்கு  தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட  மக்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு தகுந்த நிவாரணத்தை வழங்குவதற்கான ஏற்றாடுகளை  நாம் மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன்.

நாட்டிற்கென தேசிய கொள்கையொன்று வேண்டும். நாடு அந்த  வழியிலேயே செல்ல வேண்டும். அதனையே பேராயரும்  விரும்புகின்றார் என கூறினார். 

இந்த சந்திப்பில் ,முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதூங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் ஹக்டர் அப்புஹாமி  உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47