சொலைமானிக்குப் பின்னர் ஈரானும் ஈராக்கும் !

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 03:42 PM
image

ஈரானின் சிறப்புப் படை­ய­ணி­யான குட்ஸின் தள­பதி காசிம் சொலை­மா­னியை கொன்­றதை அமெ­ரிக்கா பல­முனை வெற்­றி­யாகப் பார்க்­கின்­றது. லிபி­யாவின் பென்­கா­சியில் அமெ­ரிக்கத் தூதுவர் கொல்­லப்­பட்­ட­மைக்கு காசிம் சொலை­மானி பொறுப்பு என நம்­பிய அமெ­ரிக்க வெளி­யு­றவுத் துறை செயலர் மூதவை உறுப்­பினர் மைக் பொம்­பியோ பல மாதங்­க­ளாக சொலை­மா­னியை கொல்ல வேண்டும் என்ற எண்­ணத்­துடன் இருந்தார். கடந்த ஜூலை மாதம் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பி­னது சம்­ம­தத்­தையும் பெற்றுக் கொண்டு தருணம் பார்த்து காத்­தி­ருந்தார். சொலை­மா­னியைக் கொன்­றதன் மூலம் இனி ஒரு அமெ­ரிக்கத் தூதுவர் கொல்­வது தடுக்­கப்­பட்­டது மட்­டு­மல்ல எதிர்­கா­லத்தில் ஈரான் ஜனா­தி­ப­தி­யாக  சொலை­மானி வரும் வாய்ப்பு, ஈராக்கில் ஈரானின் ஆதிக்­கத்தை தடுத்­தமை, தீவிர அமெ­ரிக்க விரோத கொள்­கை­யு­டைய ஹிஸ்­புல்லா அமைப்பின் உச்ச நட்பை அழித்­தமை போன்­ற­வையும் அமெ­ரிக்­கா­வுக்கு கிடைத்த வெற்­றி­க­ளாகக் கரு­தலாம்.

நிறை­வே­றாத கன­வுகள்

ஈரானின் கடற்­ப­டையை அழிப்­பது, ஈரானின் அணு­குண்டு உற்­பத்தி நிலை­களை அழிப்­பது போன்­றவை கூட சொலை­மா­னியைக் கொல்­வ­தற்கு ஈடா­காது என மைக்கேல் பிரெஜென்ற் என்னும் ஈராக்கில் பணி­யாற்­றிய அமெ­ரிக்­கப்­ப­டையின் முன்னாள் உள­வுத்­துறை அதி­காரி அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் முன் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அந்த அள­வுக்கு அமெ­ரிக்­காவின் பிராந்­திய நலன்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் அளிப்­ப­வ­ராக சொலை­மானி திகழ்ந்தார். 2003இலிருந்தே அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக ஈராக்கில் ஈரான் செயற்­ப­டு­கின்­றது. யேமன் முதல் ஈராக் வரை அமெ­ரிக்க நகர்­வு­களை சிக்­க­லாக்­கு­வதில் சொலை­மானி வெற்றி கண்டார். ஆனால் அமெ­ரிக்­காவை மேனா என்று அழைக்­கப்­படும் மேற்­கா­சியா மற்றும் வட ஆபி­ரிக்க பிரதே­சத்திலிருந்து விலக்க முன்னர் சுலை­மானி கொல்­லப்­பட்டார். அல்­ஜீ­ரியா, எகிப்து, லிபியா, லெபனான், சிரியா, யேமன் ஆகி­ய­வற்றை உள்ளடக்­கிய ஈரா­னிய பேர­ரசை உரு­வாக்கும் ஈரா­னிய மத­வா­தி­களின் கனவு கரு நிலையில் இருக்கும் போதே சுலை­மானி கொல்­லப்­பட்டார்.

