எந்த messaging app பாது­காப்­பா­னது?

20 Jan, 2020 | 04:09 PM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க தம்­மோடு  சிநே­க­பூர்­வ­மாக கலந்­து­ரை­யா­டிய சக அர­சி­யல்­வா­திகள், ஊட­கவியலா­ளர்கள், பாது­காப்புத் தரப்­பி­ன­ரு­டைய தொலை­பேசி அழைப்­புக்­களை நெறி­மு­றை­யற்ற வகையில் ஒலிப்­ப­திவு செய்து அவற்றை இறு­வட்­டுக்­களில் பிர­தி­பண்ணி வைத்­தி­ருந்­த­ போ­துதான் அவற்றை பொலிஸார்  கைப்­பற்­றி­யி­ருந்­தனர்.

 அப்­படி கைப்­பற்­றப்­பட்ட இறு­வட்­டுக்­களில் இருந்த ஒலிப்­ப­தி­வுகள் எவ்­வாறு சமூக ஊட­கங்­களை சென்­ற­டைந்­தன என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தாக இருந்­தாலும் அதனால் அவ­ரோடு பேசிய தரப்­பி­ன­ருக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­புக்கள் அளப்­ப­ரி­ய­தாகும். சஜித் பிரே­ம­தா­ஸவை பற்றி ஒரு ஊட­க­வி­ய­லாளர் அவ­ரோடு பேசிய ஒலிப்­ப­திவும் இதில் அடங்கும். தற்­போது அந்த ஒலிப்­ப­திவு வெளி­யா­கி­ய­ நி­லையில் எதிர்­காலத்தில் சஜித்­துடன் குறித்த ஊட­கவிய­லாளர் மன­தார பேச­மு­டி­யுமா?

கோடிக்­க­ணக்­கான மக்கள் நாள் தோறும் தமக்­கி­டையே தக­வல்­களைப் பரி­மா­றிக்­கொள்­கின்­றனர். ஆனால் தாம் ஒரு தக­வலை அனுப்­பி­விட்டால் அந்தத் தக­வ­லுக்கு என்ன நடக்­கின்­றது என்று எத்­தனை பேருக்கு தெரியும்? மூன்றாந் தரப்­பி­னரால் நீங்கள் அனுப்­பிய தகவல் இடை­ம­றித்துக் கேட்­கப்­படு­கின்­றதா ? என்ற கரி­சனை இன்­றியே அநே­க­மா­ன­வர்கள் Appsகளைப் பயன்­படுத்­து­கின்றனர்.

தற்­போது உல­க­ளவில் அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டு­ வரும் Messaging Appகளில் WhatsApp, Facebook Messenger, We Chat, Viber, Telegram, Line என அடுக்­கிக்­கொண்டே போகலாம். எம்மில் அநே­க­மா­ன­வர்கள் இதி­லுள்ள பல App செய­லி­களை download செய்து பயன்­ப­டுத்­தி­ வ­ரு­கிறோம்.

ஆனால், சிறந்த ஒரு செய­லியை பயன்­ப­டுத்­தி­னாலே போது­மா­னது. இதற்கு  பொது­வாக நம்மில் பலரும் அறிந்த WhatsApp செய­லி­யை­விட சிறந்தது எது என விரி­வாகப் பார்ப்போம்.

Whatsapp செயலி குறித்த அறி­முகம் தேவை­யில்லை. Instant Messaging சேவையில் அதிக பய­னா­ளர்­களை (1 .5 Billion Monthly Active Users) கொண்டு இவ்­வ­கையில் முதல் இடத்தை தக்­க­வைத்து கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் அந்த செய­லிக்கு ஒரு போட்டி / மாற்று உண்டு என்றால் அது நிச்­சயம் Signal செய­லிதான்…

என்ன ??? இத்­தனை நாள் பயன்­ப­டுத்­திய whatsapp ஐ விட்­டு­விட்டு புதிய செய­லியை பயன்­ப­டுத்த வேண்டுமா??? என்று நீங்கள் கேட்­பது புரி­கி­றது. whatsapp இல் உள்ள குறை­க­ளையும், signal இல் உள்ள நிறை­க­ளையும் நீங்­களே தெரிந்­து­கொண்டு பின் முடிவு எடுங்கள்…. நிச்­சயம் signalக்கு நீங்­களும் மாறி­வி­டு­வீர்கள், மற்­ற­வர்­க­ளையும் மாறச் சொல்­லு­வீர்கள்…. whatsapp உம் நமக்கு ஒரு காலத்தில் புதி­தாக அறி­முகமான ஒரு செயலி தான் ….

Signal லும், Whatsapp பும் சேவை­யிலும், தோற்­றத்­திலும் ஒன்­றுபோல் காட்­சி­ய­ளித்­தாலும், அதன் பய­னம்­சங்கள் Whatsapp ஐ கருத்­து­கையில் பன்­ம­டங்கு அதிகம். அதன் கார­ண­மா­கவோ என்­னவோ, 2009 இல் துவங்­கிய Whatsapp சேவையின் வளர்ச்சி விகிதத்தை காட்­டிலும் 2014 இல் துவங்­கிய Signal செய­லியின் வளர்ச்சி விகிதம் உச்­சத்தை தொடு­கி­றது.

வாருங்கள் நேரத்தை கடத்­தாமல் இரண்டு செய­லி­க­ளுக்கும் உண்­டான பய­னாம்ச வித்­தி­யாசம் குறித்து விரி­வாக பார்ப்போம்…

Signal Messenger – What’s Unique:

Whatsapp ஐ கரு­து­கையில் எண்­ணற்ற வச­திகள் Signalஇல் உண்டு.. அவற்றுள் Signal செய­லிக்­கென்றே உள்ள தனிச்­ சி­றப்பு வாய்ந்த வச­தி­களை இந்த பதிவில் பார்ப்போம்...

