தாயாரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட யுவதி : நடந்தது என்ன.? (காணொளி இணைப்பு )

Published By: Robert

09 Jun, 2016 | 04:11 PM
image

தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய யுவதியொருரை அவரது சொந்தத் தாயார் உயிருடன் எரித்துப் படுகொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

ஸீனத் ரபீக் (18 வயது) என்ற யுவதியே இவ்வாறு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கிழக்கு பாகிஸ்தானில் லாகூர் நகரிலுள்ள வீட்டில் அவரது தாயாரான பர்வீன் ரபீக்கும் சகோதரனும் அவரை கட்டிலுடன் சேர்த்துக் கட்டிய பின் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி அவருக்கு தீ வைத்துள்ளனர்.

தனது மகள் தம்மால் பாரம்பரிய முறைப்படி செய்து வைக்கவிருந்த திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மோட்டார் சைக்கிள் இயந்திரவியலாளரான தனது காதலர் ஹஸன் கானை நீதிவான் நீதிமன்றமொன்றில் கடந்த மாதம் திருமணம் செய்ததால் சினமடைந்தே அந்தத் தாயார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படுகொலை இடம்பெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக ஸீனத் தங்கியிருந்த இடத்திற்கு விஜயம் செய்த பர்வீன் ரபீக்கும் மாமா ஒருவரும் அவரை வீடு திரும்ப ஊக்குவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் ஸீனத்திடம் பாரம்பரிய முறைப்படி மீண்டும் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் இல்லையெனில் அவர் வாழ்க்கை முழுவதும் காதலனுடன் ஓடிப்போனவர் என்ற அவப்பெயருடன் வாழ நேரிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்களுடன் சென்றால் காதலருடன் சென்றமைக்காக அவர்கள் தன்னைக் கொல்லலாம் என அஞ்சிய ஸீனத், தன்னை அவர்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டாம் என தனது தனது கணவரிடம் கோரியுள்ளார்.

எனினும் குடும்ப உறுப்பினர்கள் அவரை பலவந்தமாக தம்முடன் அழைத்துச் சென்றனர்.

“ என்னை அவர்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டாம். அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்" என அவர் தெரிவித்ததாக ஸீனத் தெரிவித்ததாக அவரது கணவர் கூறினார்.

பாகிஸ்தானில் குடும்ப கௌரவத்துக்காக வருடந்தோறும் சுமார் 1,000 பெண்கள் வரை கொல்லப்பட்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35