விண்ணில் விரி­வு­ப­டுத்­தப்­படும் இணை­ய­வலைக் கட்­ட­மைப்பு

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 03:05 PM
image

இணையம் இல்­லாத உல­கினை எண்ணிப் பார்க்க இய­லாத அள­விற்கு அது மனித வாழ்­வுடன் இணைந்­த­தாக மாறி­விட்­டது. புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் விட­யங்­களும் இணை­யத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டே கட்டி­யெ­ழுப்­பப்­ப­டு­கின்­றன. எனவே, இந்த இணைய வலை­ய­மைப்­பினை கட்­டி­யெ­ழுப்­பு­வதால் ஏற்படும் வர்த்தக வாய்ப்­பினைக் கருத்திற் கொண்டு, அதனை வெவ்வேறு அணு­கு­மு­றை­களில் கட்­ட­மைக்க பாரிய வர்த்­தக நிறு­வ­னங்கள் முண்­டி­யடிக்­கின்­றன. இதில் ஒரு முறை­யாக சமுத்­தி­ரங்­க­ளி­னூ­டான ஒளி­யியல் தரவு கடத்­திகள் கட்­ட­மைக்­கப்­பட்டு விரை­வான இணைய வலை­ய­மைப்பு விரி­வாக்­கப்­பட்டு வந்­தது. இதற்கு அடுத்­த­ப­டி­யாக, புவியை வலம் வரும் செய்­ம­திகள் ஊடாக இணைய வலை­ய­மைப்­பினை உரு­வாக்கும் முயற்­சியில் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறு­வனம் இறங்­கியுள்­ளது. இந்தக் கட்­ட­மைப்புத் திட்­டத்­திற்­கான மூன்றாம் கட்ட செய்­ம­திகள் கடந்த 6 ஆம் திகதி ஏவப்­பட்­டன.

விண்ணில் செய்­ம­தி­களை ஏவி இணைய இணைப்­பினை விண்­ணி­லி­ருந்து வழங்கும் கருத்­திட்­டத்­தினை ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறு­வனத் தலைவர் எலொன் மொஸ்க் முன்­வைத்­த­போது, அனை­வரும் அத்­திட்டம் குறித்து கேலி செய்தனர். ஏனெனில், அவர் உலகம் முழு­வ­தற்­கு­மான இணை­யத்­தினை வழங்­கு­வ­தற்கு 42,000 செய்­மதி­களை ஏவ வேண்டும் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். இது, தற்­போது புவியை வலம்­வரும் செய்­ம­தி­களின் எண்­ணிக்­கை­யிலும் பல மடங்கு அதி­க­மா­ன­தாகும். இந்த முயற்­சியில் முன்­னோக்கி நகர்ந்த எலொன் மொஸ்க், முதற்­கட்­ட­மாக இதற்கான அனு­ம­தி­யினை அமெ­ரிக்­காவின் அனு­மதி வழங்கும் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக் ­கொண்டார்.

இதன்­பின்னர், முத­லா­வது கட்­ட­மாக 60 செய்­ம­திகள் கடந்த வருடம் மே மாதம் விண்­ணிற்கு ஏவப்­பட்­டன. இரண்­டா­வது கட்­ட­மாக மற்­றைய 60 செய்­மதிகள் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்­டன. இவ்­வ­ருட ஆரம்­பத்தில் மூன்றாம் கட்ட செய்­ம­திகள் 60 விண்­ணிற்கு அனுப்­பப்­பட்டு, மொத்­த­மாக 180 செய்­ம­திகள் விண்­ணிற்கு கொண்டு செல்லப்­பட்­டுள்­ளன.

இந்த செய்­ம­திகள் ஏவு­க­லத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு, படிப்­ப­டி­யாக புவித்தாழ் ஒழுக்கில் நிலைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 6 தொடக்கம் 8 கட்ட செய்­ம­திகள் அனுப்­பு­கையுடன் முதற்­கட்ட இணைய சேவை வழங்கல் ஆரம்­பிக்கும் எனவும் 24ஆவது கட்­ட­மாக செய்­மதி அனுப்­பிய பின்னர், உல­க­ளா­விய இணைய இணைப்­பிற்­கான ஆரம்பம் சாத்­தியம் எனவும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ தெரி­வித்­துள்­ளது. எனினும், முன்­மொ­ழி­யப்­பட்ட அதி­வேக தரவு பரி­மாற்றம், தாம­த­மற்ற இணைய வழங்கல் என்ற முன்­னேற்­ற­க­ர­மான இலக்­கினை அடை­வ­தற்கு 42,000 செய்­ம­திகள் என்ற இலக்கு எய்­தப்­ப­ட­வேண்டும் எனக் குறிப்­பி­டப் ­ப­டுகின்றது.

இந்த செய்­மதி இணையத் திட்டம் புவிக்­கான விரை­வான இணைய வலை­ய­மைப்பைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதை நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தாலும், இதன் நீண்­ட­கால நோக்கில், மனிதர் குடி­யேற எதிர்­பார்க்கும் செவ்வாய்க் கோளிற்கும் புவிக்­கு­மான தகவல் தொடர்­பா­ட­லினை விருத்தி செய்­வ­தையும் குறிக்­கோ­ளாகக் கொண்­டுள்­ளது.

இந்த இலக்­கினை அடை­வ­தற்­காக, இத்­திட்டம் தொடர்­பான அடுத்தகட்ட செய்­மதித் தொகு­தி­களை தொடர்ச்­சி­யாக ஏவு­வ­தற்கு ‘ஸ்பேஸ்எக்ஸ்’ திட்­ட­மிட்­டுள்­ளது. விண்­வெளி ஏவு­கையின் போதான முதற்­கட்ட உந்­தத்­தினை வழங்கும் பகு­தியை பாது­காப்­பாக மீட்­டெ­டுக்கும் வழி­யினை ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறு­வனம் வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்தி வரு­கின்­றது. இது, உந்து இயந்­தி­ரத்­தினை புதி­தாக உற்­பத்தி செய்­வ­தற்கு ஆகும் காலத்­தினை இல்­லாமல் செய்­துள்­ளது. கடந்த 6 ஆம் திகதி உப­யோ­கிக்­கப்­பட்ட உந்து இயந்­திரம் 48 ஆவது தட­வை­யாக மீளப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும். எனவே, எதிர்­வரும் மாதங்­களில் இத்­திட்­டத்­திற்­கான செய்­மதி ஏவு­கைகள் தொடர்­பான செய்­தி­களை எதிர்­பார்க்கலாம்.

கட்­டு­ரையின் ஆரம்­பத்தில் குறிப்­பிட்­டது போன்று “இணை­ய­மின்றேல் இன்­றைய நாள் இல்லை” என்­னு­ம­ள­விற்கு அத­னூ­டான சேவைகள் மனி­த­ருக்கு அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எனவே, தடை, தாமதமற்ற அதிவேக இணைய வழங்கல் சேவைகள் மனிதர் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

பெரும் எண்ணிக்கையிலான செய்மதிகளை விண்ணிற்கு ஏவி, அவற்றினை சிறப்பாக முகாமை செய்யாதுவிடின் அது, விண்வெளிக் குப்பைகள் பெருகுவதற்கு இடமளிக்கும் என்பது திண்ணம். இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்படும் விண்வெளிப் பயணங்களுக்கு, இவைகள் எமனாகவும் மாறிவிடவும் கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26