    1. Cloud Sync., Cross-Platform and Multi-Device Enabled:

Signal செய­லி­யா­னது முற்­றிலும் மேகக்­க­ணினி (Cloud Computing) முறையில் இயங்கும் தன்­மை­யு­டையது. ஆகையால் ஒரு signal account- ஐ வைத்து ஒரே நேரத்தில் Google Android, Apple iOS, Windows Mobile OS, Google Chrome OS, Windows, Linux, மற்றும் Web Version உள்­ளிட்ட வெவ்­வேறு இயங்­கு­த­ளத்­திலும், Desktop, Laptop, Smartphone, Tablet உள்­ளிட்ட வெவ்­வேறு சாத­னத்­திலும் உப­யோகிக்க முடியும்.

இதன்மூலம் ஒரு device இல் பதிவு செய்­ததை வேறு ஒரு device இல் edit செய்­து­கொள்­ளலாம். வீட்டில் tablet கரு­வியில் தொடர்ந்த ஒரு பதிவை, பய­ணத்தின் போது மொபைல் போனில் தொடர்ந்து, பின் அலு­வ­லகம் சென்­ற­டைந்­ததும், கணி­னியில் அந்த பதிவை தட்­டச்சு செய்து முடிக்­கலாம். அனைத்தும் ஒரே டெலெக்ராம் account இன் வாயி­லாக, எந்த கரு­வி­யிலும் logout ஆகாமல்... நினைத்து பாருங்கள், எத்­த­கைய உய­ரிய வச­தி­யென்று...

ஸ்மார்ட்­போனில் ஒரு பதிவை தட்­டச்சு செய்து கொண்­டி­ருக்­கும்­போது பேட்­டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், உங்கள் tablet கரு­வியில், அல்­லது கணி­னியில் அந்த பதிவை விட்ட இடத்­தி­லி­ருந்து மீண்டும் தொட­ரலாம். மறு­முறை முத­லி­லி­ருந்து தட்­டச்சு செய்­ய­ வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

மேலும் இந்த வச­தி­யினால் உங்­க­ளு­டைய அனைத்து chat பதி­வு­களும் மொபைலில் local storage ஆக save ஆகாமல், அனைத்தும் cloud storage இல் சேமிக்­கப்­ப­டு­வதால், உங்­க­ளு­டைய முக்­கிய பதி­வுகள் அனைத்தும் அழி­யாமல் எத்­தனை ஆண்டு வேண்டு­மா­னாலும் பாது­காப்­பாக இருக்கும். Signal இல் இயல்­பா­கவே Complete On-Line Backup வசதி உண்டு. Signal செய­லியின் உரு­வாக்­கமே / இயக்­கமே மேகக்­க­ணி­னியை சார்ந்திருப்­பதால், இயற்­கை­யா­கவே அனைத்­துப்­ப­தி­வு­களும் (Secret Chat தவிர்த்து) பாது­காப்­பான சர்­வர்­களில் backup ஆகின்­றன. Whatsapp-இல் உள்­ளது போல் பதி­வு­களை backup செய்­வ­தற்கு Google Cloud account ஐ integrate செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உங்கள் மொபைல் internal memory மற்றும் SD கார்ட் மெம­ரி­யையும் Whatsapp-ஐ போன்று வீணாக்­கு­வ­தில்லை. Whatsapp இல் அனைத்­துமே local storage என்­பதால், மொபைல் போனை format செய்­தாலோ, மொபைல் தொலைந்து போகும் சூழல் ஏற்­பட்­டாலோ, பதி­வுகள் அனைத்தும் திரும்ப பெற முடி­யாது... Google cloud மூலம் cloud இல் சேமிப்­பது போன்ற மாயையை whatsapp ஏற்­ப­டுத்­தினாலும், அது 3-rd party service integration முறையில் இருக்­கி­றதே தவிர, Signal-இன் சொந்த cloud sync கட்ட­மைப்பிற்கு ஈடா­காது... .

உதா­ர­ணத்­திற்கு: Whatsapp இல் web version பயன்­ப­டுத்த, நீங்கள் இன்­டர்நெட் பிர­வு­சரில் Whatsapp-ஐ ஓபன் செய்து, அதில் தெரியும் QR Code ஸ்கேன் செய்து, பின் அது இயங்க, உங்கள் மொபைல் போனிலும் Whatsapp செயலி online இல் இயங்­கிக் ­கொண்­டி­ருக்க வேண்டும். அதுவும் சரி­யான, முழு­மை­யான network இணைப்பு, இன்­டர்நெட் இணைப்பு இல்­லை­யென்றால், இந்த Whatsapp Web Version பயன்­ப­டுத்­து­வது மிகவும் சிரமம். Retry, Retry என்று வெறுப்பேத்தும்…

அந்­த­மா­திரி இம்­சை­களே Signal App இல் கிடை­யாது. போனே இல்­லாமல், அல்­லது போனில் Signal app ஐ நிறுவாமலும் Signal Web Version ஐ பயன்­ப­டுத்­தலாம்.

