சிங்கப்பூர் மாதிரியைப் பின்பற்றும் ஜனாதிபதி

20 Jan, 2020 | 03:49 PM
image

“அதி­கா­ரத்­துவ  பாது­காப்பு அர­சி­யலை நோக்கி  இலங்கை நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது”  என்ற தலைப்பில், eastasiaforum என்ற இணை­யத்தில் அண்­மையில் ஒரு கட்­டுரை வெளி­யா­கி­யி­ருந்­தது.


ரொட்­ரெ­டாமில் உள்ள Erasmus பல்­க­லைக்­க­ழ­கத்தில், சமூக கற்­கை­க­ளுக்­கான அனைத்­து­லக நிறு­வ­னத்தில் மோதல்கள் மற்றும் அமைதிக் கற்­கைகள் பீடத்தின் உதவிப் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றும் ஷியா­மிகா ஜய­சுந்­தர இந்தக் கட்­டு­ரையை எழு­தி­யி­ருந்தார்.


அந்தக் கட்­டு­ரையின்  இறுதிப் பந்­தியில், வன்­முறை தொடர்­பான நிபு­ணர்­களால் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ஆட்சி, ஜன­நா­யக எதிர்ப்புக் குரல்­க­ளுக்கும், சிறு­பான்மை சமூ­கங்­களின் நீடித்த குறை­களை நிவர்த்தி செய்­வ­தற்கும் குறைந்­த­ளவு இடமே அளிக்­கப்­ப­டு­வது போன்ற கார­ணி­களால், இலங்கை இன்னும் சர்­வா­தி­கார பாது­காப்பு அர­சி­யலை நோக்கி வரு­வ­தாக தெரி­கி­றது” என்று குறிப்­பிட்­டி­ருந்தார் ஷியா­மிகா ஜய­சுந்­தர.


இந்தக் கட்­டுரை வெளி­யா­கிய அடுத்த சில நாட்­களில், சிங்­கப்­பூரின் சட்ட மற்றும் உள்­துறை அமைச்சர் காசி­ விஸ்வ­நாதன் சண்­முகம், இலங்­கைக்குப் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார்.
ஜன­வரி முதல் வாரத்தின் இறு­தியில், மூன்று நாட்கள் பய­ண­மாக வந்­தி­ருந்த அவர், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் நடத்­திய பேச்­சுக்கள் குறித்து, ஊட­கங்­களில் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றே கூறலாம்.


அந்தப் பேச்­சுக்­களின் உள்­ள­டக்கம், ஷியா­மிகா  ஜய­சுந்­த­ரவின் கட்­டு­ரையின் இறுதி பந்­தி­யுடன் மிகவும் நெருங்­கிய தொடர்­பு­டை­யது என்­பதில் சந்­தே­க­மில்லை.
இணையப் பாது­காப்பு, வெறுப்பு பேச்சு சட்­டங்கள், சமூக ஊடக புல­னாய்வு, பயோ­மெட்ரிக்ஸ் ஆகிய நான்கு விடயப் பரப்­பு­களை மையப்­ப­டுத்தி, சிங்­கப்பூர் அமைச்சர் சண்­மு­கத்­துடன் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ.


பொது­வாக இரண்டு நாடு­களின் தலை­வர்கள், அமைச்­சர்கள் அல்­லது பிர­தி­நி­திகள் சந்­தித்துக் கொள்ளும் போது, இரு­த­ரப்பு உற­வுகள் குறித்து பேசிக் கொள்­வது வழக்­க­மான ஒன்று. அதற்கு அப்பால் முத­லீ­டுகள், பொரு­ளா­தார உற­வுகள் குறித்துப் பேசப்­ப­டு­வதும் வழக்கம். அந்த வகையில் சிங்­கப்பூர் சட்ட மற்றும் உள்­துறை அமைச்­ச­ருடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இரு­த­ரப்பு உற­வுகள் குறித்து பேசி­யதில் ஆச்­ச­ரியம் இல்லை.


அதே­வேளை, பொரு­ளா­தார முத­லீ­டுகள் குறித்து பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், முத­லா­வது பாரிய வெளி­நாட்டு முத­லீட்டுத் திட்டம், சிங்­கப்­பூரை தள­மாக கொண்ட நிறு­வ­னத்­துக்கே ஒப்­புதல் அளிக்­கப்­பட்­டுள்­ளது. காலி­மு­கத்­தி­டலில் ஷங்­ரிலா விடு­திக்கு அருகில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை, 250 மில்­லியன் டொலர் முத­லீட்டுத் திட்­டத்­துக்­காக அர­சாங்கம் வழங்க முடிவு செய்­தி­ருக்­கி­றது.


