மத நல்லிணக்கத்துக்காக 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி..!

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 11:53 AM
image

இந்தியாவில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் திண்டுக்கல் நாகல்நகா் ஜும்ஆ பள்ளிவாசலில் கந்தூரி விழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 18 ம் திகதி இரவு, மத நல்லிணக்கத்திற்காக உயிரிழந்தவா்களுக்காக மெளலது ஷரீப் என்னும் துஆ நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, மறுநாள் (19ம் திகதி) காலை, ரசூலுல்லா கந்தூரி விழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, சுமார் 2 ஆயிரம் கிலோ அரிசி, 300 கிலோ மட்டன் கொண்டு பிரியாணியும், 200 கிலோ தயிர் கொண்டு வெங்காய பச்சடியும் தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, நேற்று (19ம் திகதி) காலை 7 மணி முதல், மதியம் ஒரு மணி வரை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாகல்நகர், பாரதிபுரம், ரவுண்ட் ரோடு புதூர், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்கிச் சென்றனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாகல் நகா் பள்ளிவாசல் தலைவா் பி.அகமது புகாரி, செயலா் ஏ.கே.அலாவுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13