சமஷ்டி தீர்வு விரைவில் சாத்தியம் : விக்கினேஸ்வரன் விசேட செவ்வி

Published By: J.G.Stephan

20 Jan, 2020 | 03:40 PM
image

உலக ஒழுங்கு மாறி­வ­ரு­கின்­றது. பார­தத்தின் பாது­காப்பு இலங்­கைவாழ் தமிழ் மக்­களை பாது­காப்­ப­தில்தான் தங்கியிருக்­கின்­றது என்ற நிலை உண­ரப்­பட்டு வரு­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில் எமது கோரிக்கையான சமஷ்டி தீர்வு விரைவில் சாத்­தி­ய­மாகும் என்று, வட­மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும், தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ள­ரு­மான நீதி­ய­ரசர் சி.வி.விக்­னேஸ்­வரன் வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வியில் குறிப்­பிட்டார்.

அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

கேள்வி:- ஆறா­வது ஆண்டு உல­கத் ­த­மிழர் திருநாள் விழாவில் உரை­யாற்­றி­ய­நீங்கள் தாய­கத்தில் உள்ள தமி­ழர்­களின் நிலை­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் உலகத் தமி­ழர்­களின் பிர­தி­பலிப்பு எவ்­வா­றி­ருந்­தது?

பதில்:- பல­ருக்கு எமது உண்­மை­நிலை தெரி­யா­தி­ருந்­தது. அதனை நான் வெளிப்­ப­டுத்­தி­யதை இட்டு நன்றி தெரி­வித்­தார்கள். சில­ருக்கு எமது விட­யங்கள் தெரிந்­தி­ருந்­தன. தாம் எவ்­வாறு உதவி புரிய முடி­யு­மென்று கேட்­டார்கள். மொத்­தத்தில் கூட்­டத்தை ஒழுங்கு செய்தோர் மன­ம­கிழ்­வுற்­றார்கள். ஏனென்றால் கூட்டம் தமது குறிக்­கோள்­களில் ஒன்றை எய்து விட்­ட­தாக உணர்ந்­தார்கள். அதா­வது தமி­ழர்­களின் தற்­போ­தைய நிலை­பற்றி இலங்­கையில் இருந்­து­வந்­தவர் போதி­ய­வா­று­ யா­வ­ருக்கும் உணர்த்­திய கார­ணத்­தினால்.

கேள்வி:- தமி­ழக, புதுச்­சேரி நீதித்­துறை தரப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்பு, நீதி­கோரி நிற்கும் தமி­ழர்­க­ளுக்கு எத்த­கைய சாத­க­மான நிலை­மை­களை உரு­வாக்கும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- இந்தியா முழுவதுமுள்ள சட்­டத்­த­ர­ணிகள் சங்­கங்­க­ளுக்கு இலங்­கை ­த­மி­ழர்கள் பற்­றிய நிலையை அவர்கள் எடுத்­து­ரைக்க முன்­வந்­தார்கள். சட்­டத்­த­ர­ணிகள் சங்­கங்­களின் ஒரு பாரி­ய ­மா­நாடு விரைவில் நடை­பெறும்.

நான் சில­ வ­ரு­டங்­க­ளுக்கு முன்னர் அஹ­ம­தா­பாத்தில் உள்ள சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தில் பேசினேன். அப்­போது அச்­சங்கத் தலைவர் சோனி என்று நினைக்­கின்றேன், எமக்கு பாகிஸ்­தானில் என்ன நடக்­கின்­றது என்று தெரியும். அவ்­வாறே ஆப்­கா­னிஸ்­தானில், பங்­க­ளாதேஷில், மாலை­தீ­வு­களில் கூட என்ன நடக்­கின்­றது என்று தெரியும். ஆனால் இலங்­கையில் பயங்­க­ர­வா­திகள் பிரச்­சினை ஒன்று இருப்­ப­தா­கவே நினைத்­தி­ருந்தோம். இப்­போது தான் நீதி­ய­ரசர் அங்­குள்ள உண்­மை­ நி­லையை எமக்கு வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார் என்றார்.  

எமது நிலை இந்தியா எங்­கிலும் தென் பிராந்­தி­யத்­துக்கு அப்பால் புரிந்­து­ணர்வைக் கொண்­டு­வர வேண்டும். அப்­பொ­ழுது தான் இந்திய பாரா­ளு­மன்­றத்­திலும் எமது உண்­மை­நிலை உண­ரப்­படும்.

