தென்­கி­ழக்கில் மையம் கொள்ளும் சூறா­வளி

Published By: J.G.Stephan

20 Jan, 2020 | 02:40 PM
image

சுதந்­திரம் கிடைக்­கப்­பெற்ற நாளிலிருந்து இலங்­கையின் அர­சி­ய­லிலும் நாட்டு மக்­களின் ஒற்­றுமை மனோ­நி­லை­யிலும் மாற்­றங்கள் ஏற்­படத் தொடங்­கிற்று. இலங்கை மக்கள் என்று பொது­மைப்­ப­டுத்தி யோசிக்கப் பழக்­க­கப்­பட்­டி­ருந்த பிர­ஜை­க­ளி­டத்தே இன­ரீ­தி­யான சிந்­தனை ஒரு புற்­று­நோய்­போல கிளை­விட்டு மெல்லமெல்ல அதன்­பாட்­டுக்குப் பரவத் தொடங்­கிற்று. இதனை நமது பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலின் ஜன­நா­யக வழி­முறை நன்கு தூப­மிட்டு வளர்த்­தது.

அது இல­கு­வாக அதி­கா­ரத்தைக் கைய­கப்­ப­டுத்தும் நோக்­கத்­தையும்,கைப்­பற்­றிய அதி­கா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்தும் நோக்­கத்­தையும் பிர­தா­ன­மாகக் கொண்­ட­து மட்­டு­மன்றி, அதி­கார வேட்­கை­யுள்­ளோரின் ஒரு போர்க்­க­ரு­வி­யா­கவும் அது பயன்­பட்டு வந்­துள்­ளது. இதன் உச்­சக்­கட்டம் தலை­தூக்­கும்­போது சிறு­பான்மைத் தமி­ழர்­க­ளுக்­கான அத்­து­மீ­றலும் இன­வன்­மு­றையும் காலத்­துக்குக் காலம் ஏற்­பட்டு வந்­தது.

1983ஆம் ஆண்­டுக்குப் பின்­னர்தான் இலங்­கையின் புவி­யியல் வரை­படம் உலகின் பல­பா­கங்­க­ளுக்கும் தெரிய வந்­தது. அதற்­கான அடிப்­ப­டைக்­கா­ரணம் அவ்­வாண்டு இலங்கை முழு­வ­து­மாக தழிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற காலக்­க­றை­ ப­டிந்த ஜூலைக் கல­வ­ரம். 1958,1978, 1981ஆகிய காலக்­கட்­டங்­க­ளிலும் கூட தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும் சர்­வ­ தேசரீதி­யான முக்­கி­யத்­து­வத்தை அவை பெரு­ம­ள­வுக்குப் பெற­வில்லை.

1978, 1981 ஆகிய காலங்­களில் தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடந்­த­போது அதனை தங்கள் விடு­தலைப் பரீட்­சைக்­கான ஒரு பாடத்­திட்­ட­மா­கவே தமிழ்த்­த­லை­மைகள் எடுத்­துக்­கொண்­டன. அதற்கு வாய்ப்­பாக அப்­போது எதிர்க்­கட்சித் தலைமை என்ற சிம்­மா­ச­னத்தில் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்கம் என்ற தியா­க­தீபம் அமர்ந்­தி­ருந்தார். தனது காலக்­கட்­டத்தில் நிகழ்ந்த தன்­னு­டைய இனத்­துக்கு எதி­ரான வன்­மு­றை­கள்­பற்றி தனது பத­வி­யின்­மூலம் சர்­வ­தேச அளவில் ரா­ஜ­தந்­திரரீதி­யாக சாதிக்க முடிந்த அனைத்­தையும் அவர் முழு­மூச்­சுடன் செய்து முடித்­தி­ருந்தார்.

எதிர்க்­கட்சித் தலைமை எனும் அந்தப் பத­வியின் பின்­னா­லுள்ள அந்­தஸ்தின் உத­வி­யுடன் யாரின் கட்­டுப்­பாட்­டிலே உள்ள ஸ்விச்சை எந்த இடத்­தில்­வைத்துப் போட்டால் உல­கப்­ப­டத்தின் பல்­வேறு திக்­கு­க­ளிலும் பொருத்­தப்­பட்­டுள்ள விளக்­குகள் எரியத் தொடங்கும் என்­பதை அவர் அனு­ப­வப்­பா­ட­மாகக் கற்­றுக்­கொண்டார். அதன்­படி 1983இன் கல­வ­ரமும் தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராகப் பயங்­க­ர­மாக உரு­வெ­டுத்­த­போது,தான் ஏற்­க­னவே தன்­னு­டைய பத­விமூலம் அடை­யாளம் கண்­டி­ருந்த ஸ்விச்­சுக்­க­ளை­அ­முக்கி உலகின் பல பாகங்­க­ளுக்கும் அந்த நிலை­மையின் பயங்­க­ரத்தைப் பிர­க­டனம் செய்தார்.