2. Complete Security, Secret Chats and Custom Privacy Options:

Security, Encryption, Privacy ஆகிய இந்த வார்த்­தைகள் இந்த வருட துவக்க காலத்­தி­லி­ருந்தே அதி­க­மாக பேசப்­பட்­டன. அதற்கு காரணம் சமீ­பத்­திய Whatsapp செய­லியின் update-இல் வெளி­யிட்ட பிரை­வசி பொலிசி தான். அதில் குறிப்­பிட்­ட­தா­வது, Whatsapp செய­லி­யையும் முக­நூ­லையும் (Facebook) ஒன்­றி­ணைக்­கப்­போ­வ­தா­கவும், இரண்டு applicationகளும் பய­னாளர் தக­வல்­களை பகிர்ந்­து­கொள்ளும் எனவும் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இதை பல நாடு­களை சார்ந்த அனைத்து தரப்பு மக்­களும் எதிர்த்­தனர். Facebook நிறு­வனம் Whatsapp நிறு­வ­னத்தை கைப்­பற்­றி­யது முதல் இது­போன்ற இணைப்பு நேரும் என்று பலர் கரு­தி­னாலும், Facebook நிறு­வனம் அதை மறுத்­து­வந்த நிலையில், இது­போன்ற அறி­விப்பு பல­ருக்கு அதிர்ச்சி அளித்­தது. இந்த இணைப்பை ஏற்­ப­டுத்­து­வதில் எதிர்ப்பு இருப்­பினும் Facebook அதனை கண்­டு­கொள்­ளா­ததால், பலரும் Whatapp செயலி போன்ற மாற்று செயலி தேடு­கையில், Signal செய­லியே சிறந்த தேர்­வாக அமைந்­தது. அதற்கு காரணம் Signal செய­லியின் பாது­காப்பு, நம்­ப­கத்­தன்மை, எண்­ணற்ற வச­திகள் முத­லி­யவை. அதனை தொடர்ந்து Signal செய­லியின் பய­னாளர் விகிதம் தொடர்ந்து ஏற்­று­மு­க­மா­கவே அமைந்­துள்­ளது.

Signal செய­லியில் உள்ள பாது­காப்பு மற்றும் தனி­யு­ரிமை அமைப்­புகள் குறித்து பார்ப்போம்: (Privacy and Security Options)

01. Hide Last Seen for Particular or Selected contacts

Whatsapp இல் Last Seen status ஐ Everyone, My Contacts, Nobody என்ற மூன்று optionகள் மட்­டுமே இருக்கும். இதன் மூலம் Last Seen ஐ அனை­வரும் பார்ப்­பது, நமது மொபைலில் Contacts save செய்த நபர்கள் மட்டும் பார்ப்­பது, அல்­லது யாருமே பார்க்­கா­த­படி set செய்­வது. அதுதான் முடியும். ஆனால் Signal இல் நாம் Everybody என்று set செய்­தாலும் குறிப்­பிட்ட நபர்கள் மட்டும் பார்க்­கா­த­படி set செய்­யலாம். Nobody என்று set செய்­தாலும், குறிப்­பிட்ட நபர்கள் மட்டும் நமது Last Seen ஐ பார்க்­கும்­படி அமைக்­கலாம். இந்த ஏற்­பாடு Telegram Appலும் இருந்­தாலும் Signalஇல் அதி­க­மாக உண்டு.

02. Avoid others adding to Groups without permissions

நம்மை பல­முறை நம் சொந்­தங்­களோ , நண்­பர்­களோ நாம் விரும்­பாத பல whatsapp குழுக்­களில் இணைப்­ப­துண்டு.. பின் நாம் அதி­லி­ருந்து வில­கி­னாலும் நம்மை மீண்டும் மீண்டும் பல குழுக்­களில் இணைத்து அன்­புத்­தொல்லை செய்வர்.. இது போன்று Whatsapp இல் தடுப்­ப­தற்கு, அந்த நப­ரையே Block செய்ய வேண்டும். ஆனால் Signal இல் நம்மை யார் மற்ற குழுக்­களில் இணைக்­கலாம் வேண்டாம் என்று set செய்து வைக்­கலாம். எந்த நபர்­க­ளையும் பகைத்­துக்­கொள்­ளாமல். :-)

03. End to End Encrypted Secret Chats

Google Allo வில் incognito chat என்ற option இருப்­ப­துபோல், Telegram-மிலும் Secret Chat என்ற வசதி உள்­ளது. அதன் மூலம், நாம் எந்த ஒரு தனி நப­ரி­டமும் உரை­யா­டு­வதை, எந்த சர்­வ­ரிலும் சேமிக்­காது, யாரும் இடை­ம­றித்து தகவல் திரு­டா­த­வாறு, பாது­காப்­பான முறையில் தகவல் பரி­மா­றலாம். நாம் தகவல் அனுப்பும் கரு­வி­யிலும் , தகவல் பெறும் நபரின் கரு­வி­யிலும் மட்­டுமே அந்த தகவல் இருக்கும். வேறெங்கும் அந்த தகவல் சேமிக்­கப்­ப­டாது. கூடுதல் வசதி என்­ன­வென்றால், இந்த secret chat வசதி மூலம் நாம் அனுப்பும் தக­வலை, நாம் யாருக்கு அனுப்­பி­னோமா அவரால் கூட அதை மற்­ற­வ­ருக்கு forward செய்­வதோ, Screenshot எடுப்­பதோ முடி­யாது. அப்­படி அவர் screenshot எடுக்க முற்­பட்டால் Telegram app போன்றே நமக்கு அந்த தக­வலை Signal உடனே தெரி­விக்கும். எந்த அள­விற்கு பாது­காப்பு பாருங்கள்…!