மைக் பொம்­பியோ காத்­தி­ருந்த தருணம்

2018 மே மாதம் அமெ­ரிக்கா ஈரா­னுடன் செய்து கொண்ட யூரே­னியம் பதப்­ப­டுத்தல் தொடர்­பான ஒப்­பந்­தத்திலிருந்து ஒரு­த­லை­பட்­ச­மாக வெளி­யேறி ஈரான் மீது கடு­மை­யான பொரு­ளா­தாரத் தடை­களை விதித்­தது. ஓராண்டு பொறுத்­திருந்த ஈரான் கடந்த மே மாதம் ஹோமஸ் நீரி­ணை­யூ­டாக செல்லும் எரி­பொருள் தாங்கிக் கப்­பல்கள் மீது தாக்­குதல் செய்யத் தொடங்­கி­யது. அடுத்த மாதம் அமெ­ரிக்­காவின் ஆளில்லா கண்­கா­ணிப்பு விமானம் ஒன்­றையும் சுட்டு வீழ்த்­தி­யது. அதற்கு அடுத்த மாதம் பிரித்­தா­னியக் கொடி­யுடன் சென்ற ஒரு எரி­பொருள் தாங்கிக் கப்­பலை கைப்­பற்­றி­யது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து சவூதி அரே­பி­யாவின் எரி­பொருள் உற்­பத்தி நிலைகள் மீது ஏவு­கணைத் தாக்­கு­தலை செய்து பின்னர்  டிசம்­பரில் ஈராக்கிலுள்ள அமெ­ரிக்கப் படை நிலைகள் மீது எறி­கணைத் தாக்­கு­தல்கள் செய்­யப்­பட்­டதில் ஒரு அமெ­ரிக்கர் கொல்­லப்­பட்டார். அதை ஈரானின் ஆத­ரவு பெற்ற படைக்­கு­ழுக்­களே செய்­தன என அமெ­ரிக்கா குற்றம் சாட்­டி­யது. ஆனால் இந்த தாக்­கு­தல்­க­ளுக்கும் தனக்கும் தொடர்­பில்லை என ஈரான் மறுத்­தது. ஈரானின் சேட்­டை­க­ளுக்கு அமெ­ரிக்கா பதி­லடி கொடுக்­காது என ஈரான் கரு­து­வ­தாக அமெ­ரிக்கா நம்­பி­யது. அதனால் காத்­தி­ர­மான பதி­லடி கொடுக்கும் முடிவை அமெ­ரிக்கா எடுத்தது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆத­ரவுக் குழுக்­களின் நிலை­களில் தாக்­குதல் செய்து ஐம்­பது போரா­ளி­களைக் கொன்­றது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதி நாளில் ஈராக்கிலுள்ள அமெ­ரிக்கத் தூது­வ­ர­கத்தை போராளி அமைப்­பினர் முற்று­கை­யிட்டு முன்­ன­ரங்க காவல் நிலை­களை அழித்­தனர். இந்தச் செயல் அமெ­ரிக்க வெளி­யு­றவுத் துறை செயலர் மைக் பொம்­பியோ காத்­தி­ருந்த தரு­ணத்தை அவர் கால­டியில் போட்­டது. சொலை­மானி இல­கு­வாகக் கொல்­லப்­பட்டார்.  கடந்த 3 ஆம் திகதி சொலை­மானி கொல்­லப்­பட்­ட­வுடன் சவூதி இள­வரசர் தனது உடன்­பி­றப்­பான துணைப் பாது­காப்பு அமைச்­சரை அவ­ச­ர­மாக அமெ­ரிக்கா அனுப்­பினார். அவ­ரது பய­ணத்தின் நோக்கம் ஒரு அமெ­ரிக்க – ஈரான் மோதலை தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்ட­தாக இருந்­தது.

ஈராக் மீது ஈரானின் பிடியை அமெ­ரிக்கா தகர்க்­குமா?