அதனால் தமி­ழீ­ழத்தின் போரா­ளிகள் சர்­வ­தே­சத்தின் முழு­மொத்தக் கவ­ன­ஈர்ப்­பி­னையும் அனு­தா­பத்­தையும் பெற்­றுக்­கொண்­டனர். அத்­துடன் கல­வ­ரங்­களால் பாதிக்­கப்­பட்ட தமிழ்மக்கள் புலம்­பெ­யர்ந்து செல்­ல­வும்­சிவில் சமூ­கத்­தினர் தங்­களின் ஜீவ­ம­ர­ணப்­போ­ராட்­டத்­துக்கு ஒரு முடிவைப் பெற்­றுக்­கொள்­ளவும் அதன்­மூலம் வழி­யேற்­பட்­டது. புலம்­பெ­யர்ந்­து­போன மக்கள் மனோ உறு­தி­யுடன் பல்­வேறு திக்­கு­க­ளுக்கும் தமிழ்மக்­களின் விடு­தலைப் போராட்­டத்தைக் கொண்­டு­ சென்­றனர். இப்­பி­ரச்­சி­னைக்கு உள்ளே சர்­வ­தே­சத்தின் பச்­சா­தாபம் மென்மேலும் தூண்­டப்­பட்­டது.

இவை கல­வ­ரங்­களின் பின்னர் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அனு­கூ­ல­மான பக்க விளை­வு­க­ளே. அதே­வேளை,மீண்டும் ஒரு­முறை சிறு­பான்­மை­யி­னரின் கட்­சிகள் எதிர்க்­கட்சித் தலை­மையைப் பெற்­று­ வி­டக்­கூ­டாது என்­ப­து­நிச்­ச­ய­மாக நிக­ழத்­தக்க முறையில் பேரி­ன­வாதம் தனக்­கான ஆகச்­சி­றந்த தேர்­தல்­மு­றையை விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவம் எனும்­பெ­யரில் வகுத்­துக்­கொண்­டது.

அதே­வேளை பின்­வரும் அம்­சங்­க­ளும்­அதன் பிர­தி­கூ­லங்­க­ளாக அமைந்­து­விட்­டன. அவற்றின் மூலம் முழு­மொத்த இலங்கைச் சமூ­கமும் சொல்­லொணாத் துய­ரங்­க­ளுக்குள் சிக்­குண்­டது.

முதலில் தீராப்­ப­சி­யோடு மிகக்­க­வ­ன­மாக தருணம் பார்த்­தி­ருந்த சர்­வ­தேச ஆயுத அங்­காடி வியா­பா­ரி­களின் தரகு முத­லா­ளிகள் கவனம் இலங்­கையை நோக்கி சுழல்­மையம் கொண்­டது. இது­வரை மத்­தி­ய­ கி­ழக்­கிலும் கிழக்­கா­சி­யா­விலும் மையம்­கொண்­டி­ருந்த ஆயு­தபூ­ஜைக்கு ஆசை­யூட்டும் புரோ­கி­தர்கள் ஈழம்­நோக்கி தங்கள் பார்­வை­களைக் கூர்­மைப்­ப­டுத்­தினர். இதனால் போரா­ளி­க­ளுக்கு அவர்­களின் ஆற்­ற­லுக்கும் கொள்­வ­னவுச் சக்­திக்கும் (purchasing power) அள­வி­லான ஆயு­தங்கள் அந்தத் தர­கர்­களால் விநியோகம் செய்­யப்­பட்­டன. அத­னைப்­போல  அவர்­களை அழிப்­ப­தற்கு அத­னை­விட சக்தி வாய்ந்த ஆயு­தமும் கரு­வி­களும் அர­சுக்கு வழங்­கப்­பட்­டன.இதனை விநி­யோகம் செய்யும் சந்தை வச­தியை சர்­வ­தேச ஆயுத வியா­பா­ரத்தின் தரகு முத­லா­ளித்­துவம் மிகுந்த பரோ­ப­கா­ரத்­துடன் இலங்­கையின் சகல தரப்­பி­ன­ருக்கும் வஞ்­ச­க­மின்றி ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது. இதனால் ஆயுத தரகு முத­லா­ளிகள் மேற்­படி இரண்டு தரப்­பா­ருக்கும் பூஜைக்கு வேண்­டிய பவித்­தி­ர­மான பொரு­ளாக மாறி­விட்­டனர்.