கேள்வி:- மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இந்­திய- – இலங்கை ஒப்­பந்­தத்­தி­னையே முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு இந்­தி­யாவால் இலங்கை அர­சாங்­கங்­க­ளுக்கு அழுத்­த­ம­ளிக்க முடி­யாத சூழலில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்றை தமி­ழர்­க­ளுக்கு பெற்­றுத்­தரும் என்று தொடர்ந்தும் எதிர்­பார்க்க முடி­யுமா?

பதில்:- நிச்­ச­ய­மாக முடியும். உலக ஒழுங்கில் பல சம்­ப­வங்கள் தற்­போது நிகழ்ந்து கொண்டிருக்­கின்­றன. அவை எமக்­கான ஒரு­சா­த­க­மான சூழ்­நி­லையை உரு­வாக்கி வரு­கின்­றன. இந்தியாவின் பாது­காப்பு இலங்­கைவாழ் தமிழ் மக்­களை பாது­காப்­ப­தில்தான் தங்கியிருக்­கின்­றது என்ற நிலை உண­ரப்­பட்டு வரு­கின்­றது.

கேள்வி:- அதி­கா­ரப்­ப­கிர்வு அவ­சி­யமே இல்லை என்ற நிலையில் ஜனா­தி­பதி இருக்­கின்றார். பிர­தமர் இந்­தி­யாவை தமி­ழர்கள் நம்­பு­வதால் பய­னில்லை என்­கிறார். இந்­நி­லையில் அதி­கா­ரப்­ப­கிர்வு அல்­லது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்ற விடயம் எவ்­வாறு நடை­மு­றை ­சாத்­தி­ய­மாகும்?

பதில்:-  இரு­வரும் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு ஆயத்­த­மா­கின்­றார்கள். தேர்­தலின் பின்னர் தான் யதார்த்த நிலை­பு­ரியும்.

கேள்­வி: ­த­மி­ழ­க­ மு­த­ல­மைச்சர், எதிர்க்­கட்­சித்­ த­லைவர் ஆகி­யோ­ருடன் சந்­திப்­புக்­க­ளை­ ந­டத்­தாது, ர­ஜி­னி­காந்­துடன் சந்­திப்­புக்­க­ளை ­ந­டத்­தி­ய­மைக்­கா­ன­ கா­ரணம் என்ன?

பதில்:-  நான் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக செல்ல­வில்லை. உலகத் தமி­ழர்­களில் ஒரு­வ­னாக இலங்­கையிலிருந்து சென்றேன். அத்­துடன் தமி­ழக முத­ல­மைச்சர், எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோ­ரை சந்­திப்­ப­தற்­கான வசதி கிடைத்­தி­ருந்தால் கட்­டா­ய­மாக சென்­றி­ருப்­பேன். ரஜ­ினியின் சந்­திப்பு தற்­செ­ய­லாக நடந்­தது. அதில் அர­சி­ய­லுக்கு இடம் இருக்­க­வில்லை.

கேள்­வி: ­அ­மிர்­த­லிங்­கத்துக்குப் பின்னர் தமி­ழக அர­சியல் தலை­வர்­க­ளுடன் தாயக தமிழ் மக்­களின் அர­சியல் தலை­வர்கள் நெருங்­கிய உற­வினை  கொண்­டி­ருக்­க­வில்லை என்ற விமர்­சனம் காணப்­ப­டு­கையில், நீங்கள் தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தினை பயன்­ப­டுத்­தாது பா.ஜ.க. உள்­ளிட்ட குறிப்­பிட்ட தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்­களை மட்­டுப்­ப­டுத்தி விட்­டீர்­களே?

பதில்:- எமக்­கு­ யாதும் ஊரே யாவருங் கேளீ ரே. வச­திகள் கிடைத்­தி­ருந்தால் யாவ­ரை­யுஞ் ­சந்­திப்­பதில் எனக்­கு­ ஒரு இடர்­பாடும் இருக்­க­வில்லை. நான் சென்­ற­ கா­ரணம் உல­க ­வம்­சா­வ­ளித் ­த­மிழர் ஒன்­று­கூடல் கூட்­டத்­துக்கு. அதை வெற்­றி­க­ர­மாக முடித்து விட்டு வந்­துள்ளேன். வச­திப்­பட்ட சந்­திப்­புக்­களை மன­மு­வந்து ஏற்று மறு­ப­டியும் இலங்கை வந்­துள்ளேன். இத்­துடன் என் இந்­தியப் பய­ணங்கள் முடி­வ­டைந்­து­விட்­டன என்று கருத வேண்டும்.

