மட்டக்களப்பில் திறக்கப்பட்ட ஒ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம் 

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 02:52 PM
image

மட்டக்களப்பில் திறக்கப்பட்ட ஒ. எம்.பி அலுவலகத்திற்கு ஏதிராக இன்று (21) செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கட்டிடத்திலிருந்து பகல் 1 மணிக்கு ஆரம்பமாகி லொயிஸ் அவனியூர்; ஊடாக நகர மணிக்கூட்டு கோபுரம் வழியாக  மத்திய வீதியில் உள்ள ஒ. எம்.பி அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காணாமல் போன உறவுகள் கலந்து கொண்டு .வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஜந்து பேரின் விபரங்களை  ஒப்புதலுடன்  பெற்றுக் கொண்ட ஓ.எம்.பி ஆறு மாதம் கடந்தும் அதற்கு  நிதிவழங்க முடியாத நீ மாவட்டம் தோறும் அலுவலகம் திறந்து எதைச் சாதிக்கப்பாhர்க்கிறாய்.

வெள்ளை வேனில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே , நீ கொன்றாயா, சர்வதேச விசாரணை வேண்டும்,  6 ஆயிரம் ரூபா தேவையில்லை , புதிதாக திருட்டுத்தனமாக திறக்கப்பட்ட ஒ.எம்.பி அலுவலகம் தேவையில்லை, போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு  கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக ஓ.எம்.பி அலுவலகம் வரை சென்று அங்கு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டகார்கள் ஆர்ப்பாட்டத்தில் சில மணி நேரம் ஈடுபட்டு பின் அங்கிருந்து விலகிச் சென்றனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47