சிண்டு முடி­கி­றதா தமிழ் ஊட­கங்கள் ?

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 03:14 PM
image

தைப்­பொங்­க­லுக்கு முதல் நாள், அலரிமாளி­கையில் தமிழ் ஊட­கங்­களின் ஆசி­ரி­யர்­க­ளுடன் பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்­திய சந்­திப்பில், இரண்டு முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்து கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன.

முத­லா­வது, அர­சாங்­கத்­துக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் பிரச்­சி­னை­களை மூட்டி விடும் வேலையை தமிழ் ஊட­கங்கள் கைவிட வேண்டும் என்­பது.

இரண்­டா­வது, தமிழ் மக்­க­ளுக்கு இந்­தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்று நம்­பிக்­கை­யூட்­டு­வதை  தமிழ் ஊட­கங்­களும் தமிழ் அர­சியல் பிர­தி­நி­தி­களும் கைவிட்டு, இலங்கை அர­சாங்­கத்தின் ஊடாக தீர்வைப் பெறு­வ­தற்கு வழி­காட்ட வேண்டும் என்­பதை அறி­வு­றுத்­து­வது.

தமிழ் ஊட­கங்­களின் ஆசி­ரி­யர்­க­ளுடன் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய அந்தச் சந்­திப்பின் நோக்கம், தமிழ் மக்­க­ளுக்கு ஏதேனும் செய்­தியை கூறு­வ­தல்ல, தமிழ் ஊட­கங்­களின் போக்கைச் சுட்­டிக்­காட்டி- தமது பக்கம் வந்து விடுங்கள் என்று கூறு­வ­தற்­கா­ன­தா­கவே தென்­ப­டு­கி­றது.

அர­சாங்­கத்தின் ஆக்­க­பூர்­வ­மான பணிகள், வேலைத் திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்­டுமே தவிர, அர­சாங்­கத்­துக்கும் தமிழ் மக்­க­ளுக்­கு­மி­டையில் ‘சிண்டு முடிந்து விடும்’ வேலையைப் பார்க்கக் கூடாது என்ற அன்புக் கட்­ட­ளையை பிர­தமர் இட்­டி­ருக்­கிறார்.

தமிழ் மக்­களின் நிலைப்­பாட்­டி­லி­ருந்து, தமிழ் ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்ற கருத்­துக்கள் அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­து­கி­றது என்­பது இதி­லி­ருந்து புரி­கி­றது.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ இந்த விவ­கா­ரத்தைக் கையில் எடுத்­தி­ருப்­ப­தற்கு, சுதந்­திர தினத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டாது என்ற சர்ச்சை, கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம்.

அமைச்சர் ஜனக பண்­டார தென்னக்கோன் வெளி­யிட்ட கருத்தின் அடிப்­ப­டை­யிலும் அதற்கு சார்­பாக அமைச்­சர்கள், ஆளும்­த­ரப்பு  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பௌத்த பீடங்கள், பிக்­குகள், கடும்­போக்­கு­வாத அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், வெளி­யிட்ட கருத்­துக்கள் தான் இந்த விவ­கா­ரத்தை பூதா­காரப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதனை விட்டுவிட்டு, தமிழ் ஊட­கங்கள் தான் இவற்றை பெரிது­ப­டுத்தி விட்­டன என்­பது போல, அர­சாங்கம் கரு­து­வ­தாக தெரி­கி­றது.

இந்த விடயம் தொடர்­பான பங்­காளிக் கட்­சி­களின் கருத்­துக்கள் எல்லாம் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு அல்ல என்று ஒரு போடு போட்­டி­ருக்­கிறார் பிர­தமர்.

அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரான பந்­துல குண­வர்­தன கூட, சிங்­கள மொழி­யி­லேயே தேசிய கீதம் பாடப்­பட வேண்டும் என்­பது தான் 69 இலட்சம் மக்­களின் ஆணை என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த நிலையில், அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் வெளி­யிடும் கருத்­துக்கள் கூட, அதி­கா­ர­பூர்­வ­மா­ன­வையா என்று கேள்வி எழுப்ப வேண்­டிய நிலை உள்­ளதை பிர­தமர் மஹிந்­தவின் கருத்து எடுத்துக் காட்­டு­கி­றது.

தேசிய கீத விவ­கா­ரத்தில் தமிழ் ஊட­கங்கள் இன­வா­தத்தை கிள­றி­வி­ட­வில்லை. ஆனால் சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் ஊட­கங்­களும் வெறுப்­பையும் இன­வா­தத்­தையும் தான் உமிழ்ந்­தன என்­பதை மறந்­து­விட முடி­யாது.