ஈராக்கில் ஈரானின் ஆதிக்­கத்தை அமெ­ரிக்கா ஒழிப்­ப­தற்­கான முதற்­ப­டி­யாக சொலை­மா­னியின் கொலை அமைந்­துள்­ளது.  ஈராக்கில் ஈரானின் ஆதிக்­கத்­துக்கு எதி­ராக இனி அமெ­ரிக்கா காய்­களை நகர்த்தும். அதனால் ஈரான் -– அமெ­ரிக்கா மோதல் கள­மாக ஈராக் மாறும் வாய்ப்­புக்கள் அதி­க­ரித்­துள்­ளன. ஈராக் பாரா­ளு­மன்றம் அமெ­ரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளி­யேற வேண்டும் என்ற தீர்­மா­னத்தை எடுத்­தாலும் அது பிர­த­மரின் ஒப்­புதல் இன்றி நடை­மு­றைக்கு வராது. தற்­கா­லிக பிர­த­ம­ராக இருக்கும் அதில் அப்துல் மஹ்தி ஈரானின் ஆதிக்கம் ஈராக்கில் அதி­க­ரிக்கும் போது தனக்கு ஆபத்து எனக் கரு­து­வதால் அவர் ஒப்­புதல் அளிக்க வாய்ப்­பில்லை. அத்­துடன் அவர் ஒப்­புதல் அளித்தால் அமெ­ரிக்க நடு­வண்­வங்­கியில் உள்ள ஈராக்­கிய அரசின் கணக்கு முடக்­கப்­படும் என்ற எச்­ச­ரிக்­கையை அமெ­ரிக்கா ஈராக்­குக்கு விடுத்­துள்­ளது. சொலை­மா­னி­யுடன் கொல்­லப்­பட்ட ஈராக்­கிய பொது நகர்வு அலகின் தள­ப­தியின் இழப்பு பல படைக்­கு­ழுக்­களைக் கொண்ட அந்த அலகை நிலை குலையச் செய்­துள்­ளது.

பழி­வாங்­குமா ஹிஸ்­புல்லா?

சுலை­மா­னியின் படு­கொலை உல­கெங்கும் உள்ள சியா இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு அமெ­ரிக்கா மீது உள்ள வெறுப்பை பன்­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது. அமெ­ரிக்கா ஈரா­னியத் தள­பதி காசிம் சொலை­மானி­யையும் ஈராக்­கிய போராளிக் கூட்­ட­மைப்­பான பொது நகர்வுக் குழுவின் தள­பதி அபு மஹ்டி அல் முஹண்­டி­ஸையும் கொன்­ற­மைக்கு ஈடாக பழி­வாங்கல் செய்­யப்­பட வேண்டுமென ஹிஸ்­புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்­ரல்லா கடந்த 5ஆம் திகதி சூளு­ரைத்­தி­ருந்தார். மேலும் அவர் அமெ­ரிக்க மக்கள் மீது தாக்­குதல் நடத்தக் கூடாது என்றும் தமது பிராந்­தி­யத்தில் உள்ள அமெ­ரிக்கப் படை­யி­னரை அகற்றும் வகையில் தாக்­குதல் நடத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் கூறி­யி­ருந்தார். எந்த ஒரு நாட்­டி­னதும் உத­வி­யின்றி அமெ­ரிக்கப் படை­யி­ன­ருடன் ஒரு நேரடி மோதலை ஹிஸ்­புல்­லாவால் செய்­வது கடினம். இஸ்­ரேலின் அச்­சு­றுத்தல் லெப­னானில் பொது­மக்­களின் ஆர்ப்­பாட்­டங்கள் போன்­ற­வற்­றையும் சமா­ளிக்க வேண்­டிய நிலையில் ஹிஸ்­புல்லா உள்­ளது.

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக சிரிய உள்­நாட்டுப் போரில் பெரும் ஆளணி இழப்பை ஹிஸ்­புல்லா சந்­தித்­துள்­ளது. லெப­னானின் அரச படை­க­ளுக்கு அமெ­ரிக்­கப் ­ப­டை­யினர் பயிற்­சி­ய­ளித்து வரு­கின்­றனர். அவர்­களின் மீது சிறிய அள­வி­லான அதிக தாக்­கு­தலை ஹிஸ்­புல்லா மேற்­கொள்­ளலாம். சொலை­மா­னியின் கொலையால் அவரால் உரு­வாக்­கப்­பட்டு வளர்க்­கப்­படும் ஹிஸ்­புல்லா உட்­பட்ட படைக்­கு­ழுக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்­பது அமெ­ரிக்­காவின் விருப்­ப­மாக இருக்­கலாம்.