இரண்­டா­வ­தாக,விடு­தலை இறை­யியல் என்ற தத்­து­வத்தின் கூர்­மை­யான பார்வை சில புவிசார் அர­சியல் (Geo Politics) எதிர்­பார்ப்புடன் இங்கு நிலை­கொண்­டது. அதன் மூலம் தெற்­கா­சி­யாவின் புவிசார் அர­சி­யலில் புதி­யதோர் ஒழுங்கை அது ஸ்தாபிக்க முயன்­றது. தமிழ் ஈழம் அமை­வதன் மூலம் அதற்­கான நிலப் ­ப­ரப்பைத் தெற்­கா­சி­யாவில் உரு­வாக்­கிக்­கொள்­ளலாம் என்­பது அவர்­களின் எதிர்­பார்ப்பு. அவர்­க­ளுக்கு பிறி­தொரு வகை­யான முக்­கி­யத்­துவம் இருந்­த­மையால் அவர்­களின் பிர­சன்­னத்­தையும் அடக்­கி­ வா­சிக்­க­வேண்­டிய அவ­சியம் உள்ளூர் அதி­கா­ரத்­துக்கு இருந்­தது. ஆனா­லும்­கூட, பிராந்­திய விஸ்­த­ரிப்­பு­வா­தத்தின் அடங்­காப்­ப­சி­யு­ட­னான எதிர்­வலுச் சம­நி­லைக்கு விடு­தலை இறை­யி­யலால் நீண்ட காலத்­துக்கு நின்­று பி­டிக்­க­ மு­டி­யா­மல்­போய்­விட்­டது. ஏனெனில் இந்­திய விஸ்­த­ரிப்பு வாதத்தின் இயங்­கி­யலின் பின்னால் செல்­வாக்குச் செலுத்­திய வேறோர் அணி­யினர் விடு­தலை இறை­யி­ய­லா­ளர்­களை மிகவும் கவ­ன­மாக கையாண்­டனர். அத­னால்தான் பிற்­கா­லத்தில் நோர்­வே­யால்­கூட இலங்­கையில் ஆழக்­கால் ­ப­திக்க முடி­ய­வில்லை.

மூன்­றா­வ­தாக ஏற்­பட்ட எதிர்­வினை, அகன்ற பாரதக் கன­வுடன் கூடிய இந்­திய விஸ்­த­ரிப்­பு­வாதம் ஈழத்தை நோக்கி வெளிப்­ப­டை­யா­கவே அக­லக்கால் பதிக்கத் தொடங்­கி­ய­மை. அதனால்,அகன்ற பாரதக் கன­வு­க­ளுக்கு எதி­ரான தெற்­கா­சிய மற்றும் கிழக்­கா­சிய சக்­தி­களும் மேற்­கத்­தைய சக்­தி­களும் அவர்­களின் ஆதார சுரு­தி­யான ஸியோ­னிஸ சாணக்­கி­யமும் தங்கள் பார்­வையின் சுழ­லி­டத்தை இலங்­கையை நோக்கி மூர்க்­க­மாக நகர்த்­தின. இதுதான் யுத்தம் முடிந்து ஒரு தசாப்­பதம் நிறை­வெய்­திய பின்­னர்­கூட இங்கு நிலை­கொண்டு வேர்­விட்­டுள்ள அபா­ய­ம். இதனால் ஈழப் போராட்­டத்தின் பிராந்­திய மற்றும் சர்­வ­தேச சக்­திகள் தென்­கி­ழக்­கி­லங்­கையில் மற்­றொரு சர்­வ­தேச வியா­தியைப் பெற்­றுக்­கொண்­டன.

அதா­வது ஈழப்­போ­ராட்­டத்தின் திசை­ய­றி க­ரு­விகள் அவர்­களைப் புதிய பாதைக்கு நகர்த்­திச்­செல்ல நிர்ப்­பந்­தித்­தன. சிறு­பான்­மையின் மற்­று­மொரு உப­இ­ன­மாக விசே­ட­மான தனித்­துவ அடை­யா­ளங்­க­ளுடன் காணப்­பட்ட மொழி­வழிச் சகோ­த­ரர்­க­ளான முஸ்­லிம்­க­ளையும் தழிழ்மக்­க­ளை­யும்­ பி­ரித்­தாளும் தந்­திரம் இச்­சந்­தர்ப்­பத்தில் வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­திக்­கப்­பட்­டது. அது மேற்­கத்­தைய ஸியோ­னி­ஸ­ஆ­யுத வியா­பா­ரத்தின் ஆசீர்­வா­தத்­தைப் ­பெற்­றுக்­கொள்­ள­ ஒ­ரு­பக்கம் பேரி­ன­வா­தத்­துக்கும்,மறு­பு­றத்தில் இந்­திய விஸ்­த­ரிப்­பு­வா­தத்தின் சகல அனு­ச­ர­ணை­க­ளை­யும்­பெற்­றுக்­கொள்­ள­ தத்­து­வார்த்த முதிர்ச்­சி­பெ­றாத (philosophically immature) போராளி ஒட்டுக் குழுக்­க­ளுக்கும் பெரிதும் பயன்­பட்­டது.