Whatsapp இல் இது­போன்று எந்த வச­தியும் இல்லை. அவர்கள் அனைத்து தக­வ­லுக்கும் End to End Encryption உள்­ளது என்­கி­றார்கள், பின் எப்­படி Government உள­வுத்­துறை , நமது தக­வல்­களை படிக்­கி­றது, தவ­றான செய்தி பதிந்தால் கைது செய்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை. Whatsapp இன் தகவல் பரி­மாற்ற பாது­காப்பை, இதை கேள்­விப்­பட்டும் நாம் நம்­பு­கிறோம் என்­பது தான் வியப்பின் உச்சம். :-)

04. Timed Self-Destructed Secret Message

இந்த வசதி மூலம், நாம் ஒரு­வ­ருக்கு அனுப்பும் தகவல் நாம் செட் செய்த நேரத்தில் தானாக அழி­யும்­படி அனுப்­பலாம். உதா­ர­ண­மாக, திரு­ம­ணத்­திற்­காக வரன் தேடும் பையன் வீட்­டுக்­கா­ரர்­க­ளிடம், பெண் வீட்டார் பெண்ணின் புகைப்­ப­டத்தை அவர்கள் குறிப்­பிட்ட நேரம் மட்டும் பார்க்­கும்­படி செட் செய்து அனுப்­பினால், பெண்­ணு­டைய புகைப்­படம் தவ­றா­ன­வர்கள் கைகளில் , தேவை­யில்­லாமல் பகி­ரப்­ப­டு­வதை தவிர்க்­கலாம். இது உதா­ரணம் தான், பல வகையில் இந்த வசதி பல­பே­ருக்கு உதவும்.

05. Two-Factor Authentication

2FA என்று சொல்­லப்­ப­டு­கிற இந்த வசதி, நீங்கள் ஜிமெயில் செய­லியில் பார்த்­தி­ருப்­பீர்கள். நான் ஏற்­க­னவே Signal ஒரு Cloud Computing முறையில் இயங்கும் செயலி எனவும், பல கரு­வி­களில் (Smartphone, Tablet, Laptop என) ஒரே account பயன்­ப­டுத்தி, அனைத்­திலும் ஒரே நேரத்தில் online இல் இருக்­கலாம் என்றேன். அப்­படி இருக்கும் போது, நாம் எந்­தெந்த கரு­வி­களில் account ஐ பதிந்தோம் என்­ப­தையும், நமக்கு தெரி­யாமல் யாரேனும் நமது account ஐ பயன்­ப­டுத்­தா­த­வாறு பாது­காக்கும் முறைதான் இது. இதை Enable செய்­வது மூலம், வேறு ஒரு கரு­வியில் Signal ல் நமது account ஐ பயன்­ப­டுத்த நேரிட்டால், வழக்­க­மான OTP message உடன் கூடு­த­லாக இன்­னொரு Password-உம் பூர்த்தி செய்தால் தான் அந்த கரு­வியில் பயன்­ப­டுத்த இயலும். இது போன்றும் Whatsapp இல் கிடை­யாது.

06. In-Built Passcode Lock for App

இது இன்­னொரு சூப்­ப­ரான பாது­காப்பு அம்சம். நம் செல் போனை நாம் PIN no போட்டு பாது­காப்­பது போல் , இந்த Telegram செய­லியை open செய்யும் போதும் PIN no கேட்­கும்­படி செட் செய்­யலாம். இதனால், போனின் PIN no போட்டு ஒரு­வ­ருக்கு போனை பயன்­ப­டுத்த குடுத்­தாலும், அந்த நபர், நமது Signal உரை­யா­டல்­களை பார்க்­கா­த­படி தடுக்க முடியும். மேலும் குழந்­தைகள் விளை­யாட்­டாக மொபைலை பயன்­ப­டுத்­தி­னாலும், அவர்கள் தெரி­யாமல், Signal குரூப்­பிலோ , வேறு நபர்­க­ளுக்கோ தேவை­யில்­லாத மெசேஜ் களை அனுப்­பு­வதை தடுக்­கலாம். குழந்­தைகள் போனை வைத்து விளை­யா­டும்­போது, whatsapp குழுக்­களில் அவர்கள் தெரி­யாமல் போட்­டோவோ , ஏதோ தட்­டச்சி செய்து போடு­வதை பார்த்­தி­ருக்­கிறோம்… அது Signalஇல் தடுக்­கலாம்.

07. Username Option — Thus Hiding Phone Number from Unknown persons

Telegram போன்றே Signalல் நமக்­கென ஒரு நிரந்­தர பெயரை பதிவு செய்­து­கொள்­ளலாம். அதா­வது Facebook இல் நம் account ற்கு , ஒரு நிரந்­தர அடை­யாள பெயர் வைப்­ப­துபோல்..( https://www.facebook.com/SujiRBaskaran ) மாதிரி… Telegramமிலும் Signalலிலும் , இது­போன்று நிரந்­தர Username செட் செய்­து­கொள்­ளலாம். இதன் மூலம், உங்கள் மொபைல் எண்ணை மற்­ற­வ­ருடன் பகி­ராமல் உங்கள் Username ஐ ( https://signal.me/SujiR) குடுத்து மட்டும் chat செய்­து­கொள்­ளலாம். இது பெண்­க­ளுக்கு மிகவும் பய­னுள்ள பாது­காப்பு வசதி.

