பெண் குழந்தைகளை பாதுகாக்க இந்தியாவில் புதிய முயற்சி !

Published By: Digital Desk 3

21 Jan, 2020 | 12:41 PM
image

இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பாடசாலை மாணவர்கள் 2,020 பேர், அஞ்சல் அட்டைகளில் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற வாசகங்கள் எழுதி இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்க்கு அனுப்பும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் திருத்தணியில் உள்ள தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பாடசாலையில், வரும் 24 ஆம் திகதி கொண்டாடப்படும், இந்திய தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உலக சாதனை படைக்கும் முயற்சி நடந்தது.

இதற்காக, பாடசாலை வளாகத்தில் 2,020 மாணவர்கள் ‘வீ சப்போர்ட் சைல்ட் ரைட்ஸ்' என்ற ஆங்கில வார்த்தை வடிவில் அமர வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, ஆளுக்கு ஒரு அஞ்சல் அட்டையில், 'குழந்தைகள் உரிமைகளை காப்போம்; பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம்; பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற வாசகங்களை எழுதியுள்ளனர்.

இந்த 2,020 அஞ்சல் அட்டைகளையும், ஜனாதிபதிக்கு அனுப்பி 'ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு' சாதனையில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

இதில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17