இலங்கைக்கு எதிரான போட்டியில் 90 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

Published By: Priyatharshan

20 Jan, 2020 | 02:56 PM
image

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ப்ளூம்பொன்டெய்ன் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 298 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த இந்தியா மிகவம் அவசியமான வெற்றியை சம்பாதித்துக்கொண்டது.

இந்தியா சார்பாக துடுப்பெடுத்தாடிய ஆறு வீரர்களும் திறமையை வெளிப்படுத்தியதுடன் அவர்களில் மூவர் அரைச் சதங்கள் குவித்ததுடன் இருவர் 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். அத்துடன் ஐந்து விக்கெட்களில் பகிரப்பட்ட அரைச்சத இணைப்பாட்டங்களும் இந்தியா கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற உதவியது.

ஆரம்ப விக்கெட்டில் திவ்யான்ஷ் சக்ஸெனாவும் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் 66 ஒட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் ஜய்ஸ்வாலும் திலக் வர்மாவும் 56 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் திலக் வர்மாவும் அணித் தலைவர் ப்ரியாம் கார்கும் 59 ஓட்டங்களையும் கார்கும் த்ருவ் ஜூரெலும் நான்காவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் ஜூரெலும் சித்தேஷ் வீரும் வீழ்த்தப்படாத 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் பகிர்ந்தமை இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.

இலங்கை பந்துவீச்சில் அறுவர் பயன்படுத்தப்பட்ட போதிலும் அஷேன் டெனியல் மாத்திரமே ஓரளவு திறமையாக பந்துவீசினார்.

இப் போட்டியின் அணித் தலைவர் நிப்புன் தனஞ்சய பந்துவீசாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மிகவும் கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக மூவர் மாத்திரமே 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஆரம்ப வீரர் நவோத் பரணவித்தான குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்தது. கமில் மிஷாரவும் ரவிந்து ரசன்தவும் இரண்டாவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் அதன் பின்னர் சிறந்த இணைப்பாட்டம் எதுவும் அமையவில்லை.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 148 ஒட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை கடைசி 7 விக்கெட்களை மேலதிக 59 ஓட்டங்களுக்கு இழந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

19 வயதின்கீழ் இந்தியா 50 ஓவர்களில் 297 - 4 விக். (ஜய்ஸ்வால் 59, கார்க் 56, ஜுரெல் 52 ஆ.இ., திலக் வர்மா 46, விர் 44 ஆ.இ., செக்ஸெனா 23, ஆஷென் டெனியல் 31 - 1 விக்.)

19 வயதின்கீழ் இலங்கை 45.2 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 207 (நிப்புன் தனஞ்சய 50, ரவிந்து ரசன்த 49, கமில் மிஷார 39, ஆகாஷ் சிங் 29 - 2 விக்., சித்தேஷ் வீர் 34 - 2 விக், ரவி பிஷ்னோய் 44 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21