கேள்வி:- இலங்கை அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னத்­தினை மறு­த­லிப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சர்­வ­தேச விசா­ரணை நிறை­வ­டைந்து விட்­டது என்று கூறு­கின்­றது. நீங்கள் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­கின்­றீர்கள். அது நடை­மு­றையில் சாத்­தி­யப்­பட என்ன செய்­ய­வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:-  கூட்டு அங்­கத்­தி­ன­ருக்கு எமது நிலைமை முற்றும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஒரு­மித்த கருத்­துடன் எமது முக­வர்கள் அந்­தந்­த­ நாட்டு அர­சாங்­கங்­களை கண்­டு­பேச  வேண்டும். எமது புலம் பெயர் உற­வுகள் இதற்கு ஒத்­தாசை வழங்­க­வேண்டும்.

கேள்வி:- ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் அச்­சு­றுத்­தல்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக நீங்­களே குறிப்­பிட்­டுள்ள நிலையில் இந்­தி­யாவில் அக­தி­க­ளா­க­வுள்ள இலங்கைத் தமி­ழர்­களை மீண்டும் தாயகம் திரும்­பு­மாறு கூறி­யுள்­ளமை கருத்­தியல் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றதே?

பதில்:- அச்­சு­றுத்­தல்கள் பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வ­டையும் வரை என்­பதே எமது கணிப்பு. எது­ எவ்­வாறெனினும் அக­திகள் எனப்­ப­டுவோர் இலங்கை நாட்டுப் பிர­ஜைகள்.

அவர்கள் மீதான பொறுப்பு இலங்கை அர­சாங்­கத்­துக்கு இருக்­கின்­றது. அதனை அது தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. இந்­தி­யாவில் இருந்து திரும்­புவோர் மீதான கரி­ச­னையும் பொறுப்­பு­ணர்ச்­சியும் இந்­தி­யா­வுக்கும் இருக்­கின்­றது. இதில் முரண்­பாடு இல்லை.

கேள்வி:- உங்­க­ளு­டை­ய­ த­லை­மையில் உரு­வா­கி­ வ­ரு­கின்ற கூட்­ட­ணியின் நிலை­மைகள் எவ்­வாறு இருக்­கின்­றன? புரிந்­து­ணர்­வு ­ஒப்­பந்தம் எப்­போ­து­ கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான ஏது நிலைகள் உள்­ளன?

பதில்:- பேசிக் கொண்­டி­ருக்­கின்றோம். கட்சி நிலை­க­ளுக்கு அப்பால் போய் மக்­களின் மீது கரி­ச­னை­காட்ட வேண்­டிய ஒரு நிலை தற்­போது உதித்­தி­ருந்­த­மையை எல்­லோரும் உணர்ந்­துள்ளார்கள் என்றே நம்­பு­கின்றேன் நடக்­க­ வேண்­டி­யது நடக்கும்.

கேள்வி:- அர­சியல் குழு­வுக்­கான உறுப்­பி­னர்கள் நிய­மனம், பாரா­ளு­மன்ற ஆசன ஒதுக்­கீடு போன்­ற­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டு­களில் தமிழ் மக்கள் கூட்­டணி ஆதிக்கம் செலுத்­து­வ­தாக விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ள­னவே?

பதில்:- எமக்கு மற்­ற­வர்கள் தேவையா மற்­ற­வர்­க­ளுக்கு நாம் தேவை­யா­ என்ற ஒரு கேள்வி பல­மாக அலசி ஆரா­யப்­ப­டு­கின்­றது. விரைவில் பதில் கண்­டு­வி­டுவோம்.

கேள்வி:- கூட்­ட­மைப்பில் கூட்­ட­மைப்­பாக செயற்­ப­டு­வதில் காணப்­படும் பின்­ன­டை­வு­களை விமர்­சித்த நீங்கள் உங்­க­ளு­டைய கூட்­ட­ணியில் சமபங்காளித்துவம் உட்பட முற்போக்கான கட்டமைப்புசார் செயற்பாடுகளை கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- அரசியல் கட்சிகள் பல சேர்ந்து கூட்டாக தேர்தல்களை சந்திக்கும் போதும் மற்றைய நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் POLITBUREAU எனப்படும் அரசியல் பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு அமையவே குழு அங்கத்தவர்கள் உள்ளடக்கப்படுவார்கள். எமது கட்சி பதிவு செய்யப்பட சில காலம் உள்ளது என இருக்கும் போது மேற்படி அரசியல் பீடம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

கேள்வி:- ஒரு வேளை, உங்களுடைய அணியில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப்.உடன் இணக்கப்பாடு எட்டப்படாதவிடத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கைகோர்ப்பீர்களா?

பதில்:- காலந்தான் பதில் சொல்லும்.

நேர்காணல் - ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45