இத்த­கைய பின்­ன­ணியில், தமிழ் ஈழ விடு­த­லைப்­போ­ராட்­டத்தின் அனு­தா­பி­க­ளா­கவே முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தத்­துக்கு அப்­போது எடுத்­துக்­காட்­டப்­பட்­டனர். மறு­த­லை­யாக,பேரி­ன­வா­தத்தின் ஒற்­றர்­க­ளா­கவே வட­கி­ழக்கில் வாழ்ந்த முஸ்­லிம்கள் சர்­வ­தேச சக்­திகள் மூலமும் மற்றும் பிராந்­திய விஸ்­த­ரிப்­பு­வாத சக்­திகள் மூலமும் ஒட்­டு­மொத்த விடு­த­லைப்­போ­ரா­ளி­க­ளுக்கும்,எதி­ரி­க­ளாக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டனர். இந்த அனைத்து முயற்­சி­களும் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும்  கிழக்­கிலும் அது செறி­வுக்­குள்­ளான தென்­கி­ழக்­கிலும் ஸ்திர­மான புவி­யியல் இருப்­பை­அ­மைத்­துக்­கொண்­டன.

இந்த இரு­பக்க நெருக்­கு­வா­ரமும் முஸ்­லிம்கள் செறிந்­தி­ருந்த புவி­யியல் மையப்­புள்­ளியை நோக்கி நகர்ந்­து­வந்­தது. அதே­வேளை, தமி­ழீழ ஆயுதக் குழுக்­க­ளுடன் சங்­க­மித்­தி­ருந்த பல முஸ்லிம் இளை­ஞர்கள் வலு­வே­றாக எடுக்­கப்­பட்டு, பேரி­ன­வா­தத்தால் மட்­டு­மன்றி சர்­வ­தேச ஆயுத அங்­கா­டி­களின் தரகு முத­லா­ளி­க­ளாலும் எடுப்பார் கைப்­பிள்ளை நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர். இந்த அபா­ய­க­ர­மான சூழலிலிருந்து முஸ்லிம் சமூ­கத்­தையும் அதன் இளைய தலை­மு­றை­யையும் பாது­காக்­க­வேண்­டிய நிர்ப்­பந்­த­மா­ன­ நி­லை­மை­ முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களால் பெரிதும் உண­ரப்­பட்­டது.

கருத்­தியல் ரீதி­யாக இஸ்­லா­மிய தனித்­து­வத்­துடன் பக்­கு­வப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஆங்­கிலப் புல­மை­வாய்ந்த முஸ்லிம் புல­மைத்­துவ இளை­ஞர்­களின் தோள்­க­ளின்­ மீ­து­இ­ரு­பக்க நெருக்­கு­வா­ரத்தின் அழுத்தம் இயல்­பா­கவே வந்து விழுந்­தது­. ஏற்­க­னவே பேரி­ன­வா­தத்தின் நெருக்­கு­வார அர­சியல் ஆழத்தைப் புரிந்­து­கொண்ட எம்.எச்.எம். அஷ்ரஃப் என்ற சட்­டத்­த­ரணி இளை­ஞனும் அஹ­மட்­லெவ்வை என்ற காத்­தான்­கு­டி­யைச்­சேர்ந்த உள்ளூர் அர­சியல் தலை­வர்களும் இணைந்து 1980இல் முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் ஸ்தாப­னத்தைத் தோற்­று­வித்­தி­ருந்­தனர். 1983 ஜூலைக் ­க­ல­வ­ரத்தின் பின்னர் தோன்­றிய ஆயு­தம்­த­ரித்த பேரி­ன­வா­தத்தின் தோற்­றத்­தினால் அந்த ஸ்தாபனம் வீரியம் இழந்­த­போ­திலும் 1985இன் பின்னர் ஏற்­பட்ட புதிய அர­சியல் சூழ்­நி­லை­களின் அழுத்­தத்­தினால் புதிய வீரி­யத்­துடன் 1986இல் அது தலை­நி­மிர்ந்­தது.

