பழைய மொந்தையில் புதிய “கள்” தேவையா ?

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 03:46 PM
image

தமிழர் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பய­ணத்தில் அஹிம்சை வழி­யிலும் சரி,  ஆயுத வழி­யிலும் சரி முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சி­களின் போது பிள­வு­களும் பிரி­வு­களும் விமர்­ச­னங்­களும் இல்­லா­மில்லை.

அவ்­வா­றி­ருக்க, 1986இற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் தமிழ் மக்­களின் ஏகப்­பி­ர­தி­நி­தித்­துவ தலை­மையால் 2001 ஒக்­டோபர் 20இல் மென்­போக்கு அர­சியல் தரப்­புக்­களும் ஆயு­த­வழி வந்த அர­சியல் விடு­தலை இயக்­கங்­களும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான அர­சியல் நகர்­வு­களை செய்யும் ஒரே நோக்­கத்­துடன் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் கருத்து வேறு­பா­டு­க­ளையும் கடந்­த­கால கசப்­பு­ணர்­வு­க­ளையும் கடந்தே இந்தக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

தாயகம், தேசியம், சுய­நிர்­ணயம் என்ற தமிழ்த் தேசிய அடிப்­படைக் கோட்­பா­டு­களை பிர­தான கொள்­கை­க­ளாகக் கொண்டு தேசிய அர­சி­யலில் இக்­கூட்­ட­மைப்பு செயற்­பட ஆரம்­பித்­தது. 2009 மே 18 வரையில் நெறி­த­வ­றாது சென்ற கூட்­ட­மைப்­பினுள் அதன் பின்­ன­ரான காலத்தில் புயல் வீச ஆரம்­பித்­தது.

2010 பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு அண்­மித்த காலப்­ப­கு­தியில் ஆச­னப்­பங்­கீட்டு சர்ச்சை ஏற்­ப­டவும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி வெளி­யே­றி­யது. 2013இல் புளொட் அமைப்பு கூட்­ட­மைப்பில் இணைந்­தது. 2015 பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்­ன­ரான காலத்தில் ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி பல்­வேறு அதி­ருப்­தி­களை வெளி­யிட்டு வெளி­யே­றி­யது.

இதே­நேரம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வலிந்த அழைப்­பினால் அர­சி­ய­லுக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக செயற்­பட்ட நீதி­ய­ரசர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களில் அதி­ருப்­தி­களை வெளி­யிட ஆரம்­பித்து ஈற்றில் வெளி­யேறி தமிழ் மக்கள் கூட்­டணி என்ற அர­சியல் கட்­சியை ஆரம்­பித்தார்.

அது­போன்று, மாகா­ண­ச­பையில் அமைச்­சர்­க­ளாக இருந்த பொ.ஐங்­கர­நேசன், அனந்தி சசி­த­ரன் ஆகியோர் கூட்­ட­மைப்பில் அதி­ருப்­தி­யுற்று வெளி­யேறி கட்­சி­களை ஆரம்­பித்­தனர். கடை­சி­யாக கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோ­வி­லி­ருந்து வெளி­யே­றிய அதன் செய­லாளர் ந.சிறி­காந்தா தலை­மை­யி­லான அணி­யி­னரும் தமிழ்த் தேசியக் கட்சி என்ற புதிய கட்­சியை ஆரம்­பித்­துள்­ளனர்.