எவ­ரேனும் உங்­க­ளுக்கு Username பயன்­ப­டுத்தி தவ­றான மெசேஜ் அனுப்ப நேர்ந்­தாலும், அவர்­களை நிரந்­த­ர­மாக Block செய்­து­வி­டலாம். அந்த நபரால் உங்­களை தொடர்­பு­கொள்ள இய­லாது. ஏனென்றால், அவர்­களால் உங்கள் மொபைல் எண்ணை பார்க்க இய­லாது. ஆக, block செய்த பின் நம்­பரை வைத்து call செய்­வது, மிரட்­டு­வது போன்ற தொந்­த­ர­வுகள் கிடை­யாது.

08. Account Self-Destruction after particular time period

இந்த வசதி மூலம், உங்­க­ளு­டைய Signal account ஐ நீங்கள் குறிப்­பிட்ட காலம் சில கார­ணங்­களால் பயன்­ப­டுத்­தா­விட்டால் தானாக account delete ஆகும்­படி செட் செய்து கொள்­ளலாம்.

09. Completely Open Privacy Policy

Whatsapp இல் உள்­ளது போல் குள­று­ப­டி­யான Privacy Policy இதில் கிடை­யாது. Whatsapp ஒரு Commercial செயலி, அவர்கள் பணம் சம்­பா­திப்­ப­தற்கு ஏற்­ற­வ­கையில் policy ஐ மாற்­றிக்­கொண்டே இருப்பர். நாம் facebook ன் privacy policy பற்றி பல ஊட­கங்­களில் நாற­டித்­தது அனை­வ­ருக்கும் தெரியும். Whatsapp உம் அவர்­க­ளு­டை­ய­து­தானே.. Signal ஒரு open source செயலி என்­பதால், அந்த மாதிரி இல்­லாமல், திறந்­த­நிலை பொலிசி யாகவே உள்­ளது.

Security and Privacy options பற்றி பார்த்தோம். Signal ன் அடுத்த தன்­னிச்­சை­யான வச­தி­களை பார்ப்போம்.

03. Groups, Super Groups and Channels:

Whatsapp இல் Groups பற்றி கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். குழு போன்று அமைக்கும் வசதி. Whatsapp இல் 256 நபர்கள் மட்­டுமே ஒரு குழுவில் இருக்­கலாம். Broadcast என்றும் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். Whatsapp இல் Broadcast மூலம் நமது Contacts ல் உள்­ள­வர்­க­ளுக்கு மட்டும் எத்­தனை நபர்­க­ளுக்கு வேண்­டு­மா­னாலும் மெசேஜ் அனுப்­பலாம்.

ஆனால், இந்த வச­தி­களை கொஞ்சம் வித்­யா­ச­மாக, Telegram வழங்­கு­கி­றது.

Signalல் குழுக்­களை Groups மற்றும் Super Groups என்று இரண்டு வகை­யாக அமைக்­கலாம். இது அல்­லாமல், Channels என்ற வச­தியும் உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.

Groups:

சிறிய குழு­வாக இயக்­கு­ப­வர்­க­ளுக்கு என்று இந்த வகை. இந்த குரூப்பில் 200 நபர்கள் வரை அதி­க­பட்சம் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கலாம். இந்த குழுக்­களை Private ஆக பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு என்ற நோக்கில் உள்­ளது. அதா­வது, பள்ளி தோழர்கள், நெருங்­கிய உற­வி­னர்கள், அலு­வ­லக நண்­பர்கள் என்று சிறிய, 200 நபர்­க­ளுக்கு கீழ் இணைத்து தகவல் பகிர்­ப­வர்­க­ளுக்கு பொருந்தும். இந்த குழு­விற்கு என நிரந்­தர Username அமைக்க முடி­யாது. Invite Link மூலம் மட்­டுமே நபர்­களை இணைய சொல்­லலாம். அல்­லது நாமாக குழுவில் நபர்­களை இணைக்­கலாம்.

Super Groups:

இந்த வகை குழுக்கள், 5000 நபர்கள் வரை அதி­க­பட்­ச­மாக உறுப்­பி­னர்­களை கொண்­டி­ருக்­கலாம். இந்த குழு­விற்கு என்று ஒரு நிரந்­தர Username அமைக்க முடியும். அதா­வது, http://Signal.me/ShareWALL (இதில் @ShareWALL என்­பது குழுவின் நிரந்­தர பெயர்) என்று அமைக்­கலாம். இதை Public ஆக share செய்­வதன் மூலம் யார் வேண்­டு­மா­னாலும் இணை­யலாம் என்ற நோக்கில் குழு துவங்­கு­ப­வர்­க­ளுக்கு என்று பிரத்­தி­யே­க­மாக உள்ள வசதி. மேலும் இவ்­வகை குழுக்­களில், நாம் ஒரு பதிவை தவ­று­த­லாக பதிந்­து­விட்டால், அதை நம் போனில் delete செய்தால் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் delete ஆகும் வசதி உள்­ளது.

நாம் Whatsapp இல் பலர், ஒரு குழுவை ஆரம்­பித்து, 256 நபர்கள் என குழு நபர் வரை­முறை முழு­வதும் நிரம்பி, மற்­றொரு குழு ஆரம்­பித்து, அதற்கு குரூப்­பெயர்-2 ,குரூப்­பெயர்-3 என்று ஒன்­றன்பின் ஒன்­றாக துவங்கி , ஒரே பதிவை அனைத்து குழுக்­க­ளிலும் பதி­வதை பார்த்­தி­ருக்­கிறோம்…. இந்த மாதிரி தேவை­யில்­லாத data waste ஐ 5000 நபர் வரை வைத்து குழு துவங்கும் வசதி Signalல் நிச்­சயம் பயன் தரும்.

