சுற்றுலாத் துறை பஸ் உரிமையாளர்களுக்கு குத்தகைத் தொகையைச் செலுத்த நிவாரண காலம் 

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 11:54 AM
image

சுற்றுலா பஸ்களுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள குத்தகைக்கான (Leasing) தவணைக் கொடுப்பனவைச் செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

நிதி அமைச்சுடன் இணைந்து இதற்கான  பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று, முதலீட்டு மேம்பாட்டு சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை  வழங்குவதற்காக 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 95 சதவீதமானவை தனியார் தொழில்துறையினருக்கு உட்பட்டதாகும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப்  பின்னர் சுற்றுலாத் தொழில்துறைக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டதுடன்,  இத்துறையில் ஈடுபட்டிருந்த பஸ் உரிமையளர்களுக்கும் இதனால் பெரும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

குத்தகைத் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் சில பஸ்கள் குத்தகை நிறுவனங்களினால் பொறுப்பேற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமக்கு நிவாரண காலமொன்றை வழங்குமாறு இத்துறையைச் சேர்ந்தோர் கடந்த அரசாங்கத்திடம்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என இந்த பஸ் உரிமையாளர்கள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் தெரிவித்திருந்தனர். இதற்கு அமைவாகவே, இந்த குத்தகைக்கான தவணைப் பணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமென்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04