தகைமைகள் குறைந்த குடியேற்ற தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டம்

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 12:22 PM
image

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து விலகி இரு தரப்­புக்­கு­மான உற­வுகள் குறித்து இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­பட்ட பின்னர் அந்­நாட்­டுக்கு வரு­வ­தற்கு விண்­ணப்­பிக்கும் குறைந்த தகை­மை­களைக் கொண்ட குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் புதிய கட்­டுப்­பா­டு­களை விதிக்க  பிரித்­தா­னிய  பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் திட்­ட­மிட்­டுள்­ள­தாக   பிரித்­தா­னிய டெலி­கிராப் ஊடகம் தெரி­விக்­கி­றது.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கி­ய­தற்குப் பின்­ன­ரான  இரு வருட காலங்­க­ளுக்குள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பான நிலைமை குறித்து  போரிஸ் ஜோன்­ஸனின் உத­வி­யா­ளர்­களால் திட்ட வரை­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  வர்த்­தகக் குழுக்­களின் கோரிக்­கைக்கு அமைய  தற்­போ­துள்ள சட்­ட­வி­தி­க­ளுக்கு 2023ஆம் ஆண்டுவரை  கால நீடிப்பு வழங்­கு­வ­தாக முன்னாள் பிர­தமர் தெரேஸா மே உறு­தி­ய­ளித்­தி­ருந்த நிலையில் அந்த நீடிப்பு  நீக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் மேற்­படி ஊடக செய்தி தெரி­விக்­கி­றது.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்­கான பிறிக்ஸிட் செயற்­கி­ர­மத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான காலக்­கெடு  இந்த மாதம் 31ஆம் திக­தி­யாகும்.

அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கும் பிரித்­தா­னி­யா­வுக்­கு­மி­டை­யி­லான   வர்த்­தக உற­வுகள் உள்­ள­டங்­கலாக அனைத்து இரு­த­ரப்பு உற­வு­களின் எதிர்­காலம்  தொடர்பில்  இறு­தி­யான தீர்­மா­ன­மெ­டுத்து   பிறிக்­ஸிட்டை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான காலத் தவணை  எதிர்­வரும்  டிசம்பர் 31 ஆம் திக­தி­யாகும்.

இந்­நி­லையில் அதி­கார கை மாற்ற காலத் தவணை  நிறை­வ­டைந்த முதல் நாளே  தகைமை குறைந்த  குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த போரிஸ் ஜோன்ஸன் எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நிறு­வ­னங்கள் குறைந்த தகை­மை­யு­டைய குடி­யேற்­ற­வாசி பணி­யா­ளர்­களை இந்த வருட இறு­தியில் கட்­டுப்­ப­டுத்த தயா­ராக வேண்­டி­யுள்­ளது என  பிரித்­தா­னிய பிர­த­மரின் அலு­வ­லகம் கூறு­கி­றது.

வர்த்­தகக் குழுக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு ஏற்ப  வர்த்­தக மற்றும் தகைமை குறைந்த  குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சட்டவிதி­களை மேலும் ஒரு வருட காலத்­திற்கு அல்­லது இரு வரு­டங்­க­ளுக்கு நீடிக்க பிரித்­தா­னியா  கோரும் என இது­வரை காலமும் எதிர்­பார்க்­கப்­பட்டு வந்­தது.

இந்­நி­லையில்  பிரித்­தா­னி­யாவின் எதிர்­கால குடி­வ­ரவு முறைமை தொடர்­பான ஆவ­ணத்தின் அங்­க­மாக குறைந்த தகை­மை­களைக்கொண்ட குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு  எதி­ராக கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்கும்  பிரே­ர­ணை­களை  பிரித்­தா­னிய உள்­துறை செய­லாளர் பிரீதி பட்டேல்  இந்த  வாரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

போரிஸ் ஜோன்ஸன் குடி­யேற்­ற­வாசிகள் தொடர்பில் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­ மு­றை­யி­லுள்ள புள்­ளி­யிடல் அடிப்­ப­டை­யி­லான  குடி­வ­ரவு முறைமையை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவர் தேர்தல் பிர­சார காலத்தில் பிரித்­தா­னி­யாவில் குறைந்த தகை­மை­களைக் கொண்ட  தொழி­லா­ளர்கள் தேவைப்­படும் துறை­களில் குறிப்­பி­டத்­தக்க பற்­றாக்­குறை அவ­தா­னிக்­கப்­ப­டாதவரை  அத்தகைய தகை­மை­களைக்கொண்ட குடி­யேற்­ற­வா­சிகள் பிரித்­தா­னி­யா­வுக்குள் வரு­வதைத் தடுக்க வழி­வகை செய்யும் திட்­ட­மொன்றை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கான பிறிக்ஸிட் செயற்கிரமம் முன்னெடுக்கப்பட இரு வாரங்களேயுள்ள நிலையில்  ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் கூடி  பிறிக்ஸிட் செயற் கிரமம் தொடர்பில் தீவிர பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து நேற்று  ஞாயிற்றுக்கிழமை வெளியான செய் திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47