Channels:

Whatsapp இல் Broadcast என்ற வசதி மூலம், நம் போனில் உள்ள contact களுக்கு அனை­வ­ருக்கும் மட்­டுமே ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்­ப­மு­டியும்.

Signal இல் உள்ள இந்த Channel வச­தியும் தக­வல்­களை Broadcast செய்­வ­தற்­காக உள்­ள­துதான். ஆனால், Signal Channel களில் (Unlimited) எண்­ணற்ற நபர்­களை இணைக்க முடியும். நிரந்­தர பெயர் செட் செய்து கொள்­ள­மு­டியும். Group லும் , Super Group லும் உறுப்­பி­னர்­களும் பதி­வுகள் போடலாம். ஆனால், Channel ல் அதை create செய்­தவர் மட்­டுமே பதி­வுகள் போட முடியும். உறுப்­பி­னர்கள், பதி­வு­களை பார்­வை­யிட்டு, மற்ற குழுக்­களில் வேண்­டு­மானால் Forward செய்­யலாம்.

உதா­ர­ண­மாக, இது ஒரு தொலைக்­காட்சி சேனல் போன்­றது தான். விருப்­பப்­பட்ட சேனலை வைத்தால், அவர்கள் ஒளி­ப­ரப்பும் நிகழ்ச்­சி­யினை மட்­டுமே நாம் காண முடியும். நம்மால் டிவி யில் ஏதும் செய்ய முடி­யாது அல்­லவா. இந்த வசதி மூலம், பொது குழுக்­க­ளான, தமிழ் மருத்­துவம், சமையல் குறிப்­புகள், சினிமா செய்­திகள் என்று சன் டிவி , ராஜ் டிவி என்று சேனல்­க­ளுக்கு நிரந்­தர பெயர் இருப்­ப­துபோல் நிரந்­தர பெயர் வைத்து சேனல்­களை அமைக்­கலாம். Business பயன்­பாட்­டிற்கு கூட இந்த வகை சேனல்கள் பெரிதும் பயன்­படும்.

 04. Rich Multimedia - Stickers, GIFs, Photo Editor, Audio, Video Player

Telegram இல் மேம்­பட்ட பல்­லூ­டகம் (Rich Multimedia) support இருக்­கி­றது. Hike Messenger ல் உள்­ள­துபோல் Stickers பயன்­ப­டுத்த முடியும். மேலும் GIF அனி­மே­ஷன்கள், Smiley கள் , Telegram ன் உள்­ளேயே இயங்கும் Internal Audio, Video player கள், GIF அனி­மேஷன் உரு­வாக்கும் creator, HD விடி­யோவை சிறிய file size ஆக சுருக்கும் வீடியோ compressor கள், File Compression ஆகாத,image clarity குறை­யாத Photo பதி­வேற்­றங்கள், Mask கள், Photo Editor கள் என இதன் மல்­டி­மீ­டியா வச­திகள் நீண்டு கொண்டே போகி­றது.

இந்த மாதிரி வச­திகள் Whatsapp உட்­பட எந்த தகவல் பகி­ரி­க­ளிலும் கிடை­யாது.

05. Rich Message Communication — BOTs, Message Editing / Revoking

Signal இல் மட்­டுமே முதன் முதலில் BOT Support எனப்­படும் செயற்கை நுண்­ண­றிவு (Artificial Intelligence) உத­வியில் செய­லியில் பல்­வேறு வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் அமைப்பு இருந்­தது. பின்னர் தான் இவ்­வ­சதி Facebook Messenger, Google Allo, Wine Private Messenger போன்ற செய­லி­களில் வர தொடங்­கி­யது. மேலும் பல வச­தி­களும் (Invite Link, Forward Arrow, 2FA, Message Editing / Revoking, BOT Support போன்­றவை) , Signal செய­லியில் இருந்து copy அடித்தே பல செய­லிகள் அந்த வச­தி­யினை தங்கள் செய­லி­களில் ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.

Signal இல் BOT Support இருப்­பது போல் மேலே சொன்ன வேறு எந்த செய­லி­யிலும் அவ்­வ­ளவு சிறப்­பாக இருப்­ப­தில்லை. எல்­லா­வற்­றிற்கும் ஒரு BOT உள்­ளது Signal இல். ஆடியோ file ஐ தேட, வீடியோ file ஐ தேட , விக்­கி­பீ­டியா article தேட, குழுவை நிர்­வ­கிக்க, youtube வீடீ­யோக்­களை பதி­வி­றக்க, ஆங்­கிலம் கற்­றுக்­கொள்ள, ஒரு மொழி­யி­லி­ருந்து, இன்­னொரு மொழியில் கோப்­பு­களை மொழி­பெ­யர்க்க, எந்த நாட்­டு­டைய நேரம் மற்றும் Weather Report பார்க்க, நாம் courier அனுப்­பிய parcel ன் shipment track செய்ய என பல Value Added சேவைகள் உண்டு. BOT களுக்­கென்றே வெப்சைட் உள்­ளது இந்த லிங்க்கில் . (Whatsapp இல் BOT support வரு­வ­தற்கே பல காலம் ஆகும்.. ;-( )

அது போல், Signalஇல் எந்த ஒரு பதி­வையும், Chat ஐ யும் அனுப்­பிய பிறகு 48 மணி நேரம் வரை Edit செய்யும் வச­தியும், பெறு­ப­வர்கள் பார்க்கும் முன் Delete செய்யும் வச­தியும் உள்­ளது. இந்த வசதி இனிமே தான் Whatsapp இல் வரப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

6. Instant Views, HTML5 Games, Telegra.ph Publishing Platform, etc..

Signalஇன் வச­தி­களை எழு­து­வ­தற்கே கை வலிக்­கி­றது. வச­தி­களை எப்­போதும் பெருக்­கிக்­கொண்டே போகி­றது இந்த Signal செயலி. சமீ­பத்­திய Update ல் Instant View, மற்றும் Telegra.ph என்னும் Publishing வச­தி­களை அறி­மு­கப்­ப­டுத்தி அசத்­தி­யது. இந்த வச­திகள் மூலம் website களை , Signal உள்­ளேயே , browser உதவி இல்­லாமல் , page load தாமதம் ஆகாமல் Instant ஆக Blog Article களை படித்து பார்க்க முடியும்.