இன்னும் கூடுதல் முத­லீ­டு­களை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஈர்க்கும் திட்டம் அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது. அது­கு­றித்த பேச்­சுக்கள் இடம்­பெற்­றி­ருப்­பினும், அதை­விட முக்­கி­ய­மான சில விட­யங்கள் பேசப்­பட்­டி­ருப்­பது தான் கவ­னிக்­கத்­தக்­கது.
தீவி­ர­வாத முறி­ய­டிப்பு,  இணைய பாது­காப்பு,  அடிப்­ப­டை­வா­தத்தை ஒடுக்­குதல், வெளி­நாட்டு செல்­வாக்கு மற்றும் தலை­யீ­டுகள் குறித்த அச்­சு­றுத்­தல்கள்,  புல­னாய்வு முன்­னேற்றம் குறித்து சிங்­கப்பூர் அமைச்­ச­ருடன் விரி­வாகப் பேசி­யி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ பக் ஷ.இந்த விட­யங்­களில், சிங்­கப்­பூ­ரி­ட­மி­ருந்து பாடங்­களைக் கற்றுக் கொள்­ளவும் அத­னுடன் இணைந்து செயற்­ப­டவும்  இலங்கை விரும்­பு­கி­றது.


சிங்­கப்­பூரில் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வெறுக்­கத்­தக்க பேச்சு சட்டம், இணை­யத்தில் தவ­றான தக­வல்கள் பரப்­பப்­ப­டுதல், மத நல்­லி­ணக்­கத்தை பரா­ம­ரித்தல், சட்டம் மற்றும் தரவு முகா­மைத்­து­வத்­துக்­காக சமூக ஊடக புல­னாய்வு மாதி­ரிகள் ஆகி­யவை குறித்தும் பேசப்­பட்­டுள்­ளன. இதற்­காக கையா­ளப்­படும் புதிய தொழில்­நுட்­பங்கள் குறித்தும்  சிங்­கப்­பூரின் அனு­ப­வங்கள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கி­றது.


மேலோட்­ட­மாகப் பார்த்தால் இந்த விட­யங்கள் தீவி­ர­மாக எடுத்துக் கொள்ளக் கூடி­ய­ன­வாக இல்­லாமல் இருக்­கலாம். ஆனால்,  இந்த விடயப் பரப்­பு­க­ளினுள் அடங்­கி­யி­ருக்கும் விட­யங்கள் தீவி­ர­மா­னவை.
இலங்கை, இந்­தியா போன்ற நாடு­களில் உள்ள அர­சி­யல்­வா­திகள், பொது­வாக நாட்டை சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம் என்று தேர்­தலின் போது வாக்­கு­று­தி­களைக் கொடுப்­பது வழக்கம். அது வெறு­மனே பொரு­ளா­தாரச் செழிப்பை மாத்­தி­ரமே, அர்த்­தப்­ப­டுத்­து­கின்ற விடயம்.


1965ஆம் ஆண்டு சிங்­கப்பூர் சுதந்­திரம் பெற்­ற­போது, பொரு­ளா­தார ரீதியில் பின்­தங்­கிய நிலையில் தான் இருந்­தது. சிங்­கப்­பூரை வடி­வ­மைத்த சிற்பி என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் முன்னாள் பிர­தமர் லீ குவான் யூ, இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது, இலங்­கையைப் போல சிங்­கப்­பூரை மாற்­றுவோம் என்று கூறி­யி­ருந்தார்.
ஆனால், அதற்குப் பின்­ன­ரான 50 ஆண்டு சரித்­தி­ரத்தில், இலங்கை படு பாதா­ளத்­துக்குள் வீழ்ந்து விட்­டது.  சிங்­கப்பூர் எட்ட முடி­யாத உய­ரத்தை தொட்டு விட்­டது.


அரை நூற்­றாண்­டுக்குள் சிங்­கப்பூர் அடைந்­தி­ருக்­கின்ற வளர்ச்சி யாராலும் நினைத்துப் பார்க்க முடி­யா­தது. சிங்­கப்­பூரின் சிற்பி லீ குவான் யூ அறி­மு­கப்­ப­டுத்­திய, சுதந்­திர பொரு­ளா­தார கொள்­கையும் ஊழல் இல்­லாத முறை­மையும் அந்த நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணி­யாக உள்­ளன.
சிங்­கப்­பூரின் பொரு­ளா­தாரம் சுதந்­தி­ர­மான, மிகவும் புது­மை­யான, போட்­டித்­தன்மை வாய்ந்த, ஆற்­றல்­மிக்க, வணிக நட்பு வாய்ந்த ஒன்று எனக் கூறப்­ப­டு­கி­றது.