காலத்தின் நிர்ப்­பந்­தத்தால் ஆயுத கலா­சா­ரத்தின் கெடு­பி­டிக்குள் செதுக்­கி­ எ­டுக்­கப்­பட்டு, ஆங்­கில அறிவும் புத்­திக்­கூர்­மையும் தீவி­ர­வாதப் போர்க்­குணம் இயல்­பா­கவே கலந்­தி­ருந்­த­, அ­தே­வேளை சூபிஸ, வாரப்­பா­டு­ மு­த­லிய பல்­ப­ரி­மாண ஆளு­மையைத் தன்­மை­களைத் தன்­ன­கத்­தே­ கொண்ட மற்­றொரு இளைய சக்­தி­யான சேஹு இஸ்­ஸதீன் என்ற சட்­டத்­த­ரணி இளை­ஞனின் பின்­னணி உந்­து­த­லுடன் அது மீளவும் பிர­கா­சிக்கத் தொடங்­கிற்று.அஷ்ரஃபும், சேஹு இஸ்­ஸ­தீனும் பிராந்­தி­ய­மொ­ழி­மூலம் கல்­வி­ கற்ற இளை­ஞர்­க­ளி­டையே (Vernacular Educated Youths)ஆதர்ஸம் மிக்க ஆளு­மை­க­ளாகத் திகழ்ந்த கார­ணத்­தால், ஆயு­தக்­க­வர்ச்­சி­யினால் அள்­ளுப்­பட்­டுப்­போன முஸ்லிம் இளை­ஞர்­க­ளும்­கூட ஓடி­வந்து தங்­க­ளுக்கு ஏற்­பட்ட நெருக்­க­டி­க­ளுக்கு ஒரு நிவா­ர­ண­மாக இவர்­க­ளைக்­க­ருதி முஸ்லிம் காங்­கி­ரஸை வலுப்­ப­டுத்­தினர்.முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­த­ரீ­தி­யான பரித்­தி­யாகம் பெரு­ம­ளவு தேவைப்­ப­டா­தி­ருந்த இக்­கட்­டத்தில் அஷ்ரஃப் என்ற புல­மைத்­து­வமிக்க இளை­ஞ­னிடம் முஸ்லிம் சமூ­கத்தின் சுக்கான் வந்து சேர்ந்­தது. அதனால் துப்­பாக்கி ஏந்­தாத ஒரு போராட்­டத்தை முஸ்லிம் இளை­ஞர்­க­ளி­டையே அவர் ஏற்­ப­டுத்­தினார். அந்­தக் ­கட்­டத்தில் விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­மாக எதிர்த்­த ­போ­திலும் அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்­துடன் அறி­மு­க­மான மாகா­ண­ச­பை­களின் தேர்­தல்­களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­கொண்­டது. அதிலும் வடக்குக் கிழக்கு மகா­ண­சபைத் தேர்­தலை முகங்­கொ­டுத்­தமை அன்­றைய பாது­காப்புக் கெடு­பி­டி­க­ளுக்­கி­டையே சந்­தித்த பாரி­ய­தொரு சவா­ல். இதனால் மும்­மு­னையில் இருந்து புறப்­படும் சவால்­களைச் சமா­ளிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் புதிய முஸ்லிம் அர­சியல் சக்­திக்கு ஏற்­பட்­டது.

அதி­கார வேட்­கை­கொண்ட பேரி­ன­வா­தத்­தையும், விடு­தலை வேட்­கை­கொண்டு ஆயு­தப் ­போ­ராட்­டத்தில் மும்­மு­ர­மாக ஈடு­படும் தமிழ்த் தீவி­ர­வா­தத்­தையும், அகன்­ற­ பா­ரத வேட்­கை­கொண்ட இந்­திய விஸ்­த­ரிப்­பு­வா­தத்தின் பயங்­க­ர­வாத ஒட்­டுக்­கு­ழுக்­க­ளையும் ஒரே நேரத்தில் முகங்­கொள்­ள­வேண்­டிய நிலை­மையே அது­வாக இருந்தது. வேறு வழி­யின்றி இந்த மும்­முனைப் போராட்­டத்தை அஷ்ரஃப் தலைமை தாங்­கினார்.

அவரின் புத்திக்கூர்­மையும் சாணக்­கி­ய­மான காய்­ந­கர்த்­தல்­களும் முஸ்­லிம் ­ச­முகம் கிழக்கில் தங்கள் பெரும்­பா­லான தாயது நிலங்­களில் கால்­களை மீளவும் ஸ்திர­மாக்க முடிந்­தது. என்­ற­போ­திலும் 1988இல் நிகழ்ந்த வடக்குக் கிழக்கு மாகா­ண­சபை, 1989இன் பாரா­ளு­மன்றம், 1994இல் நடந்த கிழக்கு மாகாண பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்தல் ஆகி­ய­வற்றில் இந்த முத்­த­ரப்பா­ரி­டமும் இருந்து அது எதிர்­கொண்ட சவால்­களும் இழப்­புக்­களும் கொடூ­ர­மான மனக்­கா­யங்­க­ளாகும்.