7. File Sharing — Any Types, Any Formats and Any Size

Signalல் மட்­டுமே எந்த வகை கோப்­பாக இருந்­தாலும் பகிரும் வசதி உண்டு. மேலும் 1.5 GB வரை­யி­லான கோப்­பு­களை அனுப்­பலாம். HD படங்­களே பகிர முடியும்.

MP3, MP4, JPG, MOV, AVI, ZIP, RAR, DOC, XLS, PPT, PDF, என எந்த format இல் file கள் இருந்­தாலும் support ஆகும்.

அதிலும் மற்ற செய­லிகள் காட்­டிலும் DATA optimization technique மூலம் Data செலவு பெரி­தாக ஆகாமல் மேற்­கூ­றிய பெரு­வா­ரி­யான வச­தி­க­ளையும் தரு­வ­தென்­பது மற்ற செய­லி­களால் முடி­யாத காரியம். Whatsapp மற்றும் Facebook செய­லி­களை நீக்­கி­னாலே நமது மொபைல்­களில் 30% சத­வி­கிதம் Battery Charge நீடிக்கும் என்­பது அனை­வரும் அறிந்­ததே. ஆனால் Signal இயங்­கு­வ­தற்கு அதிக திறன்­வாய்ந்த phone களோ, அதிக battery Chargeஜோ தேவை­யில்லை.

இப்­படி பல வச­திகள் Signalஇல் இருப்­பினும் சிலர் நீண்ட நாள் Whatsapp பயன்­ப­டுத்­தி­விட்டு, திடீ­ரென Signal செய­லியில் மாறு­வ­தற்கு தயக்கம் காட்­டு­கின்­றனர். இது ஒரு adamant மற்றும் addicted behaviour என்று நிபு­ணர்கள் சொல்­கி­றார்கள்.

இலங்­கையில் அதி­க­ள­வா­ன­வர்கள் தமது தொடர்­பா­ட­லுக்­காக வட்ஸ் அப்   போன்ற செய­லி­களைப் பயன்­ப­டுத்­தி­வ­ரு­கின்ற நிலையில் மிகவும் பாது­காப்­பான செயலி எது என்­பது தொடர்­பாக அறி­வ­தற்­காக இலங்­கையில் இது குறித்த மேம்­பட்ட அறிவைக் கொண்ட சிலரில் ஒரு­வ­ரான தொடர்­பாடல் துறை ஆலோ­ச­கரும் ஆய்­வா­ள­ரு­மான சஞ்­சன ஹத்­தோ­டு­வ­விடம் வின­வினேன்.

'இது பதி­ல­ளிப்­ப­தற்கு கடி­ன­மான கேள்­வி­யாக இருக்­கின்­றது ஒன்­லைனில்  யாரு­ட­னேனும் தொடர்­பு­கொள்­கின்­ற­போதும் நாம் எவற்றைப் பேசு­கின்றோம் எப்­படிப் பேசு­கின்றோம்  என்­பது தொடர்­பாக மிக மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். நாம் குரல் மூல­மான தொடர்­பா­டலை மேற்­கொள்­கின்ற உங்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் இன்­னு­மொரு தரப்­பி­னரால் ஒலிப்­ப­தி­வு­செய்­யப்­ப­டலாம் என்­பது தொடர்­பாக விழிப்­பு­ணர்­வுடன் இருக்­க­வேண்டும். இதில் நீங்கள் தொடர்­பா­டலில் ஈடு­படும் மற்­றைய முனையில் யார் உள்­ளார்கள் என்­பது குறித்து உங்­க­ளுக்கு எந்த நேரத்­திலும் அச்­சொட்­டாக கூறி­வி­ட­மு­டி­யாது. எனவே இந்தக் கால­கட்­டத்தில் நீங்கள் தொடர்­பா­டலில் ஈடு­ப­டு­பவர் ஒரு நெறி­மு­றை­யுள்ள ஒரு­வ­ராக இருந்­தாலே தவிர நீங்கள் தொடர்­பா­டலில் ஈடு­படும் போது  எவ்­வித பாது­காப்பு உத்­த­ர­வா­தமும் கிடை­யாது  என்ன நடக்கும் என உங்­க­ளுக்கு தெரி­யாது. ஆகையால் இது தொடர்­பாக நாம் மிகவும்  எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும்.  ரஞ்சன் ராம­நா­யக்க போன்ற ஒரு நிலை ஏற்­படும் போது எந்த வித­மான பாது­காப்பும் கிடை­யாது. உலகில் பல ரஞ்­சன்கள் இருக்­கக்­கூடும்.