ஜன­நா­யக தளத்தில் புதிய கட்­சிகள் தோற்­றம்­பெ­று­வது பல­மா­ன­தாக இருந்­தாலும் சிறு­பான்மை தேசிய இன­மாக இருக்கும் தமி­ழி­னத்­துக்கு கட்­சி­களும் அர­சியல் அணி­களும் அதி­க­ரித்துச் செல்­வ­தா­னது அவ்­வி­னத்தின் பிர­தி­நி­தித்­து­வங்களின் எண்ணிக்கை  மீதான கேள்­வியை இயல்­பா­கவே ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய தரப்­பினர் அனை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­ட­வில்லை, திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்ட கட்­ட­மைக்­கப்­பட்ட அர­சியல் கட்­ட­மைப்­பாக இல்லை, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி ஆச­னப்­பங்­கீட்­டி­லி­ருந்து அனைத்து தீர்­மா­னத்­திலும் ஆக்­கி­ர­மிப்பு செய்­கின்­றது, தமி­ழ­ர­சுக்­கட்சி பங்­கா­ளிக்­கட்­சி­களை திட்­ட­மிட்டு ஓரம்­கட்­டு­கின்­றது, சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் ஏதேச்­ச­தி­காரப் போக்கில் செல்­கின்­றார்கள், ஒட்­டு­மொத்­த­மாக தமிழ்த் தேசியக் கோட்­பாடு, கொள்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­விட்­டது, ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியின் பக்கம் சாய்ந்து விட்­டது, பொறுப்­புக்­ கூ­றலில் பெரும்­பான்­மை­யின தலை­வர்­களை காப்­பாற்றி விட்­டது இவ்­வாறு பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளையே அடுக்கி வந்­தார்கள்.

அது­மட்­டு­மன்றி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வர்கள் 'கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக தேர்தல் அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்டு கொள்கை ரீதி­யான வலு­வான கூட்­ட­ணி­யொன்று' அவ­சிய­மென்றும் தொடர்ச்­சி­யாக பொது­வெளியில் கருத்­துக்­களை முன்­வைத்து வந்­தார்கள்.

இத­ன­டிப்­ப­டையில் சிவில் மற்றும் மத அமைப்­புக்­களின் பங்­கேற்­புடன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய அனைத்து தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைக்கும் வகை­யி­லான கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­மு­யற்­சி­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. எனினும் அதில் முழு­மை­யான வெற்­றியைக் கண்­டி­ருக்க முடி­ய­வில்லை.

குறிப்­பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் கொள்கை ரீதி­யான கார­ணத்­தினை முன்­வைத்து மாற்று அணி­யி­லி­ருந்து வெளி­யே­றியி­ருந்­தார்கள். ஒரு தரப்பு வெளி­யே­றிய நிலையில் ஏனைய அனைத்து தரப்­புக்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்­தலாம் என்ற எதிர்­பார்ப்பு மேலோங்­கி­யது.

அந்த எதிர்­பார்ப்­பினை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கட்­சியை ஆரம்­பித்த விக்­னேஸ்­வரனை கூட்­ட­ணியின் தலைவராக கொண்டு கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய அர­சியல் தரப்­புக்களை ஒருங்­கி­ணைக்கும்  நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருந்­தன.

கூட்­ட­மைப்­புக்கு நிக­ரான மாற்­றுத்­த­ரப்பு அவ­சியம் என்ற கருத்­தி­யலை ஏற்­றுக்­கொண்­டி­ருந்­த­வர்­களும் சிவில், மத தரப்­பி­னரும் விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய ஒத்­து­ழைப்­புக்­களை நல்­கி­னார்கள். தற்போதும் நல்கி வருகிறார்கள்.

 கூட்­ட­ணிக்­கான அடிப்­படை விட­யங்­களை ஏற்­ப­டுத்தி, புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­யொன்றை மேற்­கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­தற்கு கார­ண­மான விட­யங்­களை களைந்த கூட்­ட­ணி­யொன்­றையே உரு­வாக்­கு­வ­தற்கும் பல்­வேறு பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன.

ஆனால், புதிய கூட்­ட­ணியை கட்­ட­மைப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் ஆரம்­பத்­தி­லி­ருந்தே நிலை­மைகள் நாளுக்கு நாள் மோச­ம­டை­கின்ற போக்கே வெளிப்­பட்டு வரு­கின்­றது.

ஒரு­வேளை புதிய கூட்­ட­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டாலும் அதன் கட்­ட­மைப்பு சார் அடிப்­ப­டையில் 'பழைய மொந்­தையில் புதிய கள்­ளா­கவே அது இருக்­குமோ' என்ற அச்­ச­மான நிலை­மைகள் அண்­மைய நாட்­களில் எழுந்­துள்­ளன.  