இந்தப் பின்­ன­ணியில் பல்­வேறு பேரி­ன­வாத அச்­சு­றுத்­தல்­க­ளையும், அது காலத்­துக்குக் காலம் தோற்­று­வித்த பிதே­ச­வாத பிராந்­தி­ய­வாத கெடு­பி­டி­க­ளையும்,பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளையும், நிறை­வேற்று அதி­காரம் தன்னைக் கூர்­பார்த்­துக்­கொள்ளும் கொடிய ஒருதலைப்­பட்­ச­மா­ன­ வன்­மு­றை­க­ளையும் நிலை­மா­றுங்­கால சது­ரங்க சகுனி விளை­யாட்­டுக்­க­ளையும் அஷ்ரஃபுக்குப் பின்னர் முஸ்­லிம்­களின் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­று­வந்த ரவூப் ஹக்கீம் முகங்­கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது.

புதிய நூற்­றாண்டு தொடக்கம் 2005 ஆண்­டு­வ­ரை­யான பாரா­ளு­மன்­றங்கள், உள்ளூர் அதி­கார சபைகள் முத­லிய பல்­வேறு தேர்­தல்­க­ளிலும் பல்­வேறு உயி­ரி­ழப்­புக்­க­ளையும் அஷ்ரஃபின் மர­ணத்­தோடு அவர் ஸ்தாபித்த அர­சியல் இயக்கம் கடந்­து­வந்­தி­ருக்­கின்­றது. அவர் உயி­ருடன் இருந்த காலத்­தி­லேயே அந்த இயக்­கத்தின் உயி­ரான உறுப்­பி­னர்­களைக் களையெடுக்கும் வேலைகளை நிறை­வேற்று அதி­காரம் நிகழ்த்­திக்­காட்டி இருக்­கின்­றது. அவர் மறைந்­ததன் பின்னர் பாரிய அளவில் தொடர்ச்­சி­யாக இருந்­து­வந்த நிறை­வேற்று அதி­கா­ரங்கள் அத்­த­கைய காவு­கொள்­ளல்­களை வகை தொகை­யின்றி நிகழ்த்­தி­யி­ருக்­கின்­றன. தேர்தல் காலங்­களில் முடிந்த அள­வுக்கு பிரச்­சி­னை­களைக் கொடுப்­பதும் அத­னையும் கடந்து வென்­று­வந்த உறுப்­பி­னர்­களைப் பல்­வேறு வகையில் அச்­சு­றுத்தி அவர்­களின் தனி­ம­னித பல­வீ­னங்ளில் தன் நிறை­வேற்று அதி­கார வாளைக் கூர்­பார்க்கும் நிறைய சந்­தர்ப்­பங்­க­ளையும் இக்­கட்­சியின் அடுத்த தலை­மையின் காலம் சந்­தித்­தி­ருக்­கின்­றது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போதும் முஸ்லிம் மக்­களின் ஐக்­கியம் பல்­வேறு வகை­களில் குறி­வைக்­கப்­பட்­டது பிர­பல­மா­ன­தே.

தற்­போது பேரி­ன­வாதம் ஓர் அறி­வி­யல்­ யுத்­தம்போல் நடத்தி முடித்­தி­ருக்கும் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் சிறு­பான்மைக் கட்­சிகள் உயிர்­வாழ்க்­கைக்கு மடிப்­பிச்சை கேட்டு கையேந்த வேண்­டிய ஒரு நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. அதன்­வெற்­றி­யின் ­பின்னர் பாரா­ளு­மன்­றத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மை­யுடன் கைப்­பற்­றுதல் என்ற கோஷத்தை முன்­வைத்து அதனை நோக்கி காய்­களை நகர்த்­திக்­கொண்டு வரு­கின்­றது வியத்­மக என்ற அறி­வார்ந்த அர­சியலமைப்பு.