அவ்­வா­றா­ன­தொரு முன்­னு­தா­ர­ணத்தைப் பின்­பற்­று­வது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் இலக்­கு­களில் ஒன்­றாக தெரி­கி­றது.
அபி­வி­ருத்­தியின் மூலம், நாட்டின் பிரச்­சி­னைகள் அனைத்­தையும் தீர்த்து விடலாம் என்று அவர் கரு­து­கிறார்.
சிங்­கப்­பூ­ரிலும் கூட 1969இல் இன ரீதி­யான மோதல்கள் உரு­வெ­டுத்­தி­ருந்­தன. அதற்குப் பின்னர், லீ குவான் யூ  விரை­வான பொரு­ளா­தார வளர்ச்சி, வணி­கர்கள், தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்­கான ஆத­ரவு மற்றும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட உள்­ளக ஜன­நா­யகம் ஆகி­ய­வற்றின் மூலம், சிங்­கப்­பூரை முன்­னேற்றப் பாதைக்கு நகர்த்­தினார்.
அங்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சில கடு­மை­யான சமூக ஒழுங்கு கட்­டுப்­பா­டு­களும் ஊழலை ஒழிக்கும் நடை­மு­றை­களும் அந்த இலக்­கு­களை அடைய பெரிதும் உத­வி­யது. சிங்­கப்பூர் சுற்­றுலாப் பய­ணி­களின் சொர்க்­க­மாக இருப்­ப­தற்குக் காரணம், அதன் அழகு மாத்­திரம் அல்ல. சுத்­த­மான நக­ராக இருப்­பதும் தான்.


சிங்­கப்பூர் சுத்­த­மான நக­ராக இருப்­ப­தற்கு அங்­குள்ள இறுக்­க­மான சட்­டங்கள் தான் காரணம். அது­போல ஊழல்கள் குறை­வாக இருப்­பது, முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்க வைத்­தது. கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் சிங்­கப்­பூரின் முன்­மா­தி­ரி­க­ளையே பல விட­யங்­களில் பின்­பற்ற முனை­கி­றது. ஆளும்­கட்­சி­யினர் பலரும், கோத்­தா­பய ராஜபக் ஷவை இலங்­கையின் லீ குவான் யூ என்று கூற ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள்.


பொரு­ளா­தாரச் செழிப்­பினால், இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட எல்லா பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து விட முடியும் என்று நம்­பு­கின்ற ஒரு­வ­ராக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இருக்­கிறார்.
இரா­ணுவப் பின்­ன­ணியைக் கொண்ட அவர், இறுக்­க­மான ஒரு ஒழுக்க கட்­ட­மைப்­புக்குக் கீழ் தான், அவ்­வா­றான பொரு­ளா­தார வளர்ச்சி, அபி­வி­ருத்­தியை எட்ட முடியும் என்று நம்­பு­கிறார்.


அதற்­காக அவர், ஜன­நா­ய­கத்தில் கை வைப்­ப­தற்கும் தயா­ரா­கவே இருக்­கிறார். அதற்கும் அவர் சிங்­கப்­பூரின் அனு­ப­வங்­க­ளையும், வழி­மு­றை­க­ளையும் தான் நம்­பி­யி­ருக்­கிறார் என்­பதை, சிங்­கப்பூர் அமைச்சர் சண்­மு­கத்­துடன் நடத்­தி­யுள்ள பேச்­சுக்கள்,  மையக் கருத்­துக்­களை வைத்து உணர முடி­கி­றது.
சிங்­கப்பூர் உலகின் முன்­னணி நாடு­களில் ஒன்­றாக இருந்­தாலும், அது ஒரு வெஸ்ட் மினிஸ்டர் முறை  பாரா­ளு­மன்ற அமைப்பைக் கொண்­டி­ருந்­தாலும், ஜன­நா­யக நாடு என்று கூறப்­பட்­டாலும், அது முழு­மை­யான ஜன­நா­யக நாடு அல்ல என்­பதே உண்மை.


2018ஆம் ஆண்­டுக்­கான ஜன­நா­யக சுட்­டியில், (Democracy Index-– 2018) சிங்­கப்பூர், “குறை­பா­டுள்ள ஜன­நா­யகம்” (flawed democracy) கொண்ட நாடு என்று விப­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதற்குக் காரணம், அங்கு ஜன­நா­ய­கத்தின் முக்­கி­ய­மான பல அம்­சங்­க­ளாக கரு­தப்­படும் பேச்சு, ஊடக சுதந்­திரம், சிவில், அர­சியல் உரி­மைகள்  மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தே­யாகும்.
ஆர்.எஸ்.எவ் எனப்­படும் எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லாளர் அமைப்பு 2019இல் வெளி­யிட்ட ஊடக சுதந்­திரப் பட்­டி­யலில், 180 நாடு­களில் சிங்­கப்பூர், 151ஆவது இடத்தில் தான் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் இலங்கை 126ஆவது இடத்தில் இருக்­கி­றது.


