ஐ.தே.க.வின் கொள்­கையை மாற்­றி­ய­மைக்க திட்­ட­மி­டு­கிறார் சஜித்  - வாசு­தேவ

21 Jan, 2020 | 11:32 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் முரண்­பாடு பாரிய பிளவை ஏற்­ப­டுத்தும் நிலையில் இருக்­கின்­றது. அத்­துடன் சஜித் பிரே­ம­தாச கட்­சியின் கொள்­கையை மாற்­றி­ய­மைக்க திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்றார். என்­றாலும் கட்­சியின் ஆரம்ப உறுப்­பி­னர்கள் அதற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.

அவ்­வா­றான நிலையில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு புதிய  கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வது தவிர வேறு வழி­யில்­லா­மல்­போகும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணியின் தலை­வரும் இராஜாங்க அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட் டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் தற்­போது ஏற்­பட்­டி­ருக் கும் தலை­மைப்­ப­தவி போட்டி கட்­சிக்குள் பிளவை ஏற்­ப­டுத்தும் நிலைக்கு சென்­றி­ருக்­கின்­றது. இந்த பிரச்­சி­னை­யா­னது ரணில் விக்­கிரம­சிங்க, சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கி­டையில் இருக்கும் பிரச்­சி­னை­யல்ல. கட்­சியின் கொள்­கையை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும் என்று சஜித் பிரே­ம­தாச மற்றும் அவரை சார்ந்­த­வர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இதனை சஜித் பிரே­ம­தாச வெளிப்­ப­டை­யாக தெரி­விக்காவிட்­டாலும் அவரின் பேச்­சுக்­களில் விளங்­கிக்­கொள்­ளலாம்.

ஐக்­கிய தேசிய கட்சி ஆரம்பம் முதல் மேலா­திக்­க­வா­தி­களின் கொள்கை­யுடன் செயற்­பட்­டுவரும் கட்­சி­யாகும். அதனால் அதன் கொள்­கையை மாற்­றி­ய­மைக்க கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள், ஆரம்­ப­கால அங்­கத்­த­வர்கள் இட­ம­ளிக்­க­மாட்­டார்கள்.

அப்­ப­டி­யானால் சஜித் பிரே­ம­தாச புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்­க­வேண்­டி­வரும். அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் ஐக்­கிய தேசிய கட்­சியின் மேலா­திக்­க­வா­திகள் கட்­சியை முன் கொண்டு செல்ல கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்­றனர்.

அதனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் மோதல் மிக­வி­ரைவில் பாரி­ய­தொரு வெடிப்­புடன் இரண்­டாக பிள­வு­படும் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது.

தேர்­தலில் பெரும்­பான்­மையை பெற்று 19 ஆம் திருத்­தத்தை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும் என  அர­சாங்­கத்தில் சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

எம்மை பொறுத்­த­வரை 19 ஆம் திருத்­தத்­தை­விட தேர்தல் முறை­மையில் மாற்றத்தை ஏற்படுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அமு லில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையால் மக்க ளுக்கு அநீதியே ஏற்பட்டு வருகின்றது. அதனால் தொகுதிவாரி, விகிதாசர முறைமையில் அமைந்த கலப்பு தேர்தல் முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47