நான் உங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போது அதை­நீங்கள் பதி­வு­செய்­வது போன்று அவர்கள் உங்­க­ளு­ட­னான தொடர்­பா­டல்­களை உல­கி­லுள்ள ரஞ்­சன்கள் ஒலிப்­ப­தி­வு­செய்­யக்­கூடும். இருந்­த­போ­திலும் பாது­காப்பு என்று வரு­கின்­ற­போது அதா­வது ஒரு தொடர்­பா­டலில் நீங்­களும் இன்­னு­மொ­ரு­வரும் ஈடு­படும் போது அதனை வேறு தரப்­பினர் இடை­ம­றித்து செவி­ம­டிக்க முடி­யாமல் தொடர்­பா­டலின் கண்­ணி­யத்­தன்­மையை பேணு­வது எவ்­வாறு என்­கின்­ற­போது அது வேறு­வ­கை­யான கேள்­வி­யாகும். அப்­ப­டி­யாக பாது­காப்­பான தொடர்­பாடல் செய­லி­யாக நாம் பொது­வாக பரிந்­து­ரைப்­பது Signal -சிக்னல் என்ற செய­லி­யை­யாகும். அது அன்ட்ரொய்ட், மெக் அனைத்து தளங்­க­ளிலும் இயங்­கக்­கூ­டிய செய­லி­யாகும். சிக்னல் செய­லி­யூ­டாக எழுத்து மூல­மாக தக­வல்­களை அனுப்­பு­வ­தற்கும் ஆவ­ணங்­களைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்கும் வீடியோ அழைப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கும் மற்றும் குரல்­மூ­ல­மான அழைப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கும் இயலும். வட்ஸ் அப்­புடன் ஒப்­பி­டு­கையில் சிக்னல் செய­லி­யி­னூ­டாக மேற்­கொள்­ளப்­படும் குரல்­மூல அழைப்பின் துல்­லியத் தரா­தரம் பலரை வியப்பில் ஆழ்த்தும் அள­விற்கு சிறப்­பாக உள்­ளது.  உங்­க­ளு­டைய வாச­கர்­களை அதி­க­மாக குழப்ப நான் விரும்­ப­வில்லை. அந்­த­வ­கையில் வட்ஸ்அப் ஐ மெசேஜ் திரிமா வயர் டெலி­கிராம் என்­பன நல்­ல­தல்ல என நான் கூற­வ­ர­வில்லை. இது நீங்கள் யார் ? யாருடன் நீங்கள் தொடர்­பா­டலில் ஈடு­ப­டு­கின்­றீர்கள் ? எந்த தொடர்­பாடல் சாத­னத்தை நீங்கள் பயன்­ப­டுத்­து­கின்­றீர்கள் ? எங்­கி­ருந்து தொடர்­பா­டலில் ஈடு­ப­டு­கின்­றீர்கள் ? நீங்கள் எந்த வகை­யான விட­யங்­களில் கருத்­துக்­களைப் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கின்­றீர்கள் ? என்­பதைப் பொறுத்தே நீங்கள் எந்தச் செய­லியைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்­பது தங்­கி­யுள்­ளது. எனவே இது சிக்­க­லான விடயம். பாது­காப்புத் தொழில்சார் நிபுணர்கள் பிரத்தியேகமான பதிலை வழங்குமுன்னர் நீங்கள் யார் என்பது தொடர்பில் மிகவும் ஆழமாகச்சென்று தேடுவார்கள். ஆனால் பொதுவாக உங்களைப் போன்ற ஒருவருக்கு நாங்கள் பரிந்துரைப்பது சிக்னல் போன்ற ஒரு செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும். எட்வேட் ஸ்னோடன் உட்பட பல முக்கியஸ்தர்களும் தாம் நம்புகின்ற தொடர்பாடல் தளமாக சிக்னலையே பரிந்துரைத்திருக்கின்றனர்.அந்த வகையில் நானும் சிக்னல் என்ற செயலியைத் தான் பயன்படுத்துகின்றேன்.''

Whatsapp இல் உள்ள Voice Calling, மற்றும் Video Calling வசதிகள் தான் உங்களை Telegram செயலிக்கு மாறுவதை தடுக்கிறது என்றால், Video மற்றும் Voice Calling வசதியை HD தரத்தில் Telegram செயலிஅடுத்த update இல் வழங்க இருக்கிறது. HD துல்லியதில் அழைப்புகளை மேற்கொள்ளலாம். Whatsapp இன் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள் வசதி பல பேருக்கு சலிப்பை தந்ததே தவிர வசதியாக இருந்ததில்லை. விட்டு விட்டு கேட்கும் அழைப்புகள். நாம் பேசுவது நமக்கே கேட்கும் கொடுமைகள், வீடியோ அழைப்பை துவங்கிய உடனே போன் hang ஆகும் செயல் என வசதி என்ற பெயரில் நம் மொபைல் போனையும் ,data வையும் , நேரத்தையும் பதம் பார்த்ததே அதிகம்.

Whatsapp போல் Signalஒரு Commercial application இல்லாததால், விளம்பர செலவுகள் செய்வதில்லை. எங்களை போன்ற பயன்படுத்துவர்கள் வாயிலாகவே இந்த Signalஇவ்ளோ பயனாளர்களை கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் சீக்கிரம் மாறிவிடுங்கள் மக்களே!.

புதிது புதிதாக வசதிகள் எங்கு கிடைக்கிறதோ பயன்படுத்தி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். பழகிவிட்டோம் என்பதற்காக பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்காதீர்கள் . மாற்றம் ஒன்றே நிரந்தரம். :-)

இந்த Signal App ஐ Android போனில் Play Store றிலும், Apple iOS போனில் App Store றிலும் search option சென்று Telegram என்று தட்டச்சு செய்தால் கிடைக்கும் பக்கத்தில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

-அருண் ஆரோக்கியநாதன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26