அந்த அச்­சங்­க­ளுக்கு கார­ணங்கள் இல்­லா­ம­லில்லை, விக்கி தலை­மை­யி­லான கூட்­டணி அமை­வ­தற்­கான ஆரம்­ப­கட்டப் பேச்­சுக்­களின் போது, கொள்­கை­ய­ளவில் இணக்­கப்­பா­டுகள் இருந்­தாலும் கூட, கூட்­ட­ணிக்­கான அர­சியல் குழு­வுக்­கான 11 உறுப்­பி­னர்கள் நிய­ம­னத்தில் தமிழ் மக்கள் கூட்­டணிக்கு ஆறு அங்­கத்­து­வங்கள் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.க்கு மூன்று அங்­கத்­து­வங்கள் என்றும், தமிழ்த் தேசியக் கட்சி (சிறி­காந்தா –- சிவா­ஜி­லிங்கம் தரப்பு), அனந்தி தரப்பு தலா ஒவ்­வொன்றை பெறு­மென்றும் ஐங்­க­ர­நேசன் ஈற்றில் இணைந்தால் ஈ.பி.ஆர்.எல்.எப் இட­மி­ருந்து ஒரு அங்­கத்­து­வத்­தினை பெற்று அவ­ருக்கு வழங்­கு­வ­தென்றும் தமிழ் மக்கள் கூட்­ட­ணி என்றும் முன்மொழிந்தாகிவிட்டது.

தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் இந்த அறிவிப்பால், குறைந்த அங்­கத்­து­வத்­தினை கொண்­டி­ருக்கும் தரப்­புக்கள் ஒன்­றி­ணைந்து சம­பங்­கா­ளித்­து­வத்­தினை கோரு­வ­தென தீர்­மா­னித்­தன. இதனால் முத­லா­வது கட்­ட­மாக கருத்­தியல் முரண்­பா­டுகள் எழுந்­தன. கூட்டணி­யொன்றில் சம­பங்­கா­ளித்­துவம் வழங்­கு­வது சாத்­தி­ய­மா­காத விட­ய­மாக இருந்­தாலும் அங்­கத்­துவ ஒதுக்­கீட்டில் அணு­கு­முறை ரீதி­யான கலந்­து­ரை­யா­டல்கள் மூல­மாக இந்த முரண்­பா­டு­களை தவிர்த்­தி­ருக்க முடியும். ஆனால் அதற்­கான சந்­தர்ப்­பங்கள் இருந்­தி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் அடுத்­தக்­கட்­ட­மாக, பெரும் இழு­ப­றி­க­ளையும் அதி­ருப்­தி­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற விட­ய­மாக, கூட்­ட­ணியை பதிவு செய்தல் மற்றும் பாரா­ளு­மன்ற ஆசன ஒதுக்­கீடு ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன. முத­லா­வ­தாக, கூட்­டணி பதிவு தொடர்­பான விட­யத்­தினை எடுத்­துக்­கொண்டால், இந்தக் கூட்­ட­ணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்­டுமே பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சி­யாக இருக்­கின்­றது.

ஆகவே இந்த கூட்­ட­ணியின் அர­சியல் பிர­சன்­னத்­துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சியே அச்­சா­ணி­யாக இருக்­கின்­றது என்று கொள்ள முடியும். இந்­நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்­பா­னது தனது கட்­சியின் பெயரை 'தமிழர் ஐக்­கிய முன்­னணி' என்று பெயர் மாற்­று­வ­தா­கவும் நிறை­கு­டத்­தினை சின்­ன­மாக கொள்­வ­தென்றும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு அறி­வித்து விட்­டது. ஆனால் தமிழ் மக்கள் கூட்­டணி தரப்­பி­னரைப் பொறுத்­த­வ­ரையில், 'தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி' என்ற பெயரே பொருத்­த­மா­ன­தென்றும் 'பொங்கல் பானையே' சின்­ன­மெ­னவும் 11உறுப்­பி­னர்கள் கொண்ட அர­சியல் குழு­வினை கூட்­ட­ணி­யாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வி­டத்தில் பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும் என்றும் நிலைப்­பா­டாக கொண்­டி­ருக்­கின்­றது.

