நாங்கள் நன்றி மறக்காதவர்களாக ஒற்றுமையாக வாழவேண்டும் - இந்தியத் துணைத்தூதுவர் 

Published By: Digital Desk 4

20 Jan, 2020 | 02:51 PM
image

நாங்கள் அனைவரும் நன்றி மறக்காதவர்களாக ஒற்றுமையாக வாழவேண்டும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மகளிர் அணியின் பொங்கல் விழா நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுமையில்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்றியை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இதனைக் கொண்டாடுகின்றோம். பொங்கலாகட்டும் தீபாவளியாகட்டும் இவை இரண்டும் இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதைக் குறிக்கின்றது. தீபாவளியன்று தீபமேற்றி வெளிச்சத்தை உருவாக்குகின்றோம். பொங்கல் அன்று சூரியனை வணங்குகின்றோம்.

சூரியனுக்கு நன்றி கூறி இதனைச் செய்கின்றோம். மாட்டுப்பொங்கல் செய்கின்றோம் அனைத்து ஜீவராசிகளுக்காக வேண்டி இவற்றை செய்கின்றோம் இவ்வாறான பொங்கலானது நன்றி பாராட்டுவதற்காகவே இதனைச் செய்கின்றோம். திருவள்ளுவரும் திருக்குறளில் நன்றியைப் பற்றி கூறியுள்ளார்.

மகா பாரதம் சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பெண்களுகு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது நாங்களும் பெண்களை சமமாக மதிக்கவேண்டும் இன்றைய நாளில் இலங்கை தமிழரசுக்கட்சி மகளிர் அணி பொங்கல் விழாவை கொண்டாடுகின்றது இது பாராட்டப்படவேண்டும் இன்றைய நாளைப்போன்று அனைவரும் நன்றி மறக்காதவர்களாக ஒற்றுமையாக வாழவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53