அந்த கிளர்ச்­சியை அடக்கும் போர்­வையில் அந்தப் படைக்­கு­ழுக்­களை முற்­றாக அழிப்­ப­தற்கு அமெ­ரிக்கா முற்­ப­டலாம் என்­ப­தையும் ஹிஸ்­புல்லா உணரும். ஹிஸ்­புல்லா வெறும் படைக்­கலத் தாக்குதல் மட்­டு­மல்ல இணை­ய­வெளித் தாக்­கு­தல்­க­ளையும் செய்யக்கூடி­யது.

 ஈரான் குழம்­புமா?

சொலை­மானி கொல்­லப்­பட்­ட­வுடன் ஈரா­னிய மக்கள் ஆட்­சி­யா­ளர்­களின் பின்னால் திரண்­டது உண்மை. ஆனால் ஈரான் கொடுத்த பதி­லடி போதாது என்­பதை அவர்கள் உணரும் போது அவர்கள் அர­சுக்கு எதி­ராகத் திரும்­பலாம். அமெ­ரிக்­காவின் உள­வுக்­கான எதிர்ப்பு நட­வ­டிக்­கையை ஈரான் சரி­யாகச் செய்­ய­வில்லை. ஈரானின் பெரும் சொத்­தான தள­ப­தியை அமெ­ரிக்க உள­வா­ளிகள் நிறைந்த லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடு­க­ளுக்கு காசிம் சொலை­மா­னியை போதிய பாது­காப்­பின்றி அனுப்­பி­யது தவ­றா­னது என ஈரா­னி­யர்கள் கரு­தினால் அது ஈரா­னிய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பெரும் தலை­யி­டியைக் கொடுக்­கலாம். உக்­ரே­னிய பய­ணிகள் விமா­னத்தை தவ­று­த­லாக சுட்டு வீழ்த்தி பல ஈரா­னி­யர்­களை ஈரா­னியப் படை­யினர் கொன்­றதும் ஈரா­னிய மக்­களை சினம் கொள்ள வைத்­துள்­ளது. அந்த சினத்­துடன் ஈரா­னியப் பொரு­ளா­தார தேய்வால் ஏற்­படும் விரக்தி இணையும் போது ஈரா­னிய ஆட்­சி­யா­ளர்கள் பெரும் உள்­நாட்டுக் குழப்­பத்தை சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். கடந்த மே மாதம் ஈரா­னுக்கு எஸ்-400 என்ற ஏவு­கணை எதிர்ப்பு முறை­மையை விற்­பனை செய்ய ரஷ்யா மறுத்­தி­ருந்­தது. ஆனால் ஈராக்­குக்கு விற்பனை செய்ய ரஷ்யா தற்போது முன்வந்துள்ளது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஈரானின் ஆதிக்கம் வளர்வதை ரஷ்யா விரும்பவில்லை. அதனால் ரஷ்யாவிடமிருந்து பெரும் உதவியை ஈரான் எதிர்பார்க்க முடியாது.

சொலை­மா­னியின் திறன் தீவி­ர­வாத அமைப்­புக்­களை உரு­வாக்கி, வளர்த்து அவற்றை புவிசார் நலன்­க­ளுக்குப் பாவிப்­பதில் முதன்­மை­யா­ன­தாக அமைந்­தி­ருந்­தது. அமெ­ரிக்க அர­சு­ற­வி­ய­லா­ளர்கள் அந்த அமைப்­புக்­களை கையாளும் வழிகள் தெரி­யாமல் கடந்த 40 ஆண்­டு­க­ளாக திண­று­கின்­றார்கள். அவற்றில் கையாள்­வ­தற்கு மிகவும் கடி­ன­மா­னது ஹிஸ்­புல்லா அமைப்பு. அதனால் அமெ­ரிக்­கா­வுக்கும் ஹிஸ்­புல்­லா­வுக்கும் இடையில் சிறிய தாக்­கு­தல்­களில் தொடங்கி ஒரு பெரிய போராக மாறக்­கூ­டிய வாய்ப்பு தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது.

- வேல்தர்மா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45