பொது­வாக எல்லா தரப்­பிலும் உள்ள அர­சியல் நோக்­கர்­க­ளுக்குத் தெரியும் தற்­போ­துள்ள பாரா­ளு­மன்றத் தேர்தல் முறை­மூலம் கூட்­டணி அமைக்­காத ஓர் அர­சியல் பய­ணத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மையைப் பெறு­வது சிம்­ம­சொப்­பனம் என்­பது. ஆனால் நிறை­வேற்று அதி­காரம் தன்­னு­டைய உச்­ச­பட்ச சக்­தியைப் பாவித்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மையை இல­கு­வாகப் பெற்­றுக்­கொள்ளும் என்ற நம்­பிக்கை பாம­ரர்­க­ளி­டையே மட்­டு­மன்றி கல்­வி­ய­றி­வாளர்­க­ளி­டமும் காணப்­ப­டு­கின்­றது.

எனினும் இப்­போ­துள்ள அர­சியல் சூழலில் இவ்­வி­லக்கை நோக்கிப் பய­ணித்­தால்தான் அறுதிப் பெரும்­பான்­மை­யை­ யா­வது பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பதை வியத்­மகவாண்­மை­யா­ளர்கள் சரி­யாகக் கணிப்­பீடு செய்­தி­ருப்பர். அதனால் மூன்றில் இரண்டு பங்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வென்­றெ­டுத்தல் என்ற பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட இலக்கு அந்­த­ரங்­க­மாக அறு­திப்­பெ­ரும்­பான்மை என்­பதை நோக்கி நகர்­வ­தைத்தான் முதன்­மைப் ப­டுத்தும்.

அதனால் பின்­வரும் வேலைத்­திட்­டங்­களை திட்­ட­மிட்டு, அதன்­வ­ழியே அது முன்­னே­றிக்­கொண்டு வரு­கின்­றது. அந்த இலக்கு அடை­யப்­படும் பட்­சத்தில் மூன்றில் இரண்டு பங்கு இல்­லா­விட்­டாலும் அறு­திப்­பெ­ரும்­பான்மை இருந்­தால்­கூட உறு­தி­யான அரசு ஒன்றை வைத்து தாக்­காட்ட முடியும் என்­பது வியத்­ம­கவின் அர­சியல் வாண்­மை­யா­ளர்­க­ளுக்குத் தெரியும். முத­லா­வ­தாக,வடக்கில் இன்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் எதி­ர­ணி­களில் தீவி­ர­மான கருத்­துக்­க­ளைக்­கூறி மக்­களைக் கவ­ரக்­கூ­டி­ய­வர்­களைப் பலப்­ப­டுத்தல். இதன் மூலம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் மக்கள் குவிமை­யங்­களைச் சித­ற­டித்து அவர்­களின் பிர­தி­நி­தித்­துவ வாய்ப்­புக்­களை தங்­க­ளது கட்­டுப்­பாட்டின் கீழுள்ள கட்­சிகள் சிறி­த­ள­வுக்­கேனும் பெற்­றுக்­கொள்ள வழி­செய்தல்.

உதா­ர­ண­மாக விக்­னேஸ்­வரன் மற்றும் கஜேந்­திரகுமார் போன்­ற­வர்­களின் அணி­களை நோக்கி, மக்களை கூடு­த­லாகக் கவரக்­கூ­டிய எளி­தான சூழ்­நி­லைகள் அமை­யு­மாறு அரச கட்­ட­மைப்­புக்கு சமிக்ஞை கொடுத்தல். இதனால் கூட்­ட­மைப்பின் ஆத­ரவுக் குவி­யலைக் குறைத்து கூட்­ட­மைப்பின் எதி­ரி­களின் வாக்­கு­களை அதி­க­ரிக்­கும்­போ­து­,மீ­தி­வாக்­கு­களில் தங்கள் ஆத­ர­வுக்­கட்­சியின் உறுப்­பினர் தொகையைக் கூட்­டுதல். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை வடக்கில் எடுத்து தங்கள் அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்றில் அதி­க­ரித்தல்.

இரண்­டா­வ­தாக,கிழக்கில் வேறொரு வாய்ப்­பாடு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. கிழக்கில் கூட்­ட­மைப்­பின்  ஆத­ர­வுத்­த­ளத்­தாலும் புலிகள் அனு­தாப ஆத­ர­வுத்­த­ளத்­தாலும் முஸ்லிம் காங்­கி­ரசின் ஆத­ரவுத் தளத்­தாலும் தங்­களை வளப்­ப­டுத்­திக்­கொண்டு தற்­போ­தைய அரசை ஆத­ரிக்கும் நிலையில் பல தனி­ந­பர்கள் உள்­ளனர் அல்­லது தனி­ந­பர்சார் கட்­சிகள் உள்­ளன. இவர்கள் எல்­லோ­ரையும்  ஒரு­மு­கப்­ப­டுத்தி, ஆளும்­ கட்­சியின் வேட்­பா­ளர்­க­ளாகக் கள­மி­றக்­குதல். அதன்­மூலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மற்றும் முஸ்லிம் காங்­கிரஸ் ஆகி­ய­ன­வற்றின் ஆத­ரவுத் தளத்தில் பாரிய சரிவை உண்டு பண்ணி, குறித்த கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை கப­ளீ­காரம் செய்தல்.