ஒரு நாட்­டுக்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க முடியும் என்­பதை பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ கூட கூறி­யி­ருக்­கிறார்.

இந்த விவ­காரம் சிக்­க­லா­கி­யதும் அவர்கள் நழுவிக் கொள்ளப் பார்க்­கின்­ற­னரே தவிர, எல்­லோ­ரு­டைய அடிப்­படை எண்­ணப்­பாடும் ஒரே­வி­த­மா­ன­தாகத் தான் இருக்­கி­றது.

இனி­மே­லா­வது தமிழ் ஊட­கங்கள் இணக்கப் போக்­குடன் செயற்­பட வேண்டும் என்ற தொனியில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ வெளி­யிட்­டுள்ள கருத்து, தமிழ் ஊட­கங்கள் தொடர்­பாக அர­சாங்கம் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு எப்­ப­டிப்­பட்­டது என்­பதைப் புரிந்து கொள்ள உத­வு­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்கும் அர­சாங்­கத்­துக்­கு­மி­டையில் ‘கோள் மூட்டி’ விடு­வது தமிழ் ஊட­கங்­களின் வேலை அல்ல. அதே­வேளை, தமிழ் மக்­களின் குர­லாக ஒலிக்கும் போது, அந்த மக்­களின் நலன்­க­ளையும் அவர்­களின் அபி­லா­ஷை­க­ளையும் தமிழ் ஊட­கங்கள் மறந்து விடவோ அதனைப் புறக்­க­ணித்து நடக்­கவோ முடி­யாது.

அவ்­வாறு புறக்­க­ணித்து, தமிழ் மக்­களின் நலன்­களை மறந்து செயற்­பட முனைந்த அர­சாங்­கத்­துக்கு துதி­பாடும் வேலையை மாத்­திரம் மேற்­கொண்ட ஊட­கங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து காணாமல் போனது தான் வர­லாறு.

தமிழ் மக்­களின் கருத்­துக்­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் அர­சாங்­கத்­துக்கு காவிச் செல்­லு­கின்ற ஒரு அஞ்­சல்­கா­ர­னாகத் தான் தமிழ் ஊட­கங்கள் செயற்­ப­டு­கின்­றன.

அதனை அர­சாங்கம் தனக்கு எதி­ரான விமர்­ச­னங்­க­ளா­கவோ தமக்கு எதி­ராக மக்­களைத் தூண்டி விடு­கின்ற செயற்­பா­டா­கவோ நோக்­கு­வது அபத்தம்.

தமிழ் மக்­க­ளுடன் நெருங்கி செயற்­பட விரும்­பினால், அதற்­கான வழி­மு­றை­களை பின்­பற்­றி­யி­ருக்க வேண்­டி­யதும் அதற்­கான சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டி­யதும் அர­சாங்­கத்தின் பொறுப்பு.

உதா­ர­ணத்­துக்கு, தமிழ் மக்­களின் பிரச்­சினை மற்றும் அதற்­கான தீர்வு பற்றி தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்து கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­க­ளாக தெளி­வான எந்தக் கருத்­தையும் வெளி­யி­ட­ வில்லை.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு பற்றி ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பிய போது அபி­வி­ருத்தி மட்டும் தான் தீர்வு என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அபி­வி­ருத்­தியைத் தவிர வேறெந்த உபா­யமும் அர­சாங்­கத்­திடம் இல்­லாத நிலையில்,  தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான போராட்­டத்­துக்­கான தீர்வு என்ன என்ற கேள்­வியை ஊட­கங்கள் எழுப்­பின.

அர­சியல் தீர்வு என்ற விட­யத்தை அபி­வி­ருத்தி என்ற படகின் மூலம், கடந்து செல்­வ­தற்கு புதிய அர­சாங்கம் முனை­கி­றது என்ற சந்­தேகம் ஏற்­பட்­டது.

அதனை பகி­ரங்­கப்­ப­டுத்தி, கேள்வி எழுப்­பி­யது தமிழ் ஊட­கங்கள் தான்.

அந்தக் கேள்வி தான், இப்­போது பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவையும் வாயைத் திறக்க வைத்­தி­ருக்­கி­றது.

