குஜராத் மாநிலத்தில் தீக்கிரையான 10 மாடிகளை கொண்ட ஆடை வணிக வளாகம் (காணொளி இணைப்பு)

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 10:43 AM
image

இந்நியாவின் குஜராத் மாநிலம் சூரத் பகுதில் அமைந்துள்ள 10 மாடிகள் கொண்ட ஆடை வணிக வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

ரகுவீர் எனும் குறித்த வணிக வளாகம் இயங்கி வந்த 10 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலையில் தரைதளத்தில் இருந்த கடை ஒன்றில் தீ பற்றியுள்ளது. தீயானது அடுத்தடுத்தக் கடைகளுக்கும், அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதில் மொத்த கட்டிடமும் கொழுந்து விட்டு எரிந்து தீப்பிழம்பாக காட்சியளித்தது. 

அங்குள்ள கடைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொலிஸ்டர் ரக துணிகள் அதிக அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 57 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில தீயணைப்பு வாகனங்களும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 

கடந்த 8 ஆம் திகதியும் இதே கட்டிடத்தின் 4வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது முறையான தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததற்காக அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47