ஈ.பி.ஆர்.எல்.எப் ஏலவே கட்­சியின் பெயர் மாற்­றத்­தி­னையும் புதிய சின்­னத்­தி­னையும் அறி­வித்து விட்ட நிலையில் கூட்­ட­ணியின் புதிய பெயர் மற்றும் சின்ன முன்­மொ­ழிவை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­வ­தென்­பது நெருக்­க­டியை தோற்­று­வித்­துள்­ளது.

அதே­நேரம், 11உறுப்­பி­னர்­களைக் கொண்ட அர­சியல் குழு­வினை பதி­வு­செய்­வதும் நடை­முறை சாத்­தி­ய­மற்ற விடயம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பு விவா­திக்­கின்­றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு தற்­போ­துள்ள மத்­திய குழு­வினை மாற்றி கூட்­ட­ணிக்­கான அர­சியல் குழு­வினை மத்­திய குழு­வாக உள்­ளீர்ப்­ப­தென்றால் கட்­சியின் வரு­டாந்த மாநாட்­டி­லேயே அதனை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக அத்­த­ரப்பு கூறு­கின்­றது.

அத்­துடன், மாநா­டொன்று நடத்­தப்­ப­டாது தலைவர், செய­லாளர் மாற்­றத்­துடன் புதிய அர­சியல் குழு­வினை முன்­மொ­ழிந்து தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்­பு­கின்­ற­போது அது சட்­ட­வ­லி­தாக்­கத்­துக்கு உள்­ளா­காத நிலைமை ஏற்­ப­டலாம் என்றும் ஒரு­வேளை, அந்த முன்­மொ­ழி­வுக்கு எதி­ராக ஈ.பி.ஆர்.எல்.எப் இற்குள் இருந்தோ வெளி­யி­லி­ருந்தோ யாரா­வது நீதி­மன்­றத்­தினை நாடினால் இறுதி நேரத்தில் சட்டச் சிக்கல் ஏற்­ப­டு­கின்ற பட்­சத்தில் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­பது சிக்­க­லாகி விடும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரிய குறை­பா­டாக விளக்கும் பதிவு மற்றும் கட்­ட­மைப்­புக்கள் அற்ற நிலை­மையை விமர்­சித்து விட்டு பின்னர் நாம் எமது கூட்­ட­ணியை பதி­வு­செய்­யாது ஒரு கட்­ட­மைப்­பின்றி தேர்­தலை நோக்கிச் செல்­வது பொருத்­த­மற்­ற­தா­கவே அமையும் என்­பது தமிழ் மக்கள் கூட்­ட­ணியினரின்  இறுக்­க­மான நிலைப்­பாடாக இருக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில், கூட்­டணி பதிவு விட­யத்தில் மிக அண்­மித்த உதா­ர­ண­மொன்றை இங்கு குறிப்­பி­டு­வது சாலப்­பொ­ருத்­த­மாக இருக்கும். வடக்கு கிழக்­குக்கு வெளியில் செயற்­பட்­டு­வரும் ஜன­நா­யக மக்கள் முன்­னணி, தொழி­லாளர் தேசிய முன்­னணி, மலை­யக மக்கள் முன்­னணி ஆகி­ய­வற்றின் ஒருங்­கி­ணை­வுடன் தமிழ் முற்­போக்கு கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டது. இக் கூட்­ட­ணியை கட்­சி­யாக பதிவு செய்­வ­தற்கு தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரி­டத்தில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. அதற்கு சொற்ப காலம் அவ­சி­ய­மாக இருந்­த­மையால் அந்தப் பெயரை உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பயன்­ப­டுத்த முடி­யாது போனது.