இப்­போது தான் அவரும்  அமைச்­சர்கள் சிலரும் தமிழ் மக்­க­ளுக்கு பிரச்­சினை இருக்­கி­றது என்று ஏற்றுக் கொண்டு பேசத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். பொதுத்­தேர்­த­லுக்குப் பின்னர் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் எடுக்­கப்­படும் என்று கூறத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

13 பிளஸ் நிலைப்­பாடு குறித்து கேள்வி எழுப்­பிய போது இப்­போதும் கூட தான் அதே நிலைப்­பாட்டில் தான் இருக்­கிறேன் என்று பதி­ல­ளித்­தி­ருக்­கிறார் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ.

அதே­வேளை, அவர் சில நாட்­க­ளுக்கு முன்னர் மற்­றொரு சந்­தர்ப்­பத்தில் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் சமஷ்டித் தீர்வை வழங்க முடி­யாது என்றும் சிங்­கள மக்கள் விரும்­பு­கின்ற தீர்வு ஒன்றை தான் வழங்க முடியும் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

தமிழ் மக்கள் விரும்­பு­கின்ற அர­சியல் தீர்வு கிடைக்­காது என்­பதும் சிங்­கள மக்கள் விரும்­பு­கின்ற தீர்வு தான் கிடைக்கும் என்­பதும் யாசகம் கேட்­ப­வ­ருக்கும் கொடுப்­ப­வ­ருக்­கு­மி­டையில் எத்­த­கைய தொடர்பு இருக்­கி­றதோ அதனைத் தான் நினை­வு­ப­டுத்­து­கி­றது.

யாசகம் கொடுப்­ப­வரின் மனோ­நிலையில் இருந்து கொண்டு தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நிலைப்­பாட்டில் தான் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட அவ­ரது அர­சாங்கம் உள்ளது.

பெரும்­பான்மை மக்கள் விரும்­ப­வில்லை, 69 இலட்சம் மக்­களின் ஆணை இது என்ற வாச­கங்­களின் மூலம் அர­சி­யல்­வா­திகள் தான் முடி­வு­களை எடுக்­கி­றார்கள் அறி­விக்­கி­றார்கள்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்ன என்­பதை, எந்த அடிப்­ப­டையில் தீர்வைக் கொடுக்கத் தயா­ராக இருக்­கிறோம் என்­பதை, பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவோ அவ­ரது அர­சாங்­கமோ ஒரு­போதும், வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. இப்­போது நிலைமை இன்­னமும் மோச­மா­கி­யுள்­ளது.

தமிழ் மக்­க­ளுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்த, அவர்­க­ளுடன் நல்­லு­றவை ஏற்­ப­டுத்திக் கொள்ள அர­சாங்கம் விரும்­பினால் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு என்ன என்­பது பற்­றிய ஆரோக்­கி­ய­மான நகர்­வு­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம்.

அவ்­வா­றான முயற்­சி­களில் இறங்­கினால் பொதுத்­தேர்­தலில் தனிச் சிங்­கள வாக்­கு­களால், மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெறும் கனவு தோற்றுப் போய் விடலாம் என்ற அச்­சத்­தினால் அர­சாங்கம் மௌன­மாக இருக்­கி­றது.

ஆனால் தமிழ் மக்­களோ, தமக்­கான அர­சியல் தீர்வு காணாமல் போகச் செய்­யப்­பட்டு விடுமோ என்ற அச்­சத்தைக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

தமிழ் மக்­களின் கவ­லையும் அச்­சமும் அர­சாங்­கத்­துக்கு புரி­கி­றதோ இல்­லையோ, அதன் கவ­லை­களும் அச்­சமும் சிங்­கள மக்­களின் வாக்­கு­களின் மீதே இருக்­கின்­றன.

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்றி, சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளையும் பெற்றுக் கொள்வது முடியாத காரியம். ஏனென்றால், சிங்கள பௌத்த பேரினவாதம் அவ்வாறானதொரு புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறது.

இதனை மீறி அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. அவ்வாறானதொரு மனோநிலையில் இருக்கின்ற அரசாங்கத்துடன் தமிழ் மக்களால் இணங்கிச் செயற்படவும் முடியாது.

ஏனென்றால், தமிழ் மக்கள் நம்பி நம்பி இழந்து விட்டவை ஏராளம். இனிமேலும் ஏமாந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அவர்களிடம் எப்போதும் இருக்கும்.

எனவே, தமிழ் மக்களுடன்  உறவுகளைப் பலப்படுத்தி, அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடியதொரு ஆக்கபூர்வமான செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்திருந்தால் அதன் மீது ஊடகங்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

அவ்வாறானதொரு நிலையில் எந்தவொரு தமிழ் ஊடகமும், சிண்டு முடியும் வேலையை செய்து விட முடியாதே.

சத்ரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22