பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணைக்கு ஆளும் தரப்பு முழு ஆதரவினை வழங்கும் : கெஹலிய 

Published By: R. Kalaichelvan

21 Jan, 2020 | 06:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எம்.. சி. சி ஒப்பந்தத்தை கிழத்தெறிய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ பெற்றுக் கொடுப்பதை காட்டிலும், பாராளுமன்றத்தை கலைத்து உடன் பொதுத்தேர்தலுக்கு செல்ல பெரும்பான்மையை  பெற்றுக் கொடுப்பது பயனுடையதாகும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணைக்கு  ஆளும் தரப்பினர் முழு  ஆதரவினை வழங்குவோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு   கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எம். சி. சி ஒப்பந்த்தை கிழத்தெறிய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுத்தருவதாக  எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ தற்போது குறிப்பிட்டுக்  கொள்கின்றார்.

கடந்த அரசாங்கத்தில்  இரகசியமான முறையில்  எம். சி. சி ஒப்பந்தம் செய்ய  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயத்தில் எதிர்க்கட்சியினரால்  பிரயோகிக்கப்பட்ட  எதிர்ப்புகளினால் மாத்திரமே  ஒப்பந்தம் கைச்சாத்திடாலமல் இடை நிறுத்தப்பட்டது.

எதிர்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கியதேசிய கட்சியின்   பிரதி  தலைவராகவும், அமைச்சரவையின் பலம்  வாய்ந்த அமைச்சராகவும்     செயற்பட்டார்.

எம். சி. சி. ஒப்பந்தம் குறித்து   பாராளுமன்றத்தில் எதிர் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், ஆளும்  தரப்பின்  நிலைப்பாடு தொடர்பிலும் எந்நிலையிலும் அவர்   கருத்துரைக்கவில்லை. 

இவ்வொப்பந்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவர் போலவே  செயற்பட்டார். ஆனால் இன்று  எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கப் பெற்றதன் பின்னர் தனத அரசியல் தேவைகளுக்கு எம. சி . சி ஒப்பந்தத்தினை கடுமையாக விமர்சித்து  எதிர்க்கின்றார்.

பாராளுமன்றத்தை கலைத்து  பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பிரதான அரசியல் சிந்தனையாக காணப்படுகின்றது.

எதிர்க்கட்சி  தலைவர் பெரும்பாலான மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிப்பவராயின் பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான  பிரேரணையை கொண்டு வந்து அப்பிரேரணை வெற்றிப் பெறுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை  பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஆளும் தரப்பினர் நிபந்தனைகளற்ற ஆதரவினை வழங்குவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31