கிழக்கை நோக்­கிய இந்த அர­சியல் சண்­ட­மா­ரு­தத்தை தென்­கி­ழக்கில் மையம்­கொள்­ளச்­செய்து அங்கு பாரியளவில் சேதத்தை உண்­டு­பண்­ணு­வதே அடுத்த முயற்­சி. இதற்கு வாய்ப்­பான பல நிலை­மைகள் தென்­கி­ழக்கில் ஏற்­க­னவே கருக்­கூட்­டி­யுள்­ளன. அதற்கு அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான துவேஷத்தை அள்ளி எறியும் வேலைத்திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னாள் பிரதி அமைச்சரும் புலிகளின் பெயரில் முஸ்லிம்களைக் கொத்துக்கொத்தாக அழித்தவருமான அம்மான் ஒருவர் வலுப்படுத்தப்பட்டுள்ளார். அவர் பொது பெரமுன சார்பில் திகாமடுல்ல தமிழ் வேட்பாளராக வருவதற்கான சாத் தியப்பாடுகளே அதிகம் காணப் படுகின்றன. ஏனெனில் அவர் தனது மாவட்டத்தைவிட தற்போதைக்கு தென்கிழக்கிலேயே அதிகம் நிலை கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத்தளத்தை உடைத்தெடுத்து ஏற்கனவே அம்பாறைத் தொகுதியில் நிலையான வைப்புப்போல் பெரமுனைக்கு இருக்கின்ற 96 ஆயிரம் சிங்கள மக்களின் வாக்குகளோடு சேர்த்து திகாமடுல்லவில் மூன்று பெரும்பான்மை இன உறுப்பினர் களைப் பெறுவதற்கு பேரினவாதம் கணக்குப்போட்டுள்ளது. கூட்டமைப்பின் தமிழ் வேட்பாளர்களும்கூட தங்கள் தலைமைகளின் அறிவுரையையும் கவனத்திற் கொள்ளாது துவேஷ கருத்துக்களையே தூவிவருகின்றனர். இதனால் யார் அதிகப்படியாக முஸ்லிம் களுக்கு எதிரான துவேஷத்தைக் கக்கி தமிழ்மக்களிடையே உணர்ச்சியை ஏற் படுத்தலாம் என்ற ஒரு போட்டி நிலையும் இங்கு காணப்படுகின்றது.

தென்கிழக்கின் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையிலும் பேரினவாதம் மற்றொரு அனுமானத்தை கொண்டுள்ளது. தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் கூட் டுப்பலவீனமாக புலனுக்குத் தெரிவது அப்பிராந்திய மக்களிடம் ஏற்கனவே தூண்டிவிடப்பட்ட பிரதேசவாதம். சென்ற பல தேர்தல்களிலும் ஊருக்கு எம்.பி. வேண்டும் என்ற கோஷத்தைக் குறிப்பாக சில ஊர்களின் மாவட்டமட்ட பலவீனமான வேட்பாளர்கள் தங்களின் ஊரைச்சேர்ந்த மக்களிடையே விதைத்து அதன்மூலம் வெற்றிவாகை சூடி அமைச்சரவையையும் அலங்கரித்துள்ளனர்.

தற்போது வேறுபல திசைகளிலும் வெவ் வேறு பல பெயர்களில் பிரதேசவாதம் வெற்றிகரமான தேர்தல் உபாயமாக இங்கு அண்மைக் காலங்களில் பரிணமித்துள்ளது. ஆகவே, தற்போதைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபரிமிதமான செல்வாக்கை உடைக்கும் பலமிக்க சக்தியாக இந்த  உபாயமும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

ஆக, பேரினவாதத்துக்கு ஆதரவான சமூகச்சூழலும் ஆட்சியாளர் தனித்தனியே தம்மை இலக்குப்படுத்தலாம் எனும் அச்ச உணர்வும் தென்கிழக்கில் குறிப் பாக மையம் கொண்டுள்ளது. இந்த சூறாவளிக்குத் தமிழ், முஸ்லிம் சமூகங் களின் உண்மையான சக்திகள் எவ்வளவு தூரம் நின்றுபிடிக்கப்போகின்றன என்பதே சமூக உணர்வுள்ள மக்களின் வினாவாக இருக்கின்றது.

- கங்கத்தியப்பா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்