சிங்­கப்­பூரின் அர­சி­ய­ல­மைப்பில் 14(1) பிரிவு, பேச்சு சுதந்­திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை, அதே அர­சி­ய­ல­மைப்பின் 2 ஆவது உப பிரி­வினால் வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
தகுதி மற்றும் நல்­லாட்­சிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும், வலு­வான கிட்­டத்­தட்ட சர்­வா­தி­கார அர­சாங்­க­மாகச் செயற்­படும், சிங்­கப்­பூரின் தனித்­து­வ­மான கலவை, "சிங்­கப்பூர் மாதிரி" என்று அழைக்­கப்­படு­கி­றது. இது சிங்­கப்­பூரின் அர­சியல் உறு­திப்­பாடு, பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் இணக்­க­மான சமூக ஒழுங்கு போன்­ற­வற்­றுக்­கான ஒரு முக்­கிய கார­ணி­யாக கரு­தப்­ப­டு­கி­றது. அதே பாணி­யி­லான ஒரு மாதி­ரியை இலங்­கையில் அறி­முகம் செய்யும் திட்டம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் இருக்­கி­றது.


இணையப் பாது­காப்பு, வெறுப்பு பேச்சு சட்­டங்கள், சமூக ஊடக புல­னாய்வு உள்­ளிட்ட விட­யங்­களை மையப்­ப­டுத்தி நடத்­தப்­பட்­டுள்ள பேச்­சுக்கள், சமூக ஊட­கங்கள் உள்­ளிட்ட ஊடக சுதந்­தி­ரத்தை மட்­டுப்­ப­டுத்­துதல் அல்­லது அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றைகள் குறித்த சிங்­கப்பூர் முன்­மா­தி­ரியை பின்­பற்ற தற்­போ­தைய அர­சாங்கம் தயா­ராகி வரு­கி­றதா என்ற சந்­தே­கத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றது.


மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பத­வி­யி­லி­ருந்த போது ஊடக சுதந்­திரம் மிக மோச­மான நிலையில் இருந்­தது. அப்­போது, ஆர்.எஸ்.எவ். ஊடக சுதந்­திர பட்­டி­யலில் சிங்­கப்­பூரை விட பின்னால் 165 ஆவது இடத்தில் இலங்கை இருந்­தது.
மீண்டும் சமூக ஊட­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது போன்ற செயற்­பா­டு­களில் அர­சாங்கம் இறங்­கினால், பழைய இடத்தை நோக்­கியே நகரும் ஆபத்து உள்­ளது.


ஜன­நா­யகம், நல்­லி­ணக்கம் போன்­ற­வற்­றுக்­காக நாட்டின் தேசிய பாது­காப்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை என்று பாது­காப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்ன கடந்த வாரம் குறிப்­பிட்­டி­ருந்தார்.
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, எள் என்றால் அதனை எண்­ணெ­யாக்கிக் கொடுக்கக் கூடி­யவர் அவர். அவரிடமிருந்து இவ்வாறான கருத்து வெளியாகியது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கது அல்ல.


தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்காக ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படுவதைப் பற்றி தற்போதைய அரசாங்கம் கவலைப்படக் கூடிய ஒன்று அல்ல. சிங்கப்பூரின் ஜனநாயகம் குறைபாடானதாக இருந்தபோதும், சர்வதேசம் அதனை முன்மாதிரியான ஒரு நாடாக பார்க்கிறது. ஏனென்றால், சட்டத்தின் ஆட்சி விடயத்தில் சிங்கப்பூர் முன்னுதாரணம் மிக்க நாடாக உள்ளது அதற்கு முக்கிய காரணம். 2019ஆம் ஆண்டின், உலக நீதி திட்டத்தின் சட்டஆட்சி பட்டியலில், உலகின் 126 நாடுகளில் சிங்கப்பூர் 13 ஆவது இடத்தில் இருக்கிறது.


ஆனால் இலங்கை 63 ஆவது இடத்தில் இருக்கிறது. சட்டத்தின் ஆட்சி இப்போது இன்னும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவது என்ற இலக்கு பொருளாதார அபிவிருத்தியை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கப் போவதில்லை. அது உரிமைகளை மட்டுப்படுத்துவதாகவும் தான் இருக்கும். பொருளாதார அபிவிருத்தியை செய்தால், இலங்கையும் சிங்கப்பூராக மாறிவிடும் என்று கருதக் கூடாது. சிங்கப்பூரைப் போலவே, சட்டத்தின் ஆட்சியும் இங்கு முக்கியமானது.  
- கார்வண்ணன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13