மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கு ஓடக்கரை வழிகாட்ட வேண்டும் - டக்ளஸ் வேண்டுகோள்

Published By: Digital Desk 4

20 Jan, 2020 | 03:44 PM
image

மீனவர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்தும் வகையிலும் சிறந்த வழிகாட்டியாகவும் 'ஓடக்கரை' மாதாந்த சஞ்சிகை விளங்க வேண்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

மீன்பிடித் தொழிலாளரகள் தொடர்பான செய்திகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அனுசரணையுடன் அரசாங்க பத்திரிகை நிறுவனமான லேக் ஹாவுஸினால் வெளியிட்ப்படவுள்ள 'ஓடக்கரை' எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு இன்று (20.01.2020) லேக் ஹாவுஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் பிரதியை வெளியிட்டு வைத்து உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதன் மூலம்  அவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, நவீன தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை எமது மீன்பிடித் தொழிலாளர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓடக்கரை என்ற இந்த சஞ்சிகையின் வெளியீடுகள் அமைய வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

மேலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாரிய நம்பிக்கையுடன் தன்னிடம் வழங்கியிருக்கின்ற கடற்றொழில் அமைச்சினூடாக மீன்பிடித் தொழிலாளர்களினதும் அவர்கள் சார்ந்த மக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், மீன்பித் தொழிலாளர்களுக்கு விசாலமான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், வளர்ச்சியடைந்த நாடுகளில் பயன்படுத்ப்படுகின்ற மீன்பிடி முறைகளை ஒத்த நவீன முறைகளை நமது மீனவர்களுக்கும் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த முயற்சி வெற்றியடைய ஓடக்கரை என்ற சஞ்சிகையின் ஒத்துழைப்பும் அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36