ஐ.தே.க. முரண்­பாட்டுக்கு தீர்­வுகாணும் முயற்­சியில் சபா­நா­யகர் கரு தீவிரம்

Published By: J.G.Stephan

21 Jan, 2020 | 10:47 AM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­துவ விவ­கா­ரத்தில் எழுந்­துள்ள சர்ச்சை தொடர்பில் சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கும் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் இரவு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது.

சபா­நா­யகர் இல்­லத்தில் நடை­பெற்ற இந்தச் சந்­திப்­பின்­போது தலை­மைத்­துவம் தொடர்பில் எழுந்­துள்ள முரண்­பாடு குறித்தும் அதற்­கான தீர்­வுகள் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க விலகி அந்த பத­வி­யினை சஜித் பிரே­ம­தா­ச­விடம் கைய­ளிக்க வேண்­டு­மென்று கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரி வரு­கின்­றனர். ஆனால், கட்­சியின் தலை­மைத்­து­வத்தை விட்டுக் கொடுப்­ப­தற்கு தயா­ரில்லை என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடாப்­பி­டி­யாக இருந்து வரு­கின்றார்.

இவ்­வி­டயம் குறித்து பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­ட­போ­திலும் இறுதி முடிவு எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் புதிய கூட்­டணி ஒன்­றிணை அமைத்து போட்­டி­யி­டு­வது என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்டுக் கட்சித் தலை­வர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இந்த நிலை­யில்தான் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை கடந்த சனிக்­கி­ழமை சஜித் பிரே­ம­தாச சந்­தித்து பேசி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்தே நேற்று முன்­தினம் இரவு கரு­ஜ­ய­சூ­ரிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இரு­த­ரப்­புக்­கு­மி­டையில் இணக்­கப்­பா­டொன்றை ஏற்­ப­டுத்தி பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் முயற்­சியில் கரு­ஜ­ய­சூ­ரிய ஈடு­பட்­டுள்ளார்.

நேற்­றைய தினம் தலைமைத்துவ விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19