8 பேரை கொலை செய்தமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு - பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு 

Published By: Digital Desk 4

20 Jan, 2020 | 06:15 PM
image

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த  இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர்.

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து 2019 மே 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது.

இந்த நிலையில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்தே படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமது உறவுகளுக்கு அரச வேலை தரவேண்டும் என்று கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

“எமது உறவுகளின் உயிரை மீண்டும் பெற்றுத் தர முடியாது. ஆனால் தற்போது  இறந்தவர்களின் குடும்பங்களில்  உள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பினையும் இழப்பீட்டையும் பெற்று தருமாறு கோரி முறைப்பாடொன்றை பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09