ஸ்மித்தின் சதத்துடன் 286 ஓட்டங்களை குவித்த ஆஸி.

Published By: Vishnu

19 Jan, 2020 | 05:17 PM
image

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்தின் அதிரடியான சதத்துடன் அவுஸ்திரேலிய அணி 286 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியஅணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருக்க தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்றைய தினம் பெங்களூரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோர்னர் 3 ஓட்டத்துடனும், ஆரோன் பிஞ்ச் 19 ஓட்டங்களையும், லபுசன்கி 54 ஓட்டங்களையும், மிட்செல் ஸ்டாக் டக்கவுட்டுடனும், அலெக்ஸ் கரி 35 ஓட்டங்களுடனும், அஷ்டன் டர்னர் 4 ஓட்டங்களுடனும் கடந்த போட்டியைப் போன்று இப் போட்டியிலும் அதிரடியாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 132 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 131 ஓட்டங்களுடனும், பேட் கம்மின்ஸ் டக்கவுட்டுடனும் அடம் ஷாம்பா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அஷ்டன் அகர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஹேசல்வூட் ஒரு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுக்களையும் ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும், ஷைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20