ஆகவே அந்த மூன்று கட்­சி­களின் கூட்­ட­ணியின் சார்­பி­லான அர­சியல் குழுவின் பதவிப் பெயர்­க­ளுடன் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பெயர் ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி என்ற பெய­ருக்கு மாற்­றப்­பட்டு தேர்­தல்கள் ஆணை­ய­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்டு அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தது. ஆகவே கூட்­டணி பதிவும் அதற்­கு­ரிய பொறி­மு­றை­களும் பார­தூ­ர­மா­னவை அல்ல என்­பது இதன் மூலம் வெளிப்­பட்டு நிற்­கின்­றது.

எனவே, கூட்­டணி பதிவை வலி­யு­றுத்­து­ப­வர்­களும் அதனை ஏற்­றுக்­கொள்­வதில் நடை­முறைச் சிக்­கல்கள் இருப்­ப­தாக கூறு­ப­வர்­களும் மேற்­படி விட­யத்­தினை முன் உதா­ர­ண­மாகக் கொண்டு இத­ய­சுத்­தி­யு­ட­னான கலந்­தாய்­வு­களை செய்­வது முறை­யான மாற்று அர­சியல் அணியை உரு­வாக்­கு­வ­தற்கு வழி­சமைப்­ப­தாக இருக்கும்.

இத­னை­வி­டவும், விக்னேஸ்வரன் தலைமையில் இணையவுள்ள தரப்­புக்கள் ஒருவேளை இறுதித் தருணத்தில்  இணக்­கப்­பாட்டை எட்டி பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தாக இருந்­தாலும் அதற்­கான ஆசன ஒதுக்­கீ­டு­களில் அதி­ருப்­தி­யான நிலை­மை­களே நீடிக்கின்றன.

அந்த அணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் விக்னேஸ்வரன், அருந்தவபாலன், பேராசிரியர் சிவநாதன், சிற்பரன் உள்ளிட்ட ஐவர் களமிறங்கவுள்ளனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் உள்­ளிட்ட மூவர் கள­மி­றங்­க­வுள்­ளனர். தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தரப்பு தலா ஒவ்­வொரு வேட்­பா­ளர்கள் என்றும் ஐங்­க­ர­நேசன் இணைந்தால் அவ­ருக்கும் ஒரு ஆச­னத்தை சுரே­ஸி­ட­மி­ருந்து பெற்றுக் கொடுத்து வாய்ப்­ப­ளிப்பது என்றும் விக்­னேஸ்­வரன் பங்­கீட்டுக் கணக்­கொன்றை இறுதி செய்துள்ளார்.

இதற்கு அனைத்து பங்­கா­ளி­க­ளி­டத்­தி­லி­ருந்தும் ஏக­ம­ன­தான விருப்பு கிடைக்­கப்­பெற்­றதா என்றால் இல்லை. அவர்­களின் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட்­டதா என்றால் அது­வு­மில்லை என்றே கூறப்­ப­டு­கின்­றது. ஆக, ஆச­னப்­பங்­கீட்­டிலும் குடுமிச் சண்டையே நீடிக்கின்றது.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாற்­றான அணி என்­பது வெறு­மனே அதி­தீ­விர தேசிய பற்றை உதட்­ட­ளவில் வெளிப்­ப­டுத்தி நிற்­ப­தாக இருப்­பதை விடவும் கொள்­கைப்­பற்­று­று­தி­யு­டனும் இத­ய­சுத்­தி­யு­டனும் பல­மிக்­க­தாக அமை­வதே தமி­ழி­னத்­துக்கு அவ­சி­ய­மாக இருக்­கின்­றது.

அவ்­வா­றில்­லாது 'மாற்று அணி', 'மாற்­றுத்­த­லைமை' என்ற மாயையில் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்­தினை மலி­னப்­ப­டுத்தி பேரம்­பேசும் சக்­தியை இழந்து நிற்கும் தமிழ்த் தரப்­பினை நட்­டாற்றில் விட்­டு­வி­டக்­கூ­டாது.

அத­னை­வி­டவும் கேள்­விக்­கு­றி­யா­க­வி­ருக்கும் தமி­ழி­னத்­துக்­கான தலைமைத்துவ வெற்றிடத்தினை பூர்த்தி செய்யும் கடமையை மக்கள் தீர்மானத்துக்கு விட்டுவிடுவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்