எதிர்க்கட்சியாக செயற்படும் தகைமையை ஐ.தே.க இழந்துள்ளது : காமினி லொகுகே  

Published By: R. Kalaichelvan

19 Jan, 2020 | 06:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொகுககே தெரிவித்தார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க் கட்சியாக செயற்படும் தகைமை       ஐக்கிய தேசிய கட்சியை  காட்டிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு  (ஜே. வி. பி) உள்ளது என கிராமிய அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர்  காமினி லொகுகே தெரிவித்தார்.   

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை  பிரகடனத்திற்கு அமையவே இடைக்கால அரசாங்கம் செயற்படுகின்றது. நிறைவடைந்துள்ள இரண்டு மாத காலத்திற்குள் அரசாங்கம்  மக்களின் நன்மிப்பினை பெற்றுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின்  செயற்பாடுகளை குறிப்பிட வேண்டும். அரச சேவை வினைததிறனாக காணப்படும் பட்சத்தில் மக்கள்  தனியார் துறைகளின் தேவையினை  நாடமாட்டார்கள். என்ற கொள்கையினை விரிவுப்படுத்தி அரச சேவைகள் தற்போது செயற்படுகின்றன.

அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படுவதற்கு எதிர்க்கட்சியின்  பங்களிப்பு இன்றியமையாதது. அரசாங்கத்தின் குறைப்பாடுகள்  தொடர்ந்து எதிர்க்கட்சியால் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அவ்வாறான நிலைமையில் அரசாங்கம் கவனமாக  அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள செயற்படும். 

ஆட்சி மாற்றத்திற்கும், அரசாங்கத்தின்  பிரதான தீர்மானங்களை மாற்றியமைக்கவும் எதிர்க்கட்சி  செல்வாக்கு செலுத்தும்.

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்க்கட்சியினர் பதவியில் இருந்துக் கொண்டு தொடர்ந்து  விமர்சித்தோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் செய்ய அரசாங்கம்முனையும் போது அவை மக்களுக்கு  பகிரங்கப்படுத்தி தடை  செய்யப்பட்டுள்ளன.

சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட்ட திருத்தி முன்னாள் எதிர்கட்சி தலைவர் பதவி வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளட ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உண்டு.

பாராளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்று உள்ளதா என்ற  சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிக்கும்  தகுதி எதிர்க்கட்சி பதவி வகிக்கும்  ஐக்கிய தேசிய கட்சியை காட்டிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு உண்டு என்பதை அரசியல் காரணிகளை விடுத்து குறிப்பிட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியினர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை  கொடுக்கவில்லை. பதவிகளுக்கும், அரச வரபிரசாதங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கின்றார்கள் என்பதை நாட்டு மக்கள் ஐக்கியதேசிய கட்சியின் தலைமைத்துவ முரண்பாடுகளை கொண்டு அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

ஆளும் தரப்பினரால்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04